Lifestyle

உங்கள் ஒப்பனை செலவை குறைத்து மாதாந்திர சேமிப்பை எப்படி அதிகரிக்கிறது?

Nithya Lakshmi  |  Feb 27, 2019
உங்கள் ஒப்பனை செலவை குறைத்து   மாதாந்திர சேமிப்பை எப்படி அதிகரிக்கிறது?

ஒரு விவேகமுள்ள பெண்மணி, தனக்கு மாதத்தில் எவ்வளவு செலவு இருக்கிறது, அது எங்கெல்லாம் உள்ளது(சிறிதோ/பெரிதோ),மேலும் அதை எவ்வாறு கையாளலாம் (#strengthofawomen) என்று ஒரு ஒரு நிமிடமும் யோசித்து சிந்தித்து செயல் படுவாள்.

சேமிப்பு என்றது சம்பாத்தியத்தில் மட்டுமில்லாமல், செலவை குறைக்கிறதுலயும் உள்ளது என்று தெரிந்து சாமார்த்தியமாக நடந்து கொள்ளவேண்டும்.பெரும்பாலான பெண்கள் ஒப்பனையில் அதிகளவில் செலவு செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது. உங்கள் மாத சம்பளத்தில் ஒப்பனை மற்றும் சரும பராமரிப்பு பொருட்களின் செலவு (cost) அதிகமாக இருக்கிறது என்றால் அதை குறைக்க பழகுங்கள். அப்படி செயும்போது உங்கள் செலவில் கொஞ்சம் மீதம் ஆகி சேமிப்பு அதிகரித்து, மற்ற இடங்களில் உதவும் ! இதற்கான சில உத்திகளை நாங்கள் அளிக்கிறோம்.

உடைந்த ஒப்பனை பொருட்களை பயன்படுத்தவும் –

நீங்கள் ஏதேனும் ஒரு காம்பெக்ட் பவுடர் அல்லது லிப்ஸ்டிக், லைனர், பாவுண்டேஷன் உடைந்து போய் விட்டது அதனால் அதன் பலன் இல்ல என்று நினைத்தால் அது தவறு. அதை வேறு ஒரு கன்டைனரில் மாற்றி உபயோகிக்க ஆரம்பியுங்கள்.

உங்களிடம் இருப்பதை முதலில் முழுமையாக உபயோகியுங்கள் –

நான் பெரும்பாலும் ஒப்பனையில் ஈடுபடமாட்டேன் என்றாலும் என்னிடம் நிறைய ஹாண்ட் கிரீம் மற்றும் பாடி கிரீம் உள்ளது. ஒரு ஒரு கிரீமின் பாட்டில் முழுதும் முடிவதற்கு முன் இனொன்றை வாங்கிவிடுவேன் ! ஏனெனில் எனக்கு இதன் மனம் பிடித்ததாக இருக்கும். இதை போல் நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்றால், முதலில் உள்ளதை முடித்து விட்டு மற்றொன்றை வாங்குங்கள்.செலவும் குறைவு , பொருளும் மீதமாகாது.

ஒரே பொருள், பல பயன்கள்-

இதுபோன்ற பொருள்கள் உங்கள் சேமிப்பை நிச்சயம் அதிகரிக்கும். ஒப்பனையின் செலவை குறைக்கும். அப்படி எப்படி ஒரே பொருளில் பல பலன்கள் என்று யோசிக்கிறீர்களா?  உங்கள் மேட் மூஸ் லிப்ஸ்டிக் ஒன்றில் நீங்கள் ப்ளஷ், ஐ ஷாடோ மற்றும் உதட்டு சாயம் என்று பயன்படுத்தலாம். மேலும், கலர் கரெக்டரை ப்ளஷ் ஆகவும் பழைய லிப்ஸ்டிக்க்கை நெய்ல் பெயிண்ட் ஆகவும் பயன் படுத்தலாம் !

வாங்கும் பொருளின் நோக்கத்தில் தெளிவு தேவை –

மற்றவர்கள் கூறி அல்லது சலுகைகளிலும் சரி…நம்மில் பலர் எதற்கு ஒரு பொருள் வாங்குகிறோம் என்று தெரியாமலே வாங்குவோம்.  ஆனால் அது நமக்கு எவாறு உதவும் என்று தெரிந்து முக்கியமான பொருள்களை மட்டும் வாங்க பழகுங்கள். உதாரணத்திற்கு, உங்களுக்கு வாசனை திரவியம் பிடிக்கும் என்றால் அதில் உங்கள் மனதிற்கு பிடித்த ஒரே ஒரு பரிமளத்தை வாங்குங்கள். அது பிராண்டட் ஆக இருந்தாலும் சரி. மற்ற வாசனை பொருட்கள் எதுவும் தேவையில்லை.

விலை குறைவான மற்ற பொருட்கள் –

உங்கள் சருமத்திற்கு ஏற்ற மற்ற பொருட்கள் விலை குறைவாக (பிராண்ட் இல்லை ) கிடைத்தால் நிச்சயம் அதை வாங்கிவிடுங்கள். நீங்கள் இதில் சிறிது நெகிழ்வாக இருந்தால் தேவையற்ற செலவுகளை தவிர்க்கலாம்.

சாம்பிள் டெஸ்ட் செய்து பாருங்கள் –

எந்த ஒப்பனை (makeup) பொருளாக இருந்தாலும் அதை அதிக நாள் நீங்கள் பயன்படுத்தபோறீர்கள். அதை வாங்கும் முன் உங்கள் சருமத்தில் எவ்வாறு தெரிகிறது என்று சோதனை செய்து பிறகு வாங்குவது உங்கள் செலவை மிச்சப்படுத்தும்.

அளவாக பயன்படுத்துங்கள் –

நிறைய இருக்கிறது என்று அதிகம் பூசாமல், உங்கள் தேவைக்கேற்ப அளவாக பயன்படுத்துங்கள். சிறிது பாவுண்டேஷன், ஓரிரு ஸ்வாட்ச் லிப்ஸ்டிக்,ஓரிரு பம்ப் (pump) மாய்ஸ்சுரைசர் போதுமானது.

இதுபோன்ற சில திறமையான யோசனைகள் உங்களுக்குள் இருந்தால் எங்களிடம் பகிர்துகொள்ளுங்கள். மேலும், நாங்கள் அளித்திருக்கும் இந்த உத்திகளை பயன்படுத்தி மாதாந்திர சேமிப்பை (savings) அதிகரியுங்கள்.

 

 

 

 

 

 

 

பட ஆதாரம்  – gifskey,pexels,pixabay,adobe

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Lifestyle