Lifestyle

வீட்டில் இருக்கும் குழந்தைகளை விளையாட்டுடன் சேர்ந்த ஈடுபாட்டுடன் எப்படி வைத்திருப்பது ?

Meena Madhunivas  |  Nov 7, 2019
வீட்டில் இருக்கும் குழந்தைகளை விளையாட்டுடன் சேர்ந்த ஈடுபாட்டுடன் எப்படி வைத்திருப்பது ?

பள்ளிக்கூடம் விடுமுறை விட்டுவிட்டாலே போதும், குழந்தைகளுக்கு குதூகாலம் தான். ஆனால் தாய்மார்களுக்கு அது ஒரு சவால் நிறைந்த காலம். இருபினும், அந்த விடுமுறை நாட்களை வீணாக கழித்து விடாமல், உங்கள் குழந்தைகளை ஏதாவது ஒரு செயலில் ஈடுபாட்டுடனும்(kids entertain) , மகிழ்ச்சியுடனும் வைத்திருக்க வேண்டும். இது அவர்கள் சோர்ந்து விடாமலும், ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ளவும் உதவியாக இருக்கும். ஆனால், எப்படி உங்கள் குழந்தையை ஈடுபாட்டுடன் வைத்திருப்பது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றாலம், பின்வரும் குறிப்புக்கள் உங்களுக்கானது. இந்த தொகுப்பை தொடர்ந்து படியுங்கள்!

1. செடி வளர்ப்பு

இன்று பல குழந்தைகள் செடி வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். செடிகள் வளர்ப்பது, மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை நீங்கள் உங்கள் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். இது அவர்கள் பொறுப்போடு வளர்வது மட்டுமல்லாது, விவசாயம் மற்றும் மரங்கள் வளர்ப்பதின் முக்கியத்துவத்தையும் கற்றுக்கொள்ள உதவும்.

2. செல்லப்பிராணிகள்

Pexels

சிறிய கிளிகள் முதல், மீன், கோழி, முயல், எலி, நாய் என்று பல வகை செல்லப்பிராணிகள் உள்ளன. அவற்றில் உங்கள் குழந்தைக்கு பிடித்ததும், மற்றும் உங்கள் வீட்டில் வளர்ப்பதற்கு ஏதுவான ஒரு செல்லப்பிராணியை தேர்வு செய்து வளர்க்க முயற்சி செய்யுங்கள். அவற்றை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை உங்கள் குழந்தைக்குத் தாருங்கள். மேலும் அவற்றுடன் அன்பாகவும், அக்கறையோடும் இருக்க கற்றுக் கொடுங்கள். இது அவர்கள் அன்பு, பாசம், பரிவு போன்ற உணர்வுகளை புரிந்து கொள்ள உதவும்.

3. சமையல்

ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ, எந்த பாகுபாடும் இல்லாமல், உங்கள் குழந்தைக்கு சமையல் செய்ய கற்றுக் கொடுங்கள். அவர்களை ஏதாவது ஒரு எளிமையான சமையல் செய்ய உடன் இருந்து உற்சாகப்படுத்தி கற்றுக் கொடுங்கள். மேலும் சமைக்கும் போது, உணவின் முக்கியத்துவம், இந்த பூமியில் பல ஜீவன்கள் உணவு இல்லாமல் தவிப்பது மற்றும் மேலும் பல விடயங்களை புரிய வையுங்கள். அவன் ஒரு அழகான சமையல் கலையை கற்றுக்கொள்ளவும், அதில் ஆர்வம் பெறவும் இது உதவும்.

4. வீட்டு வேலைகள்

உங்கள் குழந்தைகளை வீட்டு வேலை செய்வதில் ஈடுபடுத்துங்கள். குறிப்பாக அவர்களது பொருட்களை அவர்களே முறையாக எடுத்து வைக்க வேண்டும். புத்தகங்கள், துணிகள், மற்றும் பிற பொருட்களை சரியான இடத்தில், சரியான அடுக்கி வைக்க வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள். மேலும் வீட்டி சுத்தம் செய்வது, வீட்டை அலங்கரிப்பது, என்று பல வேளைகளில் ஈடுபடுத்துங்கள். இதனால் அவர்கள் பொறுப்புடன் வளர உதவியாக இருக்கும்.

5. நூலகம்

Pexels

உங்கள் குழந்தைகளுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தை கொண்டு வருவது முக்கியம். முடிந்த வரை, உங்கள் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் நூலகத்திற்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்கள் புத்தம் படிக்க ஊக்கவியுங்கள். கதை புத்தகங்கள், செயல்முறை விளக்கப் புத்தகங்கள், அறிவியல் சார் புத்தகங்கள் என்று, அவர்களுக்கு எதில் ஆர்வம் (ஈடுபாடு) அதிகமோ, அதை படிக்க ஊக்கவியுங்கள்.

6. கைவினைப் பொருட்கள் செய்வது

வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தும், களிமண், மரம், பாசிமணி போன்ற பொருட்களை வைத்தும் உங்கள் குழந்தைகள் ஏதாவது கைவினை பொருட்களை செய்ய கற்றுக் கொடுங்கள். இது அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்குவதோடு, அவர்களது மூளைத் திறன், கற்பனைத் திறன் மற்றும் ஆர்வம் போன்றவற்றை அதிகரிக்க உதவும்.

7. பூங்கா மற்றும் கடற்கரை செல்வது

தினமும், அல்லது நேரம் கிடைக்கும் போதெல்லாம், உங்கள் குழந்தைகளை, குழந்தைகள் அதிகம் சேரும் இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். குறிப்பாகபூண்கள், கடற்க்கரை போன்ற இடங்களுக்கு அதிகம் அழைத்து செல்லுங்கள். அங்கு இருக்கும் பிற குழந்தைகளுடன் விளையாடுவதால், அவர்களுக்கு நட்பு வளரும். மேலும் அவர்களுடன் சேர்ந்து பல விடயங்களை அவர்கள் கற்றுக்கொள்ள முயற்சி செய்வார்கள்.

8. பட்டம் விடுதல்

Pexels

இது இன்று பலர் மறந்து வருகின்றனர். ஆனால், இது ஒரு சுவாரசியமான, மற்றும் ஒருவரின் திறன் மற்றும் கவனத்தை அதிகரிக்க உதவும் ஒரு சிறந்த விளையாட்டாகும். உங்கள் குழந்தைகளை அவர்களாகவே பட்டம் தயாரித்து, மொட்டைமாடியில் இருந்தோ, பூங்கா அல்லது திறந்த வெளியில் இருந்தோ விட கற்றுக் கொடுங்கள். இந்த விளையாட்டு அவர்களுக்கு உற்சாகத்தை தரும்.

9. மீன் பிடித்தல்

உங்கள் வீட்டின் (home) அருகாமையில், குளம், ஏறி, கிணறு அல்லது கண்மாய் இருந்தால், அங்கு அழைத்து சென்று மீன் பிடிக்க கற்றுக் கொடுங்கள். இது அவர்கள் ஒரு திறனை வளர்த்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக இருப்பதோடு, சுவாரசியமாகவும் இருக்கும். 

 

மேலும் படிக்க – “ஹெலிகாப்டர் பெற்றோர்” – உலகின் மிக நீண்ட தொப்புள் கொடி பற்றி அறிந்ததுண்டா ?

பட ஆதாரம்  – Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Lifestyle