Lifestyle

நம்மை உளவியல் ரீதியாக ஆச்சர்யப்படவைக்கும் சில வித்யாசமான உண்மைகள்

Deepa Lakshmi  |  Dec 31, 2018
நம்மை உளவியல் ரீதியாக ஆச்சர்யப்படவைக்கும் சில வித்யாசமான உண்மைகள்

உலகின் பெரும்பான்மையான ஆண்கள் தங்கள் தாயின் எலும்பு வடிவத்தை ஒட்டிய பெண்ணைத்தான் அதிகம் விரும்புகிறார்களாம். இதற்கு அறிவியல் ரீதியாக செக்ஸுவல் இம்ப்ரின்டிங் என்று பெயர் வைத்திருக்கின்றனர்.
என்ன ஆனாலும் அம்மா அம்மாதான் போல

நீங்கள் ஒரு நபரின் கைகளை சிறிது நேரம் பிடித்து கொண்டிருந்தால் அவர்களின் உடல் ரீதியிலான வலிகள் மற்றும் மனதின் காயங்கள் கொஞ்ச நேரத்தில் ஆற தொடங்குகிறது. மற்றும் அவர்களின் மன அழுத்தம் மற்றும் பயங்களை இந்த செயல் போக்குகிறது.Psychological.

இனி யாரேனும் பயத்திலோ துன்பத்திலோ இருந்தால் அவரது கைகளை கொஞ்ச நேரம் பிடித்து கொள்ளுங்கள்.

உளவியலாளர்கள் நாம் பகல் கனவு காண்பதற்கான சில விளக்கங்களை கொடுத்துள்ளனர். பெரும்பாலும் இரவில் கண்ட கனவுகளின் தொடர்ச்சியாகத்தான் பகல்களிலும் கனவுகள் வருகின்றன என்கின்றனர். நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் என்ன கனவு கொண்டிருந்தீர்கள் என்பதன் அடிப்படையில் இவ்வகை கனவுகள் நிகழும்

கனவே கனவே கலைவதேனோ பகலில் நீயும்தொடரத்தானோ

உங்களால் நம்ப முடிகிறதோ இல்லையோ காதல் எனும் நம் வாழ்க்கையின் இறுதி வரை வர கூடிய முக்கிய முடிவினை எடுக்க நம் மூளை எவ்வளவு காலம் எடுத்து கொள்கிறது என்று தெரியுமா? வெறும் நான்கே நிமிடங்களில் நாம் காதலில் விழுந்து விடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
காதலே காதலே தனி பெருந்துணையே!! நான்கே நிமிடங்களில் வந்த நீ என் வாழ்வின் போக்கையே மாற்றி விடுகிறாயா!

சாப்பிட கூட நேரமில்லாமல் நாம் பரபரப்பாக போய்க் கொண்டிருப்பதாக பலர் நினைத்து கொண்டிருப்பார்கள். ஆனால் வாழ்வில் 30 சதவிகித நேரம் நாம் நடக்காத விஷயங்களை நினைத்து பகல் கனவு காண்பதிலேயே கழித்து விடுவதாக உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன.
கனவு காணும் வாழ்க்கை யாவும் ….

எல்லோரும் நினைப்பது ஒரு பழக்கத்தை நாம் பழகி கொள்ள பொதுவாக 21 நாட்கள் தேவைப்படும் என்று. அதனால்தான் பல்வேறு டயட் திட்டங்கள், த்யான வகுப்புகள், யோகா முறைகள் எல்லாம் 21 நாட்கள் வரை கற்று கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் ஒரு பழக்கத்தை நாம் பழகி கொள்ள 66 நாட்கள் எடுப்பதாக உளவியலாளர்களால்  கூறப்படுகிறது.

ஒரு விஷயத்தை பிசிறின்றி முழுமையாக முடித்து அதனால் மிக பெரும் மனதிருப்தியை நாம் பெற்று கொண்டாலும் நம்மால் முடிக்க முடியாத அல்லது நம் வாழ்வில் இன்னும் முடிந்து போகாத ஒரு விஷயத்தை பற்றியே நாம் அதிகம் சிந்திப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..

ஒரு பாடல் திடீரென நம் மூளைக்குள் பாதி நினைவுகளில் சிக்கி கொள்ளும். பாதி வரி நினைவிற்கு வரும் மீதியோ அல்லது அதன் ஆரம்பமோ உங்களுக்கு தெரியாது. அப்போதெல்லாம் நீங்கள் அப்பாடலின் ஆரம்ப வரிகள் என்னவாக இருக்கும் என்று மண்டையை குழப்பி கொண்டிருப்பீர்கள். உண்மையில் அப்பாடலின் கடைசி வரிகளை நீங்கள் தேடினால் அந்த பாடலே உங்களுக்கு மறந்து விடுமாம்!

பப்பிள் கம்கள் நம் மன அழுத்தத்தை போக்க கூடிய ஒரு பொருள் என உளவியலாளர்கள் கூறுகின்றனர். நீங்கள் பதட்டமாக இருக்கும் போதோ அல்லது பரீட்சை எழுதும்போதோ பப்பிள் கம் மெல்லுங்கள். பதட்டமின்றி வேலையை முடிக்கலாம்.

அலுவலக ரீதியாகவோ வியாபார ரீதியாகவோ ஒருவருடன் பேரம் பேசும்போது உங்கள் கைகளை உள்ளங்கைகள் தெரியுமாறு திறந்து வைத்து கொண்டு பேசுங்கள். அப்போதுதான் எதிரில் இருப்பவருக்கு உங்கள் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்குமாம்.
என்னை நம்புங்க நான் நல்லவன்தான்!

உங்களுக்கு தெரியுமா வேலை நேரத்தில் பாடல்கள் கேட்பது நமது வேலைத்திறனை அதிகரிப்பதாக நார்த்வெஸ்ட யூனிவெர்சிட்டியின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இசையே நீ இன்றி யாரும் இல்லை!

முத்த ரசிகர்களுக்கான முக்கிய உண்மை இதுதான். முத்தமிடுதல் ஒருவரின் உடலில் ஏற்படும் ஒவ்வாமை நோய்களை சரி செய்கிறதாம். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறதாம். முத்தமிட தொடங்குங்கள் முத்தமிட அனுமதியுங்கள்! நோயின்றி வாழுங்கள்!
முத்தங்களின்றி மூவுலகும் இல்லை போல!

இறுதியான முக்கியமான உளவியல் உண்மை என்ன தெரியுமா! நாம் சிரிப்பதன் மூலம் நம் மூளை நாம் சந்தோஷமாக இருப்பதாக நம்புகிறதாம்! துன்ப காலங்களிலும் சிரி என்று நம் வள்ளுவ சித்தன் இதனால்தான் கூறியிருக்கிறார் போல. ஆகவே நமது கஷ்ட நேரத்திலும் ஏதோ சினிமா காமெடிகளை பார்த்து சிரிப்பது நம் மூளைக்கும் உடலுக்கும் நல்லதாம்.
உள்ள அழுதாலும் வெளிய சிரிங்க!!!

இந்த புதிய உண்மைகள் மூலம் உங்களை உளவியல் ரீதியாக மாற்றி கொண்டு உங்கள் புது வருடத்தை புது வாழ்க்கையை ஆனந்தமாக கொண்டாடுங்கள்!!!

புத்தாண்டு வாழ்த்துங்கள்!

 

 —

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

 

 

 

 

Read More From Lifestyle