Lifestyle

அஜீத்தைத் ‘துரத்தும்’ அரசியல்…அரசியலில் ரஜினி,கமலை விட ‘விஜய்க்கு’ மவுசு அதிகம்!

Manjula Sadaiyan  |  Mar 15, 2019
அஜீத்தைத் ‘துரத்தும்’ அரசியல்…அரசியலில் ரஜினி,கமலை விட ‘விஜய்க்கு’ மவுசு அதிகம்!

தல அஜீத் 

எந்தவொரு பொது நிகழ்ச்சிகள், பட விழாக்கள், ப்ரோமோஷன்கள், பேட்டிகள் என எதிலும் தலைகாட்ட மாட்டேன் என சொல்லி அதனை தொடர்ந்து பின்பற்றியும் வருகிறார் அஜீத்(Ajith). தமிழ்நாட்டின் ‘தல’, தன்னம்பிக்கை நாயகன் என அவரது ரசிகர்கள் அஜீத்தை தங்களது ரோல்மாடலாக பாவித்து வருகின்றனர். ரசிகர்களுக்கு ஏற்றாற்போல உழைப்பாளர் தினமான மே 1 அன்று அவரது பிறந்தநாள் வருவதால் அதனையும் திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து விடுவர்.

திரையில் மட்டுமே அவரைப்பார்க்கும் வாய்ப்பு என்பதால் அவரது படங்கள் வெளியாகும் தினமன்று திரையரங்குகள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டிருக்கும். பேனர்கள், போஸ்டர்கள், அன்னதானம், செடிகள் பரிசளிப்பு என தல மீதான தங்களது பாசத்தை ரசிகர்கள் பல்வேறு விதங்களிலும் வெளிப்படுத்துவர்.சமீபத்தில் அஜீத்(Ajith) ரசிகர்கள் பாஜக கட்சியில் சேர்ந்ததாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து தான் எந்தக்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன். எனது பெயரையோ, படங்களையோ எந்தவித அரசியல் நிகழ்வுகளிலும் பயன்படுத்தக்கூடாது என அஜீத்(Ajith) அறிக்கை விட்டார். அவரின் இந்த வெளிப்படையான அறிக்கையை பலரும் பாராட்டினர்.

இந்தநிலையில் நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத்(Ajith) நடிக்கும் அடுத்த படம் அரசியல் படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலை மையமாகக்கொண்டு செல்வராகவனின் என்ஜிகே படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். முழுநீள அரசியல் படமாக இது உருவாகியுள்ளது. இதேபோல வினோத் இயக்கும் படம் இருக்கக்கூடும் என்கிறார்கள். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் ஹெச்.வினோத்தின் டீட்டெயிலிங் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது. அந்தவரிசையில் இப்படமும் இருக்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

அஜீத் அரசியலை விட்டாலும் அரசியல் அஜீத்தை விடாது போல!

தளபதி விஜய்(Vijay)

தலயைப் பற்றி பேசிவிட்டு தளபதி பற்றி பேசாமல் போக முடியுமா? அவரைப்பற்றிய ஒரு அரசியல் செய்தியையும் பார்க்கலாம். அரசியலைப் பொறுத்தவரை கட்சி தொடங்கி விட்ட கமல், தொடங்கப்போவதாக சொல்லும் ரஜினி அகியோரை விட விஜய்க்கு(Vijay) செல்வாக்கு அதிகம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார் தேர்தல் வியூக வல்லுநர் ஜான் ஆரோக்கியசாமி. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணியை வித்தியாசமாக பிராண்டிங் செய்தவர், கர்நாடகத் தேர்தலில் குமாரசாமி வெற்றிபெற முக்கியக் காரணமாக அமைந்தவர், சிவசேனா உள்ளிட்ட பலருக்காக பணியாற்றியவர் ஜான் ஆரோக்கியசாமி.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டியொன்றில், ”சாதி, மதச்சார்பற்றவர்களின் வாக்குகள் மட்டுமே கமல், ரஜினிக்கான பலமாக இருக்கும். சொல்லப்போனால் அவர்கள் இருவரையும்விட, நடிகர் விஜய்யின்(Vijay) மாஸ் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித் அரசியலில் ஆர்வமில்லை என்று அறிவித்ததால், அவரின் ரசிகர்கள் தேர்தல் போட்டியில் ஒதுங்கிவிட்டதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்,” என நிலைமையைப் பளிச்சென்று தெரிவித்திருக்கிறார்.

விஜய்(Vijay) அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் பெரிதும் அவரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழலில் இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலை அளித்துள்ளது. இதனால் கூடிய விரைவில் விஜய்(Vijay) அரசியலுக்கு வரக்கூடும் என்ற எண்ணமும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சமீபகாலமாக மெர்சல், சர்கார் என தனது படங்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களை விஜய்(Vijay) துணிச்சலாக பேச ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாங்கண்ணா வணக்கங்கண்ணா!

ராஷ்மிகா மந்தனா

ஒருவழியாக தமிழுக்கு வந்தேவிட்டார் ‘இங்கேம் இங்கேம்’ புகழ் ராஷ்மிகா மந்தனா. கார்த்தியின் பெயரிடப்படாத புதிய படத்தில் ராஷ்மிகா கார்த்தி ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் இப்படத்தை வழக்கம் போல டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்தாண்டு வெளியாகி தெலுங்கில் மாபெரும் ஹிட்டடித்த கீதா கோவிந்தம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரவுடி விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் இணைந்து டியர் காம்ரேட் என்னும் படத்தில் ராஷ்மிகா நடித்து வருகிறார். தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா நடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படத்தில் நயன்தாராவை படக்குழு ஒப்பந்தம் செய்தது. எனினும் விஜய்யுடன் கண்டிப்பாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் ராஷ்மிகா.

நம்பிக்கை அதானே எல்லாம்!

கேஜிஎஃப் பார்ட் 2

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி வெளியான படம் ‘கேஜிஎஃப்’. கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்தப் படம் வெளியானது. 5 மொழிகளிலும் பாரபட்சம் இல்லாமல் ரசிகர்களைக் கவர்ந்தது. கன்னடம் அளவுக்கு தமிழிலும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் ஹீரோ யாஷ் மற்றும் படம் குறித்த பேச்சாகவே இருந்தது.

இந்நிலையில், ‘கேஜிஎஃப்’ படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனைப்பார்த்த ரசிகர்கள் இதையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் ஆக்ஷன் சீன்களின் மாஸான தொகுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தன்னானே னானே தானானா…

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Lifestyle