Lifestyle

தீராத அமானுஷ்ய சிக்கல்களை எல்லாம் தீர்த்து வைக்கும் ஒரே ஈசன் !

Deepa Lakshmi  |  Dec 11, 2019
தீராத அமானுஷ்ய சிக்கல்களை எல்லாம் தீர்த்து வைக்கும் ஒரே ஈசன் !

பலர் எத்தனை கோயில் சென்றாலும் செய்வினை பில்லி சூனிய அமானுஷ்ய சாபங்களில் இருந்து நிவர்த்தி பெற முடியாமல் தவிப்பார்கள். உக்கிர தெய்வங்களை வணங்கியும்கூட நிழல் போல தொடரும் சூன்ய சாபங்களில் இருந்து உங்களை மீட்க ஒரே ஒரு ஈசன் மட்டுமே உதவி செய்கிறார். உலகிலேயே இவர் ஒருவர்தான் இதற்கான கடவுளாக பார்க்கப்படுகிறார்.

கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே இருக்கும் மஞ்சுநாதர் தான் அந்த ஈசன். தெட்சிணா கன்னடா மாவட்டத்தில் பெல்தங்கடி தாலுகாவில் அமைந்த மஞ்சுநாதர் திருக்கோயில் தர்மஸ்தலா (dharmasthala) எனவும் அழைக்கப்படுகிறது. இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.                                           

வெள்ளிக்கிழமை சகல ஐஸ்வர்யங்களும் உங்கள் வீடு தேடி வர இந்த முறையில் விளக்கேற்றுங்கள் !                                            

Youtube

பில்லி சூன்யத்தால் மனநல பாதிப்புக்கு ஆளானவர்கள் ,பில்லி சூன்யம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், துர்மரண ஆத்மாக்கள் உடலில் இறங்கியவர்கள் இவர்கள் எல்லாம் இந்த கோவிலில் வந்து ஒரு வாரம் தங்கியிருந்து ஈசனை வழிபட்டு சென்றால் அவர்கள் பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்பது இங்குள்ள நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

இந்தக் கோயிலுக்கு ஏன் தர்மஸ்தலா என்று பெயர் வந்தது என்றால் தர்மதேவதைகளின் இருப்பிடமாக இந்த இடம் முன்னொரு காலத்தில் இருந்து வந்திருக்கிறது. பல நூறு வருடங்களுக்கு முன்னர் இந்த இடம் குடுமபுரம் என அழைக்கப்பட்டது. இந்த இடத்துக்கு தலைவர் பராமண்ணா ஹெக்கடே என்பவர் ஆவார்.             

நம் வம்சத்தை செழிக்க செய்யும் அண்ணாமலை தீபம் ! சிறப்புகளும் பலன்களும் !                                          

Youtube

இவரை சோதிக்க எண்ணிய தர்மதேவதைகள் இவரது இருப்பிடத்துக்கு மாறுவேடத்தில் வந்து குடிக்க நீர் கேட்டனர். அவர் கொடுத்திருக்கிறார். அதன்பின்னர் நாங்கள் இங்கேயே தங்கிக்கொள்கிறோம் நீங்கள் தங்க வேறு இடம் பாருங்கள் என்று மாறுவேடத்தில் இருந்த தர்ம தேவதைகள் கூறி இருக்கின்றனர். உடனே பராமண்ணா அவர்தம் குடும்பத்தினரும் மூட்டைகளை எடுத்துக்கொண்டு வெளியேற தொடங்கினர்.

அதன்பின்னர் தர்மதேவதைகள் தங்களது சுயரூபத்தில் காட்சி தந்து ஈசன் ஆணைப்படியே உங்களை சோதனை செய்ய வந்தோம். ஈசனைக் கொண்டாட தாங்களும் தங்கள் வம்சத்தாருமே சரியான நபர்கள். வரும் காலங்களில் இங்கே ஈசனுக்கு ஒரு ஆலயம் எழுப்பி அதனை நன்கு நிர்வாகம் செய்ய வேண்டும். மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.  

Youtube

தர்மதேவதைகளின் வேண்டுகோளுக்கிணங்க பராமண்ணா ஹெக்கடே வம்சத்தார் பிற்காலத்தில் தர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் சிலையையும், கன்னியாகுமரி அம்மன் சிலையையும், தரும தேவதைகளின் சிலையையும் நிறுவி பிரம்மாண்ட கோவில் கட்டி நிறுவி, அச்சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்து வருகின்றனர்.

அதைப்போலவே தர்மஸ்தலா வரும் பக்தர்கள் தரும் காணிக்கையை கொண்டு பொதுமக்களுக்கு நல்ல காரியங்களும் செய்ய வேண்டும் எனவும் தர்ம தேவதைகள் கூறியுள்ளனர். அதனால் பராமண்ணா பரம்பரையில் தற்போது வரை அந்த காரியத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

குடும்பத்தில் நன்றாக இருந்த இளைய தலைமுறையினர் நோய்வாய்ப்படுவது அல்லது ஆரோக்கியமான பெரியவர்களுக்கு அடிக்கடி மனசங்கடம் எழுவது இடைவிடாத பிரச்னைகள் குடும்பத்துக்குள்ளேயே வெறுப்பு பாராட்டிக் கொள்தல், வீண்வாக்குவாதங்களில் ஈடுபடுதல் போன்றவைகள் இருந்தால் ஒருமுறை தர்மஸ்தலா சென்று 7 நாட்கள் தங்கி வாருங்கள். மஞ்சுநாதர் அருளால் தீராத செய்வினைகளும் நீர்த்துப் போகும்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Lifestyle