Beauty

கோடையில் முடி கொட்டுவதை தடுக்கும் எளிய தெரபிகள்: வீட்டிலேயே செய்யலாம்!

Mohana Priya  |  Apr 23, 2019
கோடையில் முடி கொட்டுவதை தடுக்கும் எளிய தெரபிகள்: வீட்டிலேயே செய்யலாம்!

இந்த கோடை காலம் வந்தாலே ஒரே டென்ஷன் டென்ஷன் தான், வேர்வை ஒரு பக்கம் என்றால் இந்த முடி(hair) கொட்டுவது மற்றோரு பக்கம் பிரச்சணை தருகின்றது. கொத்து கொத்தாக சிலருக்கு கோடையில் முடி(hair) கொட்டுவதை பார்த்திருப்போம்.

இதற்கு எல்லாவற்றிற்கும் காரணம் டென்ஷன், கவலை மற்றும் மன உளைச்சல்கள் தான் என மனோ தத்துவம் சொல்கின்றது. சரி விசயத்திற்கு வருவோம், இதை எப்படி கட்டுப்படுத்துவது. அதற்கு தான் கீழே சில டிப்ஸ்கள் கொடுத்திருக்கின்றோம். இதை பின்பற்றினால் கட்டாயம் முடி(hair) கொட்டுவதை தடுக்கலாம்.


தெரபி முறைகள்
ரிலாக்ஸ் தெரபி
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இயல்பாகவே முடி(hair) உதிர்வு அதிகமாக இருக்கும். கவலை, கோபம் மற்றும் பதற்றம் ஆகியவைதான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துபவை. ஆயில் மசாஜ் செய்துகொள்வதாலும், யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவற்றைத் தொடர்ந்து செய்வதாலும் உடலும் மனமும் தளர்வடையும் (ரிலாக்ஸ் ஆகும்). மசாஜ் தெரபி மற்றும் ரிலாக்ஸ் தெரபி ஆகிய இரண்டையும் தொடர்ந்து செய்து வந்தால் மூன்று மாதங்களில் முடி(hair) உதிர்வது நின்று, ஆரோக்கியமாக முடி(hair) வளர ஆரம்பிக்கும். பிரசவத்தாலும், தீவிர மன உளைச்சலாலும், முடி(hair) உதிர்வு பிரச்னையை எதிர்கொள்கிறவர்கள் இந்த இரு சிகிச்சைகளையும் மேற்கொள்ளலாம்.

அரோமா தெரபி
அரொமா ஆயில்களால் தலையில் மசாஜ் செய்யும்போது, பல வகையான பலன்கள் நமக்குக் கிடைக்கும். லாவெண்டர் ஆயில், ரோஸ்மேரி ஆயில், செடார்வுட் ஆயில், பெப்பர்மின்ட் ஆயில் ஆகியவை கூந்தல் வளர்ச்சிக்கு துணைபுரியக்கூடியவை. ஆனால் இவற்றை அப்படியே உபயோகிக்கக் கூடாது. தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொண்டு, மேலே குறிப்பிட்டுள்ள அரோமா ஆயில்களில் ஒன்றை 1 சொட்டு அளவு மட்டும் சேர்த்து, தலையில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால், தலைக்கு ரத்த ஓட்டம் சீராகப் பாயும். முடியின்(hair) நுனி முதல் அடி வரை எண்ணெயில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை இதன் மூலம் எடுத்துச் செல்லலாம். இது, முடியின்(hair) வேர்கள் பலமாகவும், சீராக வளர்வதற்கும் தூண்டும்.

வெங்காயம் மற்றும் பூண்டு
சிலருக்கு பூச்சி வெட்டால், தலையில் முடியில்லாமல்(hair) ஆங்காங்கே வழுக்கை விழுந்ததுபோலத் தோன்றும். இதற்குச் சிறந்த மருந்து, வெங்காயம்தான். வெங்காயச் சாற்றை தலையில் தேய்த்து, நன்கு மசாஜ் செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தலையை நன்கு அலச வேண்டும். இப்படி வாரத்துக்கு மூன்று முறை தொடர்ந்து ஆறு மாதங்களுக்குச் செய்துவர, பூச்சி வெட்டு மற்றும் பொடுகுத் தொல்லைகள் நீங்கும். முடியின்(hair) வேர்கள் வலுவடையும். வெங்காயம் மட்டுமல்லாமல் பூண்டும் மேலே குறிப்பிட்டுள்ள பலன்களை அளிக்கக்கூடியது. தினமும் இரண்டு முறை பூண்டின் சாற்றை தலையில் தேய்துவந்தால், மூன்றே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

மனோவசியம்
முடி(hair) உதிர்வுக்கு மேலும் ஒரு முக்கிய காரணம், எதிர்மறை எண்ணங்கள் நிறைந்த மனரீதியான பிரச்னைகளே. ‘ஹிப்னோதெரபி’ (Hypnotherapy) எனப்படும் மனோவசியப் பயிற்சியைக் கொடுப்பதன் மூலம் ஒருவருக்கு, தன் மீது இருக்கும் மரியாதை மற்றும் நம்பிக்கையைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்யலாம். அதனால் மன உளைச்சல் குறையும், முடி(hair) உதிர்வதும் குறையும். ஹிப்னோதெரபி பயிற்சியை எடுத்துக்கொள்வதால், உதிர்ந்த இடத்திலும்கூட முடி வளர்வதை சில ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

ஊட்டச்சத்து அவசியம்
ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடி(hair) உதிர்வு ஏற்படலாம். ஆரோக்கியமான கூந்தலுக்கு புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகள் அவசியம். கேரட், பச்சைக் காய்கறிகள், மிளகு, எலுமிச்சை, திராட்சை, உலர் பழங்கள், மீன், முட்டை போன்ற உணவுகள் கூந்தலை அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுபவை.

மேலே கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி முடி கொட்டுவதற்கு டாட்டா சொல்லுங்கள்.

பெண்களிடம் ஆண்களுக்கு மிகவும் பிடித்த அந்தரங்க ரகசியங்கள்!

மென்மையான பாதத்தை பெற வீட்டிலேயே இனி பெடிக்யூர் செய்யலாம்!

திருமணத்திற்கு சிறந்த பட்டுப் புடவை தேர்வு செய்யும் முறைகள்!

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Beauty