Food & Nightlife

மனக்கும் பாரம்பரிய மீன் குழம்பு செய்வது எப்படி?

Mohana Priya  |  Apr 26, 2019
மனக்கும் பாரம்பரிய மீன் குழம்பு செய்வது எப்படி?

மீனை(fish) பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். அனைவருக்கும் மீன்(fish) குழம்பு என்பது ஒரு பேவரைட் டிஸ். செட்டிநாடு ஸ்டைல் உணவுகளுக்கு தனி பிரியர்களே உள்ளார்கள். ஏனெனில் செட்டிநாடு ஸ்டைல் உணவானது அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும். அதிலும் செட்டிநாடு ஸ்டைல் மீன் குழம்பு என்று சொன்னாலே பலரது நா ஊறும். அந்த அளவில் மீன்(fish) குழம்பானது சுவையாக இருக்கும். புளிப்பு கொஞ்சம் தூக்கலாக காரம் இதமாக வைத்து உப்பு சரியான அளவு வைத்து சமைத்து சாப்பிட்டால் அதன் ருசியே தனி. இந்த விடுமுறையில் இதை கட்டாயம் டிரை பண்ணி பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

வஞ்சிர மீன்(fish) – 8
துண்டுகள் புளி – 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…
துருவிய தேங்காய் – 1/4
கப் சோம்பு – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 2 டீஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு…
எண்ணெய் – 1 டீஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1/2 (நறுக்கியது)
சின்ன வெங்காயம் – 6 தாளிப்பதற்கு…
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 5 பல்
தக்காளி – 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் மீனை(fish) நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, அதில் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வதக்கி அரைக்க கொடுத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு, அத்துடன் வதக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் புளியை 1/2 மணிநேரம் ஊற வைத்து, 1/4 கப் சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.


பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பின் அதில் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அதில் தக்காளியைப் போட்டு, பச்சை வாசனை போக நன்கு வதக்கி விட வேண்டும்.

பின் அத்துடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 20 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, பின் புளிச்சாறு சேர்த்து கொதிக்க விட வேண்டும். எப்போது குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரிகிறதோ, அப்போது மீன் துண்டுகளை சேர்த்து மீன் நன்கு வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவி 1 மணிநேரம் கழித்து பரிமாறினால், செட்டிநாடு மீன் குழம்பு ரெடி.

இனி யாரும் விட மாட்டார்கள். கட்டாயம் திரும்ப திரும்ப கேட்டு சாப்பிடுவார்கள். இனி நீங்கள் தான் பெஸ்ட். மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள் அனைவருக்கும் பரிமாறுங்கள்.

பீரியட்ஸ்சின் போது உடலுறவு சரியா? பெண்கள் என்ன சொல்கிறார்கள்!

சண்டைக்கு பிறகு கணவன் மனைவி சமாதானம் ஆவது எப்படி?

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா? விரட்ட எளிமையான வழிகள்

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Food & Nightlife