![women001 தண்ணீர் பஞ்சத்தில் சிக்கிய கிராமம்… சாதணை படைத்த தனி ஒரு பெண்மணி](https://wp.popxo.com/tamil/wp-content/uploads/sites/5/2021/07/women001-5.jpg)
கொழுத்தும் வெயிலில் தண்ணீருக்காக கிராமம்(village) நகரம் என்று பாரபட்சம் பார்க்காமல் எல்லாரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். சென்னை வாசிகளின் பாதி நேரம் தண்ணீரை சேகரிப்பதிலேயே போய்விடுகின்றது. அதற்கு காரணம் கொழுத்தும் வெயில், மழை இன்மை, ஏரி குளம் என அனைத்தையும் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியது தான் என்கின்றனர் வல்லுநர்கள்.
இது இப்படி இருக்க 2018ம் ஆண்டு இந்தியளவில் சிறந்த தூய்மை கிராமமாக(village) சென்னைக்கு 30 கிலோமீட்டர் அருகில் ‘அதிகத்தூர்’ என்னும் கிராமம் ஊர் தேர்வாகி, டெல்லி சென்று விருதையும் வாங்கியுள்ளது. இதற்கு முழு காரணம் தனி ஒரு பெண்மணி என்பது தான் கூடுதல் ஆச்சரியம்.
அவர் பெயர் சுமதி. சென்னைக்கும் திருவள்ளூர்க்கும் இடையே இருக்கும் கிராமம் ‘அதிகத்தூர்‘. இங்கு இருக்கும் பத்துக்கும் மேற்பட்ட ஏரி, குளங்களில் நீர் நிரம்பி வழிகிறது. பற்றாக்குறை என்ற சொல்லுக்கே இடம் இல்லை. இவ்வளவுக்கும் காரணம் இந்த சுமதி தான். தன் கிராம மக்களுக்காக ஒன்பது குளங்கள் வெட்டியுள்ளார்.
அங்கு தான் புது வித சிக்கல்கள் ஆரம்பமாகியுள்ளது. ராஜஸ்தான் போன்று தனது கிராமத்திற்கு(village) பல இடங்கிளிலிருந்து நீர் வரத்து வருவது கடினம் என்பதை உணர்ந்தார். பிறகு தனது யோசனையை கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார்.
2006-ல் உள்ளாட்சித் தேர்தல் வந்தது. கிராம மக்கள்(village) கொடுத்த யோசனையின் படி அது ஏழு குக்கிராமங்களைச் சேர்ந்த பஞ்சாயத்து அங்க தலைவர் பதவிக்கு போட்டியிட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. குளம் வெட்டும் பணி ஒரு பக்கம் இருந்தாலும் அதிகாரம் கையில் இருந்தா இன்னும் சிறப்பா செய்ய முடியும். ஊர் மக்கள் ஆலோசனையின் படி தேர்தலில் போட்டியிட்டி வெற்றி பெற்றுள்ளார்.
ராஜஸ்தான்ல டொளா கிராமத்தில்(village) வருஷத்தில் பாதி நாள் மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் வரும். அத்தோடு சமதளமான புவியியல் அமைப்பு அங்கு இருந்ததால் நீருக்கான பாதையை அமைத்து எல்லா பகுதிக்கும் அனுப்ப முடிந்தது. ஆனால் சுமதியின் ஊர் மேடு பள்ளம் நிறைஞ்சது. மழை நீரை மட்டுமே நம்பி இருக்கும் ஊர். என்ன பண்ணலாம்னு யோசிச்சோம் மழை நீரை சேமிக்க ஒரே வழி ஏரி, குளம் அமைக்கிறது.
மேடாகிக் கிடந்த 6 குளங்களை சீரமைத்தனர். அத்தோட பல வருஷத்துக்கு முன்னாடி குளமா இருந்த 3 இடத்தை தேடிப் பிடிதனர். அது எல்லாமே ஆக்கிரமிப்புல விவசாய நிலமா இருந்தது. அந்த நிலத்தை பயன்படுத்துனவங்ககிட்ட விவரத்தை எடுத்து சொல்லி புது குளமாகவே வெட்ட ஆரம்பித்தனர்.
வெட்டிய 9 குளத்தையும் கால்வாய் வழியா ஒன்னு சேர்த்தனர். எப்படின்னா முதலில் குடிநீருக்கான போர்வெல் போட்ட பகுதி வழியாக கால்வாயை உருவாக்கி இணைத்தனர். அப்படி இணைக்கும் போது குடி நீருக்கான போர்வெல்லில் நிலத்தடி நீர்மட்டம் உயர துவங்கியது.
இப்போ எல்லா போர்வெல்லிலும் தண்ணீர் மட்டம் நல்லாவே உயர்ந்து இருக்கன்றது. குடிநீர் பிரச்சனை தீர்ந்தது. இது எல்லாத்துக்கும் ஊர் மக்கள் ஒத்துழைப்பு தான் காரணம். துணையாக நின்றது மட்டும் தான் நான். மத்தது எல்லாம்…’’ என்று மக்களை கை காட்டுகிறார் சுமதி.
மேலும் சுமதி தனது பயணம் பற்றி கூறுகையில், எனது கணவர் எனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை மாறாக முழு சுதந்திரம் கொடுத்தார். எல்லா பணிகளையும் சுதந்திரமாக செய்ய கற்றுக்கொடுத்தார். காரணம் அவர் ஒரு தீவிர பெரியார் பக்தர். பெண்கள் தனியாக செயல்பட வேண்டும் என்பதில் அதிக ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டவர்.
‘‘10 வருஷங்களுக்கு முன்பு இந்த ஊர் கடுமையான வறட்சியில் இருந்தது. குடி தண்ணிக்காக தினமும் திண்டாட்டம் தான். விவசாயம் செய்ய வழி இல்லை எல்லோரும் சென்னை ஆந்திரானு கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டாங்க.
விவசாயம் முழுசா அழிந்து கொண்டு போனது ‘தங்கம் போட்டா தங்கம் விளையுற பூமி அதிகத்தூர் கிராமம்’ அதனால இந்த தண்ணீர் பஞ்சத்த என்னால தாங்கிக்கவே முடியல.
கிராமத்தை(village) ஒட்டி கூவம் ஆறு இருந்தாலும் தண்ணீர் பற்றாக்குறை எப்போதும் இருக்கும். ஒவ்வொரு கோடைக்காலத்திலும் தமிழகம் முழுக்க எல்லா ஊர்லயும் தண்ணீர் பஞ்சம் இருந்துட்டு தான் இருக்கு. அடுத்த மழை பருவம் வந்ததும் மக்கள் மறந்துடுறாங்க.
ஒவ்வொரு மழைக்காலத்திலும் எறும்புகள், பறவைகள் சேகரிக்கும் பழக்கத்தை நமக்கு சொல்லி தந்துகொண்டு தான் இருக்கு
‘ஆரம்பத்தில் கஷ்டங்கள் அதிகமாகவே இருந்தது. கிராம மக்களின் குடிநீர் ஆதாரத்துக்காகக் கிராமத்தை சுற்றி பல இடங்களில் போர் போட்டோம். பல ஆயிரம் அடி ஆழ் துளைகள் இறக்கியும் தண்ணீர் கிடைக்கவில்லை. எல்லா போர் வெல் திட்டமும் ஃபெயிலியர் தான் ஆனது. நீர் தட்டுப்பாட்டால் விவசாயமும் பாதிக்க ஆரம்பிச்சுது.
கிராமப் புறங்களில் விவசாயம் தான் பிரதானம். அதில் பாதிப்பு வந்தா அடிப்படை வாழ்வாதாரத்திற்கே பிரச்சனை வரும்னு யோசிச்சப்பத்தான் ஊரை சுற்றி குளங்கள் வெட்டி நீரை சேமிக்கலாமான்னு முடிவு செய்தோம். அதன் பிறகு தான் ராஜஸ்தான் திட்டத்தை அமல் படுத்தினோம். இன்று வெயில் காலத்தில் எந்த வித பாதிப்பும் இன்று எங்கள் கிராமம் செலிப்பாக இருக்கின்றது என்கிறார் புன்னகையுடன் சுமதி.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi