
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி, ஆசிரியர் தினம் (teachers day) கொண்டாடப்படுகிறது. மாதா, பிதா வரிசையில் மூன்றாவது இடம்பெற்றுள்ள நபர்கள் குரு. நமக்கு இந்த உலகை கற்பிக்கும் ஆசான். மாணவர்களின் அறிவைத் தூண்டி, மதிப்பு மிக்க எண்ணங்களை வளர்த்து, வருங்கால சமுதாயத்திற்கு ஊன்றுகோலாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர். அப்படிப்பட்டவர்களை நாம் கொண்டாட வேண்டியது அவசியம் தான்.
pixabay
ஆசிரியர் பணியை புனித பணியாக கருதி பிற ஆசிரியர்களுக்கு முன் உதாரணமாக விளங்கியவர் நம் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன். மாபெரும் தத்துவ மேதையாக விளங்கிய இவரை கவுரவப்படுத்தும் வகையில் கடந்த 1962ம் ஆண்டு முதல் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினமாக கொண்டாடி வருகிறோம்.
பேரழகு மின்னும் பளிங்கு முகம் வேண்டுமா? மங்கு ,கரும்புள்ளிகளை நீக்கும் குங்குமாதி தைலம் !
இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவர் மற்றும் இரண்டாவது குடியரசுத் தலைவராக பணியாற்றிய சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த இந்திய அறிஞர்களுள் ஒருவராக திகழ்ந்தார். திருத்தணி அருகே சர்வபள்ளி என்ற இடத்தில் 1888ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி ராதாகிருஷ்ணன் பிறந்தார்.
கல்விக்காக தம்மை அற்பணித்த ஒப்பிலா ஆசானாக திகழ்ந்த ராதாகிருஷ்ணனுக்கு 1954ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. நடுத்தர குடும்பத்தில் பிறந்த ராதாகிருஷ்ணன் சென்னை கிறித்தவ கல்லூரியில் தத்துவத்தை முதற்பாடமாக கொண்டு முதுநிலை பட்டம் பெற்றார். சென்னை பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியாற்றினார்.
கேரளாவில் களைகட்டும் ஓணம் பண்டிகையின் வரலாறு மற்றும் கொண்டாடும் விதம்!
இந்து மத இலக்கியங்கள், மேற்கந்திய சிந்தனைகளையும் கற்றுத் தேர்ந்தவர். 1918ம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராக தேர்வானார். 1923ம் ஆண்டு ”இந்தியத் தத்துவம்” என்ற படைப்பை வெளியிட்டார். இந்த புத்தகம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகின் பல்வேறு மேடைகளில் மகத்தான சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.
pixabay
1931ம் ஆண்டு ஆந்திர பல்கலைக்கழக துணைவேந்தர், 1939ல் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக துணைவேந்தர், 1946ல் யுனெஸ்கோ தூதுவராக நியமிக்கப்பட்டார். நாடு சுதந்திர அடைந்த பின், 1948ம் ஆண்டு பல்கலைக்கழக கல்வி ஆணையத் தலைவரானார். அதன்மூலம் கல்வித்துறைக்கு சிறப்பான பங்காற்றினார். 1962 முதல் 1967ம் ஆண்டு வரை நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
27 முறை நோபல் பரிசுக்காகவும், 16 முறை இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்காகவும், 11 முறை அமைதிக்கான நோபல் பரிசுக்காகவும் ராதாகிருஷ்ணன் பரிந்துரைக்கப்பட்டார். இத்தகைய சிறப்புகள் வாய்ந்தவரை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளை நாம் ஆசிரியர் தினமாக (teachers day) கொண்டாடி வருகின்றோம். இன்றைய தினம் அனைத்து பள்ளிகளிலும் கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
கூகுள் அனிமேஷன்
ஆசிரியர்கள் தினத்தை (teachers day) சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் அனிமேஷன் டூடுல் வெளியிட்டுள்ளது. ஆண்டின் அனைத்து நாட்களிலும் அந்தந்த நாளின் சிறப்பை உணர்த்த உலகம் முழுவதும் பல்வேறு பிரபலங்களையும், பல்வேறு தினங்களையும் கவுரவிக்கும் வகையில் கூகுள் தேடுபொறி தளம் தனது முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று ஆசிரியர்கள் தினத்தை போற்றும் வகையில் வெளியிட்டுள்ள டூடுல் அனிமேஷன் காட்சியில் ஆக்டோபஸ் என்ற கடல்வாழ் உயிரினம் மீன்களுக்கு கணிதம், வேதியல் போன்ற பல்வேறு பாடங்களைக் கற்பிப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. கண்கவர் வண்ணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சத்குருவின் நதிகளை மீட்கும் திட்டத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு !மேலும் சில பிரபலங்கள் இணைந்தனர்
ஆசிரியர்கள் தினம் – தலைவர்கள் வாழ்த்து
ஆசிரியர்கள் தினத்தை ஒட்டி பல்வேறு தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்துவதுடன், ஆசிரியர் மற்றும் வழிகாட்டிகளை இந்தியா போற்றுகிறது – பிரதமர் மோடி.
நாட்டின் அறியாமையையும், வறுமையையும் ஒழிக்கக் கூடிய ஒரே கருவி கல்வி. மாணவர்களிடம் அன்பையும், அரவணைப்பையும் காட்டி ஆசிரியர் பணிக்கு மிகப்பெரிய பெருமையை தேடி தந்துள்ளனர் – தமிழக முதல்வர் பழனிசாமி.
ஒருநாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். விவசாயிகள் முதல் பொறியாளர்கள் வரை அனைவரையும் உருவாக்கித் தந்தவர்கள் ஆசிரியர்கள் தான். அனைத்து தரப்பினரையும் ஏற்றி விட்டு, அதே இடத்தில் இருக்கும் ஏணியாக இருக்கின்றனர் – அன்புமணி ராமதாஸ்.
தேசத்தின் கட்டமைப்பில் பெரும்பங்காற்றும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துகள் – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்கள் கூறி உள்ளனர்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi