Beauty

பாக்னே – முதுகில் வரக்கூடிய முகப்பருக்களை எளிதில் நீக்குவது எப்படி? (நிரந்தரமாக!)

Nithya Lakshmi  |  Jan 28, 2019
பாக்னே –  முதுகில் வரக்கூடிய முகப்பருக்களை எளிதில் நீக்குவது எப்படி? (நிரந்தரமாக!)

 

பாக்னே எனும் முதுகில் வரும் பருக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உங்கள் முகத்தில் தாடை வரிகளில் பெரும்பாலும் பருக்கள் அல்லது அக்னே இருந்தால், இது முதுகில் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இதனால் ஏதேனும் ஒரு பேக்லெஸ் பிளவுஸ் அல்லது டாப் அணிவது மிக சங்கடமாக இருக்கும்! இனி அந்த கவலை வேண்டாம். நம் முகத்தை ஜொலிக்க வைக்க செய்யும் முயற்சிகளை முதுகில் இருக்கும் பாக்னேவுக்கும்  செய்தால் இதை சுலபமாக நீக்கி விடலாம்.

இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறோம். பின்பற்றி பயனளியுங்கள்.

எக்ஸ்போலியெட்…எக்ஸ்போலியெட்…எக்ஸ்போலியெட்! (Exfoliate)

(உங்கள் தோலில்  உள்ள அழுக்கை / டெட் செல்சை  தளரவைக்க )

உங்கள் முதுகில் இருக்கும் அக்னேவை சரி செய்ய முதலில் அதில் இருக்கும் டெட் செல்சை அகற்றவேண்டும். அதற்கு எக்ஸ்போலியெட் செய்வது அவசியம்.  தென் , எலுமிச்சை, ஒலிவ் எண்ணை மற்றும் சக்கரை இவை அனைத்தையும் கலந்து ஒரு ஸ்கரப்பை (scrub) தயார் செய்து அதை உங்கள் முதுகில் பூசி மிதமாக மசாஜ் செயுங்கள். சிறிது நேரம் கழித்து  கழுவி விடுங்கள்.

குளியல் முறை  –

எப்சோம்  சால்டில் குளியல் (epsom salt) – உங்கள் பாத் டப்பில் நல்ல வெதுவெதுப்பான தண்ணீரில் கடல் உப்பை (இரண்டு கப்)  சேர்க்கவும். அதில் நீங்கள் குளிக்கும் முன் ஒரு 10 -15 நிமிடம் அமர்ந்து இருக்கவும். எளிதில் உங்கள் பாக்னேவை நீக்க ஒரு சிறந்த வழி இதுவே!  

ஓட்மீல் பாத் உங்கள் பாக்னேவை நீக்க இனொரு வழி. ஓட்மீளில் சபோனின்ஸ் (saponins) எனும் ஒரு அங்கம் உள்ளது. இது உங்கள் பாக்னேவை (bacne)மற்றும் அதில் இருக்கும் டெட் செல்சி சரி செய்ய உதவும்.

அக்னே வாஷ் (Acne wash)  – சாலிசிலிக் ஆசிட் கொண்ட ஏதேனும் ஒரு அக்னே வாஷை பயன்படுத்துங்கள். இது உங்கள் சருமத்தில், பருக்கள்/முகப்பரு வருவதை நீக்க உதவும்.

POPxo பரிந்துரைக்கிறது –

நியூட்ரோஜெனா அக்னே வாஷ் (Rs.549)

மீரா பெல்லே டீ ட்ரீ அக்னே பாடி வாஷ் (Rs.319)

மொய்ஸ்சுரைசர் –

குளித்த உடன் ஏதேனும் ஒரு மொய்ஸ்சுரைசர் உங்கள் முதுகுக்கு அவசியம். அது சாலிசிலிக் ஆசிட் கொண்ட லோஷன் ஆக இருந்தால், அதிக சீபம் உற்பத்தியாவதை கட்டுப்படுத்தி பருக்கள் வராமல் காக்க உதவும்.மேலும் இது துளைகளை திறந்து அதை சுருக்க வைக்க உதவும். இது ஒரு ஸ்கரப்பை விட மெதுவாகவும் நன்றாகவும்  உங்கள் சருமத்தில் வேலை செய்யும். 

அலோ வேறா ஜெல் அழற்சியால் வரக்கூடிய பாக்னேவை தடுத்து முதுகில் இருக்கும் பாக்னேவை ஆற்ற உதவுகிறது.

டிப் – குளித்த உடனே உங்கள் முதுகில் மொய்ஸ்சுரைசர் தடவ மறக்காதீர்

POPxo பரிந்துரைக்கிறது – நியூட்ரோஜெனா அக்னே வாஷ் மொய்ஸ்சுரைசர் (ஆயில் பிரீ ) (Rs.375)

இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்கவும் –

உங்கள் சருமத்தை சுவாசிக்க விடுங்கள். மேலும், நீங்கள் உடல் பயிற்சியை முடித்த உடனே குளிப்பது நல்லது. இதனால், உங்கள் உடம்பில் சேர்ந்திருக்கும்  வேர்வையினால் சீபம் உற்பத்தி ஆவதை எளிதில் தவிர்க்கலாம்.

டயட் –

உங்கள் டையேட்டில் ஜங்க் பூட் எனும் போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை மற்றும் எண்ணெய் பலகாரங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

துண்டு –

கடினமாக தொடைப்பதை தவிர்க்கவும். எப்போதும் குளித்த உடனே ஒரு மென்மையான துணியில் ஈரத்தை ஒத்தி எடுப்பது அவசியம்.

இனி உங்கள் பேக்லெஸ் டாப் , டீப் கட் பிளவுஸ் அனைத்தையும் அணிந்து திகைப்பூட்டும் தோற்றத்தில் செல்லுங்கள்!!! 

படங்களின் ஆதாரங்கள் – பிக்ஸாபெ,ஜிபி,பேக்செல்ஸ்,இன்ஸ்டாகிராம்   

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

Read More From Beauty