Lifestyle

நம் வாழ்வின் மதிப்புமிக்க ஆயுள்காலத்தை நாம் இழந்து வருகிறோம் – உச்சநீதிமன்றம்

Deepa Lakshmi  |  Nov 4, 2019
நம் வாழ்வின் மதிப்புமிக்க ஆயுள்காலத்தை நாம் இழந்து வருகிறோம் – உச்சநீதிமன்றம்

ஒவ்வொரு வருடமும் டெல்லி மக்கள் மூச்சு திணறிக் கொண்டிருக்கிறார்கள். நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம். ஒவ்வொரு வருடமும் 10 முதல் 15 நாட்கள் இது நடந்தபடியே இருக்கிறது. ஒரு நாகரிக நாட்டில் இதனை அனுமதிக்க முடியாது என டெல்லி காற்றுமாசுபாடு பற்றி உச்ச நீதிமன்றம் (supreme court) கூறியிருக்கிறது.                                   

நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில்தான் இந்த கருத்து வெளியாகி இருக்கிறது. வாழ்வதற்கான உரிமை என்பது மிக முக்கியமானது என்றும் இப்படியே நாம் தொடர்ந்து வாழ முடியாது மாநில மற்றும் மத்திய அரசு இதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

Twitter

டெல்லி மாநகரில் வசிக்கும் மக்களுக்கு வீடுகளுக்கு உள்ளே கூட ஒரு பாதுகாப்பும் இல்லை. நம் வாழ்வின் மதிப்புமிக்க ஆயுள்காலத்தை இதனால் நாம் இழந்து வருகிறோம் என்று காற்று மாசுபாடு பற்றி கடுமையாக சாடியிருக்கிறார் நீதிபதி அருண் மிஸ்ரா.                      

மக்கள் மீண்டும் மீண்டும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோலவே அவர்கள் செத்துக் கொண்டுதான் இருப்பார்களா என்று கடுமையான கேள்விகளை முன்வைத்தனர் நீதிபதி அருண் மிஸ்ரா குழுவினர். இப்படி அதீத உச்சத்தை அடைந்திருக்கும் டெல்லி காற்று மாசுபாட்டை தவிர்க்க என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய மற்றும் மாநில அரசிடம் கேள்விகளை எழுப்பி இருக்கிறது உச்சநீதிமன்றம்.

Twitter

நமது மூக்குக்கு கீழே நடக்கும் இந்த பிரச்னை எப்படி சரி செய்யப்போகிறோம். ஒன்று டெல்லிக்கு யாரையும் வர வேண்டாம் என்றோ அல்லது இங்கிருந்து கிளம்புங்கள் என்றோ கூறுவது மட்டுமே தீர்வல்ல. மாநில அரசுக்குப் பொறுப்பு உள்ளது. இந்த மாநிலத்திலும், அருகில் உள்ள மாநிலங்களிலும் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இதை நாம் பொறுத்துக்கொள்ள முடியாது. எல்லாவற்றையும் நாம் நாசம் செய்துகொண்டிருக்கிறோம்” என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையாலான குழு கருத்துத் தெரிவித்தது.                                                                  

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணைச் செயலாளர் நீதிமன்றத்துக்கு இந்த விவகாரத்தில் தகவல் தெரிவிப்பதற்காக வந்திருந்தார். அவருக்கும் நீதிபதி அருண் மிஸ்ராவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இதற்கான தீர்வை வழங்க மத்திய மற்றும் மாநில அரசிற்கு பொறுப்பிருப்பதாக முடித்தார் நீதிபதி அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா குழுவினர்.

மேலும் இனிமேலும் விதிமீறல்களை பொறுத்துக் கொள்ளமுடியாது.. டெல்லியில் நிலவும் கடுமையான மாசுபாட்டிற்கு பயிர்க்கழிவு எரிப்பு மட்டுமே காரணம் என்றால் மாநில அரசு, கிராம பஞ்சாயத்துக்களே முழு பொறுப்பு. எல்லா மாநிலமும் இதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது

Twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Lifestyle