Lifestyle

அட! மன அழுத்தத்தில் இருந்து விடுபட இத்தனை சுவாரசியமான வழிகளா ?!

Nithya Lakshmi  |  Sep 25, 2019
அட! மன அழுத்தத்தில் இருந்து விடுபட இத்தனை  சுவாரசியமான வழிகளா ?!

குழந்தைகள்கூட தற்போது மன அழுத்தம்(stress) இருக்குனு சொல்லற அளவுக்கு வாழ்க்கை மாறிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும்  ஈசியாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மை எல்லா விஷயத்திலும், எந்த நேரத்திலும் இருப்பது அவசியம்.

வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டுமெனில், கடின உழைப்பு வேண்டும். நம்மைச் சுற்றி உள்ளவர்களைவிட நாம் மேலோங்கி இருக்க வேண்டும். இந்தப் பயணத்தில் வெற்றி தோல்விகள் சகஜம். தோல்வி அடையும்போது துவண்டு விடாமல், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாலே போதும், நாம் சறுக்காமல் நிமிர்ந்து விடுவோம்.

மற்றொன்று, அடுத்தவர் என்ன நினைப்பார் என்ற பயமே நம்மவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பயம். நமக்கு ஏற்படும் இன்பமும், துன்பமும், வெற்றியும், தோல்வியும் – பற்றி – மற்றவர்களுக்கு – ஒரு சில நொடிகளே பாதிப்பை ஏற்படுத்தும்.  நம்மைப்பற்றி நமக்கில்லாத அக்கறை இவ்வுலகில் எவருக்கும் கிடையாது! ஆச்சர்யமாக இருக்கிறதா? – பெற்றோர்கள்? என்று கேட்பது ஒலிக்கிறது. பெற்றோருக்கு அக்கறை இல்லை என்று சொல்லவில்லை. உங்களை மீறி அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. எனவே உங்கள் நிலைமைக்கு நீங்கள் தான் காரணம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை கைவிட்டாலே பாதி துன்பம் மறைந்துவிடும்.

மன அழுத்தம்(stress), வெற்றியை நோக்கி பயணிக்க நிச்சயம் இருக்க வேண்டும். அது மிகாமல் இருக்க வேண்டும். அவ்வளவே.

மன அழுத்தத்தால் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றங்கள்

Pexels

உங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா என்று எப்படி கண்டு கொள்வது? இதோ சில அறிகுறிகள்.

உடலில் ஏற்படும் மாற்றங்கள்:

மனதளவில் ஏற்படும் மாற்றங்கள்:

இவை நீண்ட நாட்களாக தொடர்ந்தால் அது உங்கள் உடலையும் பாதிக்க துவங்கும். மனம் தான் முதல் எதிரி. எண்ணங்கள் சீறானால் அனைத்தும் சரியாகி விடும். உங்கள் கட்டுப்பாட்டிற்குள் உங்கள் எண்ணங்களை கொண்டு வாருங்கள்.

மன அழுத்தத்தை தவிர்க்க சில குறிப்புகள்

Pexels

உங்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தை உணர்ந்ததும் அதை உதாசீனப் படுத்தாமல், முதலில் அதை சரி செய்ய முனையுங்கள்.சில எளிய ஸ்ட்ரெஸ் பிஸ்டர்(stress buster)களை பார்க்கலாம்.

1. நல்ல இசை கேட்பது

உங்களுக்கு பிடித்த இசையை கேட்பது, உங்கள் மன நிலையை உடனே மாற்றக்கூடிய வல்லமை பெற்றது.

2. நன்றாக உறங்குவது

சாதாரணமாக படுத்திருப்பது அல்ல, ஆழ்ந்து உறங்க (sound sleep) வேண்டும்.

3. இடமாற்றம்

நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் இருந்துகொண்டு ஒரே சிந்தனையில் இராமல், சிறிது நாட்களுக்கு வெளியே புது இடங்களுக்கு செல்வது, வார இறுதியில் அருகில் இருக்கும் இடத்திற்குச் சென்று வருவது போன்ற இட மாற்றம் உங்கள் மன நிலையை மாற்றும். 

4. பிடித்தவர்களுடன் உரையாடுவது

வெளியில் செல்ல தகுந்த நேரமோ, சமயமோ அமையவில்லை என்றால், உங்கள் நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள். உங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசுங்கள்.

Pexels

5. பிடித்ததை சாப்பிடுவது

உங்களுக்கு சமைப்பது பிடிக்குமெனில், புதிதாக ஒன்று செய்துபாருங்கள். உங்களுக்கு பிடித்ததை செய்து நன்றாக சாப்பிடுங்கள். அதுவும் கூட உங்கள் மனதை நேர்மறையான எண்ணங்களை தோன்ற உதவியாக இருக்கும்.

6. ஷாப்பிங் போவது

ஷாப்பிங் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. உங்கள் மனதை திசை திருப்ப இதைவிட வேறு எதுவும் உண்டோ. உங்கள் மனமும், உடலும் சலிப்புற ஷாப்பிங் செய்யுங்கள். பின்பு நன்றாக உறங்குங்கள். புத்துணர்ச்சியோடு எழுந்திருங்கள்.

7. விளையாடுவது

சிலருக்கு விளையாடுவது மிகவும் பிடிக்கும். உங்களால் இயன்றவரை வியர்வை வெளிவர உங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடுங்கள். சிலருக்கு செஸ் போன்ற விளையாட்டுகள் தலைவலியை ஏற்படுத்தும். மூளைக்கு மேலும் அழுத்தம் தரும் விளையாட்டுகளை சிறிது காலம் தவிர்த்து(rid), உங்களுக்கு உற்ச்சாகமூட்டும் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள்.

8. சினிமா பார்ப்பது

சிலருக்கு சினிமா, நாடகம், நடனம், இசை போன்றவை நல்ல மன மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் அது அளவுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Pexels

9. உடற்பயிற்சி

தினமும் நல்ல உடற்பயிற்சி தேவை. காலையிலும், மாலையிலும் 40 நிமிடங்கள் ஏதாவது ஒரு வகையில் உடற்பயிற்சி செய்யுங்கள். அது உங்கள் உடலில் சேர்ந்திருக்கும் அழுக்குகளை(toxic) வெளியேற்ற உதவும். அப்படி செய்யாமல் இருந்தாலே, ஹார்மோனல் இம்பாலன்ஸ்(hormonal imbalance) ஏற்பட்டு, உடலுக்கு நோய்களை வரவழைத்து, மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள்.

10. சிரித்த முகம்

சிரித்த முகத்துடன் இருந்து பாருங்கள். அனைத்தும் மாறிவிடும். உங்கள் முகத்தைப்பார்த்தாலே உங்களை எதிர்கொள்பவர் நேர்மறையான எண்ணத்தோடு உங்களை அணுகுவார். வெறும் சிரிப்பே சூழ்நிலையை மாற்றி, அனைத்தையும் எளிதாக பார்க்கும் மனநிலைக்கு உங்களை தள்ளும்.

11. தியானம் 

படபடப்பாக(restlessness) உணர்ந்தால், சிறிது நேரம் தியானம் செய்வது மிகவும் நல்லது. பரீட்சைக்கு முன் அனைவர்க்கும் வயிற்றில் பட்டாம்பூச்சி அடித்துக்கொள்ளும். சிறிது நேரம் நிதானமாக கண்களைமூடி தியானம் செய்து பாருங்கள், மனம் அமைதி/நிம்மதி கொள்ளும்.

 

மன அழுத்தத்தில் இருந்து விடுபட மற்ற யோசனைகள்

Pexels

எப்போதும் நேர்மறையான எண்ணங்களை கொண்டிருங்கள். நேர்மறையாகவே பேசுங்கள். என்ன நடந்தாலும், நமக்கு நன்மை மட்டுமே நடக்கும் என்று நம்புங்கள். சிரித்த முகத்துடன் எப்போதும் இருங்கள், அதுவே உங்களை மன அழுத்த நிலையில் இருந்து விலகியே (reduce stress) வைக்கும்.

 

மேலும் படிக்க – மன அழுத்தத்தில் இருந்து பெண்கள் விடுபட உதவும் ஸ்பா தெரபிகள் மற்றும் சில சிம்பிள் டிப்ஸ்கள்

பட ஆதாரம்  – Instagram 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! 

Read More From Lifestyle