Celebrity Life

சூப்பர் சிங்கர் புகழ் திவாகருக்கு திருமணம்… பிரலங்கள் கொடுத்த அதிர்ச்சி பரிசுகள்!

Swathi Subramanian  |  Dec 12, 2019
சூப்பர் சிங்கர் புகழ் திவாகருக்கு திருமணம்… பிரலங்கள் கொடுத்த அதிர்ச்சி பரிசுகள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல்வேறு சீசன்களை கடந்துள்ளது. சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர் என்று இரண்டு பிரிவுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல்வேறு போட்டியாளர்கள் தற்போது சினிமாவிலும் பாடகராகவும், பாடகியாகவும் திகழ்ந்து வருகின்றனர். 

அந்த வகையில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற ‘சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 4’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தையும், 50 லட்சம் மதிப்புள்ள வீட்டையும் பரிசாக வென்றவர் பாடகர் திவாகர் (diwakar). 

twitter

பாடகர் திவாகர் விஜய் டிவி மூலம் அனைவராலும் அறியப்பட்டாலும் அந்த நிகழ்ச்சிக்கு முன்னரே ‘சரி கம பா 2009 சேலஞ்ச்’, ‘ஹரியுடன் நான்’, ‘சங்கீத மஹா யுத்தம்’ போன்ற பல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். 

மேலும் படிக்க – காலத்தை கடந்த நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…. 70வது பிறந்த நாள் கொண்டாட்டம்!

சாதாரண குடும்ப பின்ணணியில் இருந்து வந்த இவர் கடுமையான உழைப்பால் தன் திறமையை வெளிப்படுத்தி வெற்றியடைந்தார். அதன் பின் இசையமைப்பாளர் டி.இமான் இசையில் பின்னணி பாடகராக, தன்னுடைய இசை பயணத்தை தொடங்கி தற்போது வரை பல வெற்றி படங்களில் பாடல்கள் பாடி வருகிறார். 

twitter

தமிழில் வடகறி, பஞ்சுமிட்டாய், புறம்போக்கு, ரஜினிமுருகன், பாயும் புலி, ரம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் பாடல்களை பாடியிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் பாடிய பாடல் ‘வாரே வாரே சீமராஜா’  அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அபி என்ற பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்த திவாகர் (diwakar), இருவீட்டாரின் சம்மதத்துடன்  திருமணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி திருமண அழைப்பிதழை அவரது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் நேற்று மிக பிரமாண்டமாக இவர்களது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில் இசையமைப்பாளர் தேவா, அவருடைய மகன் ஸ்ரீகாந்த் தேவா, விஜய் டிவி பிரபலங்கள் அந்தோணி தாஸ், சூப்பர் சிங்கர் குழுவை சேர்த்தவர்கள் மற்றும் கலக்க போவது யாரு குழுவை சேர்த்தவர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

மேலும் படிக்க – பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவரை சந்தித்த நடிகை நயன்தாரா.. கட்சியில் சேர அழைப்பு!

youtube

அதிலும் குறிப்பாக பாடகர் அந்தோணி தாஸ், திவாகர் மற்றும் அபி தம்பதிகளுக்கு வெங்காய கூடையை பரிசளித்தது அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தது. தற்போது வெங்காய விலை உச்சத்தில் இருப்பதால் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் வெங்காயத்தை பரிசாக கொடுத்து வேடிக்கையாக வாழ்த்து கூறுகின்றனர். இந்த சம்பவம் திவாகர் திருமணத்திலும் நடந்துள்ளது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத மணமக்கள் அதிர்ச்சியடைந்தனர்! அதேபோல் கலக்கப்போவது யாரு குழுவில் இருந்து வந்தவர்கள் கொசு பேட்டை இருவருக்கும் பரிசளித்து பிரபம்மிக வைத்தனர். திருமணத்திற்கு வந்த பிரபலங்கள் மணமக்களுக்கு அளித்த பரிசால்  திருமணத்தில் சிரிப்பு மழை நிரம்பி வழிந்தது. 

இவர்களது திருமணம் சென்னை மாதவரம் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற நிலையில், மற்ற நிகழ்வுகள் ராஜலெட்சுமி பாரடைஸில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு இசைமைப்பாளர் இமான் தலைமை தாங்கினார்.

திருமண நிகழ்ச்சிகள் (wedding) முடிந்த பின்னர் இறுதியாக திவாகர் (diwakar) அவரது மனைவியுடன் மேடையில் பாட்டு பாடி விருத்தினர்களை உற்சாகப்படுத்தினார்.

மேலும் படிக்க – காமெடி நடிகர் சதீஷ் – சிந்து திருமண வரவேற்பு…நேரில் சென்று வாழ்த்திய முக்கிய பிரபலங்கள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Celebrity Life