
உலகிலேயே அதிகம் பேருக்கு தெரிந்த வார்த்தைகள் என்று ஒரு கணக்கெடுத்தால் அதில் SEX என்ற வார்த்தை கண்டிப்பாக இருக்கும்.
ஆங்கிலமே தெரியாதவர்களுக்குக் கூட இந்த வார்த்தை அறிமுகம் ஆகி இருக்கும். மனிதனோ விலங்கோ செக்ஸ்(sex) என்பது வாழ்வில் ஒரு தவிர்க்க முடியாத விசயமாகி விட்டது.
செக்ஸ் என்ற வார்த்தையை எங்கே படித்தாலும் அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புவது ஒரு சராசரி நபரின் எண்ணமாகும். செக்ஸ்(sex) பற்றிய எண்ணங்கள் பள்ளி படிக்கும் போதே அனைவருக்கும் வந்து விடுகிறது. இனக்கவர்ச்சி என்ற விசயத்தில் சம்மந்தப்படாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். செக்ஸ் பற்றிய ஆர்வம் தேடுதல் என்பது அப்போது செக்ஸ் புத்தகங்களை படிப்பதில் ஆரம்பிக்கிறது. செக்ஸ் பற்றி தனது தங்கைக்கு அக்கா என்ன சொல்கிறார் என்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
உனக்கே தெரிந்திருக்கும்
உனக்கே உன்னுடைய வயது மற்றும் அனுபவத்தின் காரணமாக இதுபற்றி ஓரளவுக்கு தெரிந்திருக்கும் என்று தான் நினைக்கிறேன். செக்ஸ்(sex) என்பதை சில திரைப்படங்களும் நாவல்களும் கூட வன்மமான விஷயமாகவும் போதையில் இருக்கும்போது தான் அதிகமாக காம இச்சைக்கு அடிமையாவது போன்றெல்லாம் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் செக்ஸ் என்பது நம்முடைய உணவு போன்ற உடல் தேவைகளைக் கடந்து நம்முடைய உடலுக்குத் தேவைப்படுகிற ஒரு விஷயம். அப்படித்தான் அதைப் பார்க்க வேண்டும். நீ செக்ஸ் விஷயத்தில் மிகவும் சந்தோஷமாக அதை அனுபவி. ஆனால் உன்னுடைய உணர்களைப் பகிர்ந்து கொண்டு அதற்கு மதிப்பு கொடுப்பவர் யாரோ அந்த நபரைத் தேர்ந்தெடுத்துக் கொள். யார் உன் மீது அன்பும் காதலும் மரியாதையும் கொண்டிருக்கிறார்கள் அவர்களிடம் உடலைப் பகிர்ந்து கொள்வது தான் செக்ஸ் வாழ்க்கையில் உனக்கு மகிழ்ச்சியைத் தரும்.
முதல் பாலியல் அனுபவத்தையும் படியுங்கள்
பின்பற்ற வேண்டியவை
பொதுவாக உன்னுடைய நண்பர்கள் எல்லோரும் சந்திக்கிற பொழுது, அவரவர்களுடைய காதல் மற்றும் ரொமான்ஸ் அனுபவங்கள் பற்றி பேசவார்கள். இன்னும் உனக்கு அப்படி செக்ஸ் அனுபவம் ஏதும் இல்லையா என்று உசுப்பேற்றி விடுவார்கள். உன்னுடைய மனதும் குழப்பமும் சஞ்சலமும் அடையும். ஆனால் உனக்கு முன்பு இந்த உலகத்தைப் பார்த்த உன்னைவிட 5 வயது அதிகமுள்ள உன்னுடைய தோழி நான் சொல்கிறேன் கேள். எப்போது நாம் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள தயாராகிவிட்டோம் என்று நினைக்கிறாயோ அதற்குரிய சரியான ஆளைத் தேர்ந்தெடுத்து, சரியான காரணமும் இருந்தால் அதை நீ செய். இதைப் பின்பற்றிப் பார். ஒருநாள் நிச்சயம் நீ எனக்கு நன்றி சொல்வாய் என்று அந்த தாய் குறிப்பிட்டுள்ளார்.
காதலுக்கும் காமத்துக்கும் உள்ள வித்தியாசம்
நாம் காதலிக்கும் நபர் மீது, உடல் ரீதியான ஆசை ஒரு சமயத்தில் நிச்சயம் எட்டிப் பார்க்கும் என்பது எனக்கும் நன்றாகப் புரிகிறது. ஆனால் காதலுக்கும் காமத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நீ நன்கு புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். காதல் உன்னிடம் நேரத்தையும் உணர்வுகளையும் செலவிட விருப்பப்படும். பரஸ்பர புரிதலுக்கு இடம் கொடுக்கும். ஆனால் காமம் உன்னுடனான நேரத்தையும் புரிதலையும் குறைத்துவிட்டு உன் உடலைப் பற்றி மட்டுமே யோசிக்கும். இந்த வித்தியாசத்தை நீ உணர்ந்து கொள்ள வேண்டும்.
கருவியாகப் பயன்படுத்துவது
சிலர் தாங்கள் காதலிக்கும் நபருடன் உறவு வைத்துக் கொண்டு, சில நெருக்கமான விஷயங்களை அனுபவிக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள். அதற்கான அந்த ஆண் பெண்ணையோ பெண் ஆணையோ கெஞ்சியாவது உறவில் ஈடுபடுவார்கள். ஆனால் உறவு வைத்துக் கொள்வதற்காக மட்டும் நீ யாரிடமும் கெஞ்சி விடாதே அது நல்ல அணுகுமுறை கிடையாது. ஏனென்றால் நாம் விரும்பும் நபரை செக்ஸ் வைத்துக் கொள்ளும் கருவியாகப் பயன்படுத்துவது தான் அது.
விருப்பமில்லை
உன்னுடைய பாய் பிரண்டோ அல்லது கணவரை செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள உன்னை நெருங்குகிற போது, உனக்கு பிடிக்கவில்லையென்றால் ஓப்பனாக நோ சொல்லிவிடு. ஒருவரும் இந்த விஷயத்தில் உன்னைக் கட்டாயப்படுத்த முடியாது. அது மியூச்சுவல் செக்ஸாக இருக்காது. அப்படி செய்தால் அது குற்றம். நீ நோ சொல்வதிலேயே அந்த ஆளுக்குப் புரிந்திருக்க வேண்டும். அந்த நபருடன் உறவு கொள்வதில் விருப்பமில்லை என்பது.
பொதுவாக சிலர் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள மற்நதுவிடுவதற்கு ஒரு வடிகாலாக செக்ஸை நினைத்து, எப்போதெல்லாம் பிரச்சினை உண்டாகிறதோ அப்போதெல்லாம் செக்ஸ் வைத்துக் கொள்வதுண்டு. சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளில் இருந்து செக்ஸ் ஆறுதல் தரும்தான். ஆனால் அது தற்காலிகமானது. இதுபோல் ஓடி ஒழியாமல் எந்த சவாலாக இருந்தாலும் அதை தைரியமாக சந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi