Food & Nightlife

நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய கோடைக்கால பழங்கள்!

Meena Madhunivas  |  May 17, 2019
நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய கோடைக்கால பழங்கள்!

கோடைக்காலம் வந்துவிட்டாலே, இளநீர், பழச்சாறுகள் மற்றும் பிற குளிர் பானங்களுக்கு தேவை அதிகரித்து விடுகிறது. மக்கள் ஏதாவது ஒரு குளிர் பானத்தை தங்கள் தாகத்தையும், வெயிலினால் ஏற்படும் சோர்வையும் போக்க அருந்துகிறார்கள். மேலும், மக்களின் தேவைக்கேற்ப, இயற்கையும் தன்னுடைய பங்கைத் தருகிறது.

கோடைக்காலத்தில், உங்கள் சூட்டை தணிக்கும் வண்ணம் பல பழங்கள்(fruits) விளைகின்றது. அதில் குறிப்பாக தர்பூசிணி, முலாம்பழம், பப்பாளி, மாம்பழம் என்று சிலவற்றை வகைப்படுத்தலாம். இந்த கோடைக்கால  பழங்கள்(fruits) அதிக நீர் சத்து நிறைந்ததாகவும், மற்றும் பிற சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். அதனால், இது உங்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைத்து போதுமான சக்த்தியை உங்கள் உடலுக்குத் தர ஏற்றதாக உள்ளது.

கோடைக்காலம் வந்து விட்டாலே, வெயிலின் வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மற்றும் உடம்பில் இருந்து வெளியேறும் நீரால் அதிக சக்தி விரயமாகிறது. இதனால் பல உடல் உபாதைகளும், பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதனை சரி செய்து உங்கள் உடலை சம நிலையில் வைத்துக் கொள்ள, கட்டாயம் நீங்கள் ஏதாவது ஒரு கோடைக்கால பழத்தை தினமும் உங்கள் உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சுவையான கனவாய் மீன் ரெசிபி

ஏன் கோடைக்கால பழங்களை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்?

உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய கோடைக்கால பழங்கள்(fruits)

கோடைக்கால பழங்களின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்ட பின், இங்கே, சில குறிப்பிடத்தக்க கோடைக்கால பழங்கள்(fruits) என்னென்ன என்பதை பற்றிய சில தகவல்கள், உங்களுக்காக:

மாம்பழம்
முக்கனிகளின் முதன்மை பெற்றது மாம்பழம். இதில் நிறைந்துள்ள சத்துக்கள் அபாரமானது. மாம்பழம், ருமானி, சேலம் மாம்பழம், பங்கலவள்ளி, என்று பல வகைகளில் கிடைக்கின்றது. இவை ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு சுவையும், மகத்துவமும் இருக்கின்றது.  இதன் மனமும், சுவையும் வர்ணிக்க முடியாத அளவு இருக்கும்.

அழகான மென்மையான முடியை பெறுவதற்கான 10 ரகசிய டிப்ஸ்கள்!
பப்பாளி

பப்பாளி அதிக அளவு வெப்பமண்டலப் பகுதிகலில் கிடைக்கும். இதை காயாகவோ, பழமாகவோ பயன் படுத்தலாம். பப்பாளியில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. இதன் இலைகளும் மருத்துவத்திற்க்காக அதிகம் பயன் படுத்தப்படுகிறது.

தர்பூசணிப்பழம்

தர்பூசணி, கோடைக்காலங்களில் மிக மலிவான விலையில் அனைத்து இடங்களிலும் கிடைக்கும். இது அனைவருக்கும் பிடித்த ஒரு சுவை மிகுங்கள் பழமாகும். இதில் அதிக நீர் சத்து நிறைந்துள்ளது. மேலும் இதன் இனிப்பான சுவை அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் இதனை விரும்பி உண்ணுவார்கள். கோடைக்காலம் வந்துவிட்டாலே, தர்பூசணிப்பழம் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஒரு வரவாகும்!

முகத்தை பளபளப்பாக்கும் அதிசய தேன்: எப்படி பயன்படுத்தலாம்!

 முலாம்பழம்

தர்பூசணிப்பழத்திற்கு அடுத்தப் படியாக, முலாம்பழம் பிரபலாமன ஒரு தேர்வாக மக்களுக்கு இருக்கின்றது. இந்த பழத்தில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இது அனைத்து இடங்களிலும், கோடைகாலத்தில் மலிவான விலையில் கிடைக்கின்றது.

 திராட்சைப்பழம்  

மற்றுமொரு பிரபலமான கோடைக்காலத்திற்கு ஏற்ற பழம், திராட்சைப்பழம். இதில் அதிக நீர் சத்து இருந்தாலும், பெரும்பாலான மக்கள் இதனை அதிகம் கவனிப்பதில்லை. திராட்ச்சையில் அதிக வைட்டமின் C சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் சருமத்திர்க்குத் தேவையான கொலஜென் உற்பத்தியை அதிகப்படுத்த உதவும். திராட்ச்சைப்பழத்தின் சாறு சருமம் மற்றும் தலை முடி பராமரிப்பிற்குப் பெரிதும் உதவுகிறது. மேலும் இது பொடுகு மற்றும் முகப்பருவை போக்க உதவுகிறது.

பிளம்ஸ்

தக்காளியைப் போன்று தோற்றமளித்தாலும், இனிப்பாகவும், மற்றும் சற்று புளிப்புக் கலந்த இனிப்பாகவும் பல சுவையில் இந்தப் பழம் கோடைக்காலங்களில் கிடைக்கிறது. பிளம்ஸ் ஒரு பிரபலமான பழம். இதில் வைட்டமின் C சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த பழம் சீசன் நேரத்தில் மிக மலிவான விலையில் கிடைக்கும். நன்கு பழுத்த பலம் மிக ருசியாக இருக்கும். அடர்ந்த நிறத்தில் இருக்கும் பிளம்ஸ் உண்பதற்கு இலகுவாக இருக்கும்.

 அன்னாசிப்பழம்

நார் சத்து நிறைந்து, குறைந்த கலோரிக் கொண்ட பழம், அன்னாசிப்பழம். இது கொலாஜன் உற்பத்தியை அதிகப்படுத்த உதவுகிறது. மேலும் இது உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த மற்றும் சேதமடைந்த அணுக்களை அகற்ற உதவுகிறது. உங்கள் சருமத்தை பொலிவு பெற செய்கிறது. உங்கள் சருமத்திர்க்குத் தேவையான ஆக்சிஜனேற்றத்தைத் தருகிறது. இந்த பழத்தை தினமும் உங்கள் உணவோடு சேர்த்துகொள்ளும் போது, உங்கள் சருமத்தில் ஏற்படும் வயதான அறிகுறிகளை விரைவாக போக்கி, இளமையானத் தோற்றத்தை தரும்.

 இந்த பழங்கள்(fruits)மட்டுமல்லாமல், கொய்யா, ஆப்பிள், பேரிக்காய், சப்போட்டா, கமலாப்பழம், சாத்துக்குடி போன்ற பல பழ வகைகளும் உங்கள் கோடைக்காலத்திற்கு விருந்தளிக்க உள்ளது. இவற்றில் உங்களுக்கு பிடித்ததும் மற்றும் விலை மலிவானதுமான பழங்களை தேர்ந்தெடுத்து தினமும் சாப்பிட்டு வந்தால், கோடையிலும், குளிர் காலத்தை உங்களுக்குள் உணரலாம்!  

Read More From Food & Nightlife