Celebrity Life
நடிகர் ரியோ ராஜ் மனைவி ஸ்ருதிக்கு வளைகாப்பு : இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன்!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளைஞர்களிடம் ஃபேமஸானவர் ரியோ ராஜ். ஒரு தொகுப்பாளராக, சின்னத்திரையில் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ரியோ, இன்று வெள்ளித்திரை நாயகனாக மாறி இருக்கிறார்.இவர் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து தற்போது ‘பானா காத்தாடி’ பட இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இதனிடையே சன் மியூசிக் தொலைக்காட்சியில் வேலை செய்த போது அவருடன் வேலை பார்த்த ஸ்ருதி என்பவரை காதலித்து வந்தார்.
ரியோ பிரபலமாவதற்கு முன்னரே இருவரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இருவரும் அண்ணா யுனிவர்சிட்டியின் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற போது அங்கு ஸ்ருதி தன் காதலைச்சொல்லி இருக்கிறார்.
பின்னர் இரண்டு நாள் கழித்து ஸ்ருதிக்கு ஓகே சொன்னதாக ரியோ சமீபத்தில் தெரிவித்தார். பின்னர் இருவரும் பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
மேலும் படிக்க – அப்பா நடிக்கறதை நிறுத்தணும்னு அம்மா ப்ரே பண்ணுவாங்க..விக்ரம் மகன் த்ருவ் வெளியிட்ட ரகசியம்
இந்நிலையில் தற்போது ஸ்ருதி கர்ப்பமாக இருக்கிறார். அண்மையில் ஸ்ருதிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த விசேஷத்தில் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். இதில் விஜய் டிவி பிரபலங்களும் கலந்து கொண்டு இருந்தனர்.
அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரியோவும், சிவகார்த்திகேயனும் நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ படத்தை தயாரித்தவர் சிவகார்த்திகேயன் தான்.
சற்றும் எதிர்பாராத பிரபலம் வீட்டிற்கு விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்து அவரை ஆனந்த இன்முகத்தோடு ரியோ வரவழைத்தார். சிவகார்த்திகேயனும் ஸ்ருதிக்கு வளையல் அணிவித்து, வாழ்த்தி சென்றுள்ளார்.
தற்போது சிவாவுடன் ரியோ எடுத்துக்கொண்ட செல்பி வைரலாகி வருகிறது.தாடி, மீசையை எல்லாம் எடுத்துவிட்டு கிளீன் ஷேவ் லுக்கில் உள்ள சிவகார்த்திகேயனை பார்த்த பலரும் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய காலம் கண் முன்பு வந்துவிட்டு போனதாக கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க – ரம்யாபாண்டியன் பாணியில் இறங்கிய நடிகை நந்திதா : சேலையில் சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்!
இதற்கிடையே பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ படம் டிசம்பர் மாதம் 20ம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் (sivakarthikeyan)ஜோடியாக இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. என்ன தான் படங்களில் பிசியாக இருந்தாலும் நட்பு என்று வந்து விட்டால் சிவா அண்ணா முதல் ஆளாக வந்துவிடுவார் என்று அவர் ரசிகர்கள் பெருமையாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க – அப்படியே அம்மா எமி ஜாக்சனை உரித்து வைத்திருக்கும் மகன் ஆண்ட்ரியாஸ் ! வைரல் புகைப்படம்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Celebrity Life
மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர்.. கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி!
Swathi Subramanian
தனது காதலரை அறிமுகப்படுத்தினார் நடிகை ப்ரியா பவானி சங்கர்….. ரசிகர்கள் அதிர்ச்சி!
Swathi Subramanian
25 படங்களில் நடித்த பயணம் கடினமாக இருந்தது… ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகை வரலட்சுமி!
Swathi Subramanian
நடிகை சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது….. உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரசன்னா!
Swathi Subramanian