அனைவருக்கும் பாதங்களை (feets) அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். பொதுவாக ஆரோக்கியமானவர்களாக இருக்கும் அனைவருக்கும் பாதங்கள் அழகாக இருக்கும் என்ற கூற்று நிலவுகிறது. ஒரு சிலருக்கு கால்களை நன்கு கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளாததன் காரணமாகவும், கடிமான செருப்பு அணிவதாலும் பாதங்களில் வெடிப்பு உண்டாகும். பாத வெடிப்புகள் நீங்கவும், அழகான கால்களை பெறவும் சில எளிமையான வழிகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.,
pixabay
பாத வெடிப்புகள் நீங்க
- பாதங்கள் (feets) அழுக்காகாமல் பார்த்து கொண்டாலே வெடிப்புகள் வராமல் தடுக்கலாம். கால் வெடிப்பு தொல்லை இருப்பவர்கள் வீட்டுக்குள் அணியும் காலணிகளை அணிந்து கொள்ளலாம்.
- பாத வெடிப்புகள் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போதே குளிக்கும் போது சொர, சொரப்பான கல்லில் காலை வைத்து தேய்த்தால் சிறு வெடிப்புகள் நீங்கும். ஆரம்ப கட்டத்திலேயே பூட் க்ரீம் போட்டு தேய்த்தாலும் வெடிப்புகள் அகலும்.
- வெடிப்புகள் உள்ள பகுதியில் வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி வந்தால் விரைவில் சரியாகும்.
- எலுமிச்சம் பழச்சாறு, பயித்தம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவில் பொடி செய்து பூசினால் கால்வெடிப்பு மறைந்து கால் பளபளப்பாகும்.
- தினமும் இரவில் தூங்குவதற்கு முன்னர் கால் பொறுக்கும் சூட்டில் வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து பாதங்களில் லேசான ஸ்க்ரப்பர் கொண்டு தேய்தால் வெடிப்பு மறையும்.
pixabay
- ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சம் பழத்தோலை கால் பாதங்களில் தேய்க்க வேண்டும். இதனால் காலில் உள்ள அழுக்கு மற்றும் கிருமிகள் மறைந்து கால்கள் பளபளப்பாகும்.
- மருதாணி இலையுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வந்தால் பாதம் அழகாக மாறும். இதனால் கால் வெடிப்பு நீக்குவதோடு உடலும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்கிறது.
- பாதங்களில் வெடிப்பு இருந்தால் நல்லெண்ணெயில் 2 சொட்டு டீ ட்ரீஆயில் கலந்து வெடிப்புகளில் தடவி வரலாம். டீ ட்ரீ ஆயில் கிடைக்கவில்லை என்றால் லாவண்டர் ஆயிலுடன் 4 சொட்டு ஆலிவ் ஆயில் கலந்து பாதங்களில் தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் பாதங்களில் ஈரத்தன்மை பேலன்ஸாகி வெடிப்பு பிரச்னை போயே போய் விடும்.
- பாத வெடிப்பு (feets) தோலில் உள்ள எண்ணெய் பசை குறைவதால் ஏற்படுகிறது. சோப்பு தண்ணீரில் நீண்ட நேரம் நிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காலுறைகளை சுத்தமாக துவைத்து அணிய வேண்டும். இவற்றை செய்து வந்தாலே பாத வெடிப்பில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம்.
அழகான கால்களை பெற
- கால்களுக்கும் சில பராமரிப்புகளைச் செய்தால் மட்டுமே, அவை பிசுக்கு மற்றும் தழும்பு இல்லாமல் பளிச்சென்று ஜொலிக்கும். சரி, கால்கள் வாழைத்தண்டுப் போல ஜொலிப்பதற்கு என்னென்ன கேர் எடுக்க வேண்டும்?
- நார்மல் ரேசர் பயன்படுத்தி கால்களில் இருக்கும் முடிகளை ரிமூவ் செய்வதற்கு முன், ஏதாவது ஒரு ஆயிலையோ அல்லது குளியல் சோப் நுரையையோ தடவி விட்டுச் செய்தால், கால்களின் சருமம் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.
- கால்கள் பொலிவிழந்து இருந்தால் கோகோ பட்டர் மசாஜ் செய்தாலும் பொலிவு கிடைத்து விடும்.
pixabay
- சர்க்கரையையும் உப்பையும் சமமாக எடுத்து ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து கால்கள் மற்றும் பாதங்களில் மசாஜ் செய்தால் அந்தப் பகுதிகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாய்ந்து கால்கள் உயிர்ப்புடன் மின்னும்.
- பாதாம் மற்றும் ஆலிவ் ஆயிலை கலந்து கால்களின் மேல் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். இந்த ஆயில் ஒரு மணி நேரம் அப்படியே கால் சருமத்தில் ஊற வேண்டும். பிறகு கடலை மாவு 5 டீஸ்பூன், சர்க்கரை 2 டீஸ்பூன் கலந்து அதை ஈரக் கைகளால் தொட்டு தொட்டு காலில் பரபரவெனத் தேய்த்துக் கழுவினால் கால்களில் இருக்கிற முடிகள் உதிர்வதுடன் அழுக்கு, தழும்புகள் படிப்படியாகப் குறைந்து கால்கள் பளிச்சென்று ஆகி விடும்.
- மேலே கொடுக்கப்பட்டுள்ள சிம்பிள் டிப்ஸ்களை பயன்படுத்தி தயக்கமின்றி நடைபோடுங்கள்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.