
மார்னிங் டிபன்(breakfast) என்பது எதையோ அவசரமாகக் கொறிப்பது மட்டுமே. ` பிரேக்ஃபாஸ்ட்டைத் தவிர்க்காதீர்கள்!’, `ஒன்பது மணிக்குள் சாப்பிட்டுவிடுங்கள்!’, ‘காலை உணவுதான் அன்றைக்கு முழுமைக்குமான சக்தியை உடலுக்குக் கொடுக்கும்!’… திரும்பத் திரும்ப மருத்துவர்கள் வலியுறுத்தும் விஷயங்கள். அப்படிச் சாப்பிடுபவை சத்தானவையாக இருப்பது சிறந்தது. காலையில் சாப்பிட ஏற்ற சில சத்தான உணவுகளை பார்ப்போம்.
இட்லி, சாம்பார்:
இட்லி, சாம்பாரில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் இருப்பதால், இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த உணவு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். சர்க்கரை நோயாளிகள்கூட காலையில் சாப்பிடலாம்.
தோசை-தேங்காய் சட்னி காம்பினேஷன் அன்றைய நாளையே நமக்கு உற்சாகமாக வைத்திருக்க உதவும். புரோட்டீன், தாதுக்கள், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, டி ஆகிய சத்துக்கள் தேங்காயில் உள்ளன. கால்சியம் சத்து குறைவாக உள்ள பெண்கள் தேங்காய் சாப்பிட்டால், அந்தக் குறை நீங்கும். எனவே, தேங்காய் சட்னி நமக்கு ஆரோக்கியமான(breakfast) உணவே. குழந்தைகளுக்கு இதைக் கொடுப்பதால் எலும்பு பலம் பெறும்; வளர்ச்சி பெறும்.
பொங்கல், சாம்பார், சட்னி:
பொதுவாக பொங்கல் சாப்பிட்டால் மந்தமாக இருக்கும் என்ற உணர்வு நாம் அனைவர் மத்தியிலும் இருக்கிறது. உண்மையில் பொங்கல் மிக மிக ஆரோக்கியமான உணவு. நாம் சேர்க்கின்ற வனஸ்பதி போன்றவற்றினால்தான் மந்தத்தன்மை, தூக்கம் வருவது போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றன. புரோட்டீன் சத்துக்கள் பொங்கலில் அதிக அளவில் இருப்பதால் இது குழந்தைகளுக்கு ஏற்றது.
பூரி செய்ய மைதா மாவைத் தவிர்ப்பது நல்லது. பூரியை கோதுமை மாவிலேயே செய்வது நல்லது. ஏனெனில், கோதுமையில் உள்ள கார்போஹைட்ரேட்டும் புரோட்டீனும் நம் உடலுக்குச் சக்தியை கொடுப்பவை. உருளைக்கிழங்கில் உள்ள புரோட்டீன் சத்து, குழந்தைகளை ஆரோக்கியமாகவும் புத்துணர்வோடும் வைத்திருக்கும்.
சப்பாத்தி, சப்ஜி:
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சப்பாத்தி சிறந்த உணவு. டயட்டில் இருப்பவர்களும் சப்பாத்தியை தேர்வு செய்வது சிறந்தது. சப்ஜியில் சேர்க்கும் பருப்பில் உள்ள புரோட்டீன் சத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. எனவே எல்லோருமே சப்பாத்தி, சப்ஜி சாப்பிடலாம்.
காய்கறிகள் சேர்த்த உப்புமா, தேங்காய் சட்னி:
சர்க்கரை நோயாளிகளுக்கு, காய்கறிகள் சேர்த்த உப்புமா ஏற்ற உணவு. புரோட்டீன், தாது, கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, டி ஆகிய சத்துக்கள் தேங்காயில் உள்ளன. இது அனைவருக்கும் ஏற்றது.
புட்டு, கொண்டக்கடலை:
கொண்டக்கடலையில் உள்ள புரோட்டீனும் புட்டில் உள்ள கார்போஹைட்ரேட்டும் அனைவருக்கும் ஏற்றவை. காலையில் சாப்பிடவேண்டிய அருமையான உணவு இது. சத்தான இந்த டிபன் நம்மைச் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.
குழந்தைகள் எந்த உணவையும் சாப்பிட மறுக்கிறார்கள் என்றால், சத்துமாவுக் கஞ்சியைக் கொடுக்கலாம். இதுவே அவர்களுக்குத் தேவையான எனர்ஜியை வழங்கப் போதுமானது. .ஏனெனில் மற்ற உணவுகளில் உள்ள சத்துகள் அனைத்தும் சத்துமாவுக் கஞ்சியில் உள்ளன.
வாழைப்பழத்தை, `வாழ்வதற்கான பழம்’ என்று கூறுவார்கள். தினசரி உணவோடு வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டால், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
இந்த பிரேக்ஃபாஸ்ட்(breakfast) பட்டியலில் சிறந்த காலை உணவாக இருப்பது…
1. இட்லி, சாம்பார்
2. புட்டு, கொண்டைக்கடலை
3. தோசை, தேங்காய் சட்னி
4. பொங்கல், சாம்பார் மற்றும் சட்னி
5. சப்பாத்தியுடன் சப்ஜி
6. பூரி, உருளைகிழங்கு
7. உப்புமா
8. சத்துமாவு கஞ்சி மற்றும் பழங்கள்.
பெரும்பாலும் அவித்து உண்பதே சிறந்த உணவு. இதை மனதில் கொள்வோம். காலை உணவை தவிர்க்காமல், ஆற அமர பொறுமையாக, நொறுங்கச் சாப்பிடுவோம். இந்த இயந்திர வாழ்வில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு நோய் நொடி இல்லாமல் வாழ்வோம்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi