Home & Garden

உங்கள் வாசலை அலங்கரிக்க சில கண்ணை கவரும் பொங்கல் கோலங்கள்!

Nithya Lakshmi  |  Jan 10, 2019
உங்கள் வாசலை அலங்கரிக்க சில கண்ணை கவரும் பொங்கல் கோலங்கள்!

பொங்கல் என்றாலே வண்ணங்கள், கொண்டாட்டம், குதூகலம்,  என்று தமிழ்நாடே உற்சாகம் ஆகிவிடும். விவசாயிகளை போற்றி இருக்கும் கதிர் அறுப்பு கொண்டாடும் பண்டிகை பொங்கல் ஆகும்.

வட இந்தியாவில் ஹோலி, வண்ண பொடியை கொண்டு வண்ணமயம் ஆவது போல், தென் இந்தியாவில் வண்ணமிக்க பொங்கல் கோலம் (pongal kolam) கொண்டு பிரகாசம் ஆகிறது.இந்துக்கள் சம்பிரதாயம் ஒவ்வொன்றிலும் ஒரு அறிவியல் காரணம் உள்ளது.கோலம் அதிகாலையில் போடுவதுனால், சுத்தமான ஆக்சிஜென் கிடைக்கிறது.மேலும் உடல் இயக்கத்தின் காரணமாக இரத்தம் ஓட்டம் அதிகரித்து, உடல் சுறுசுறுப்பு அடைகிறது.
அரிசி மாவில் போடப்படும் கோலம், பிணி பூச்சி எறும்புகளுக்கு உணவாக கிடைக்கிறது. அதனால்தான் கோல பொடியும் , அரிசி மாவும் கொண்டு  வீட்டு வாசலில் வரையப்படுகிறது.

தமிழ்நாட்டில் வருஷம் முழுவதும் வாசலில் கோலம் போட்டாலும், பொங்கல் திரு நாள் அன்று கோலம் போடுவதில் ஒரு தனி மகிழ்ச்சி தான். சரி! கோலங்களில் பல டிசைன்கள் , பல வண்ணங்கள்  இருப்பதால், இதில் எதை போடுவது, எங்கு இருந்து ஆரம்பிப்பது என்று குழப்பமாக இருக்கிறதா?  இங்கு நாங்கள் சில அழகிய பிரீ ஸ்டைல் கோலங்களை உங்களுக்காக அளித்திருக்கிறோம். இதை முயற்சி செய்து இந்த பொங்கல் பண்டிகைக்கு உங்கள் வாசலை வண்ணமயம் ஆக்கி அசத்துங்கள்! 

புள்ளி வைத்துதான் கோலம் போடவேண்டும் என்றில்ல. புள்ளி இல்லாமலும் போடலாம்.அதுதான் பிரீ ஸ்டைல் கோலம்.

ஐந்து இதழ் கோலம் –

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

வட்ட வடிவில் கனத்த புள்ளிகள் வைத்து,அதை சுற்றி ஐந்து இதழ் வடிவில் ஊதா வண்ணப் பொடியை பரவலாக தூவி விரல் நுனியில் மாடர்ன் ஆர்ட் போல வரைய வேண்டும். இதழ் நடுவில் இருக்கும் இடைவெளியில் டைமென்ட் வடிவில் வரைந்து விட்டால் நிரப்பமாக இருக்கும்.

சூரியகாந்தி பூ :

 

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

சிறிய வட்டமிட்டு சூரியகாந்தி பூ போல இதழ்கள் வரைந்து அதை சுற்றி மீண்டும் வட்டமிட்டு அதில் சுருள் போல டிசைன் போட்டு, மீண்டும் அதை சுற்றி வட்டமிட்டு, இது போல நான்கு அடுக்குகள் நெருக்கமான டிசைன்ல எடுப்பாக இருக்க, புர்புல் -பிங்க் கலர்  சூப்பரா இருக்கும்.

பொங்கல் பானை (புது பதிப்பு ):

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

பானை இல்லாமல் பொங்கல் கோலமா?! எப்படி விட முடியும். அதான்! இப்டி ஒரு மாடர்ன் வெர்சன். எப்போதும்,ஒற்றை பொங்கும் பொங்கல் பானை, இருபுறம் கரும்பு என பண்டிகை சின்னத்தை வண்ண கோலத்தில் விளக்கி இருப்பீர். புள்ளி வைக்காமல் அதே பொங்கல் பானையை வெள்ளை மயில் மீது ஏற்றி, இப்டி ஒன்றை முயற்சி செய்து பாருங்களேன்! 

 

பிங்க் & பர்புல் :

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

அதிகமாக பெண்களுக்கு பிடித்த நிறம் பிங்க் & பர்புல். வட்டமிட்டு சுற்றி இதழ்கள் வரைந்து அதை மீண்டும் வட்டமிட்டு, மெஹந்தி டிசைன்ல வருவது போல ஒவ்வொரு வரிசையிலும் அழகான முறையில் வரைந்த பின்னர், பிங்க் பர்புல் என்று ஒவ்வொரு வரிசைக்கும் மாற்றி மாற்றி வண்ணம் தீட்ட வேண்டும். இதனை மேலும் அழகு படித்த தீப விளக்கை பயன்படுத்தலாம்.

சதுர கோலம்:

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

மிகவும் மாடல் லுக் தரும் இந்த கோலம்.காரணம் இதில் செய்ய படும் நுனுக்கமான வேலைகள்.குட்டி குட்டி வட்டத்தை ஊதா நிறத்தில் நெருக்கமாக போட்டு அதில் கிளி பச்சை நிறத்தை கொண்டு பூர்த்தி செய்ய வேண்டும். சாதாரணமான கோலம் போல இதழை வரையாமல், சாய்ந்து சதுரம் போல போடுவது மேலும் அழகை கூட்டும்.

வண்ண மயில் கோலம் :

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

தோகையுடன் உள்ள மயில் கோலம் பசுமையாக இருக்கும். மயிலின் நிறமாக, ராமர் பச்சை ஊதா என்ற வண்ணம் தீட்டும் போது, இயற்கை எழில் மிகு அழகை பெற முடியும்.

இப்போதெல்லாம், பிரீ ஸ்டைல் கொல்லத்தை விட, சில கருவிகள் அல்லது சில பொருட்களை உபயோகித்து சுலபமாக ரங்கோலி கோலம் வரையலாம் . அந்த வரிசையில் சில கோலங்கள் உங்களுக்காக… 

 மூன்று மலர் கோலம் –

பட ஆதாரம் – யு ட்யூப்

பர்புல் நிற வண்ண பொடியை நீல வடிவில் இழுத்து விடணும்.வட்டத்தை சுற்றி சூரியன் போல போட வேண்டும்.ஒரு விரலை வைத்துக்கொண்டு கோடு போல இழுத்து விட்டால் பூ போன்ற வடிவம் கிடைக்கும்.இதற்கு எடுப்பாக பிங்க் நிறத்தில் இருபுறமும் அதே போல வரைய வேண்டும்.எடுப்பாக இருக்க பச்சை நிறத்தில் இலையை வரைந்தால் மிக அழகாக இருக்கும்.

சிம்பிள் கோலம் :

பட ஆதாரம் – யு ட்யூப்

சிகப்பு காவி நிறம் கலந்து பூவை ஏழு இதழ் உள்ள பூவில் இரு இதழ் இல்லாமல் ஐந்து இதழ் பூவாக வரைந்து, இரு பூக்கள் வரைய வேண்டும்.அதை இணைக்க மெஹந்தி டிசைன் சுருள் மாடல் செய்தால் செம ட்ரெண்டி ஆக இருக்கும்.

 பூவில் ஒரு ட்விஸ்ட் – 

பட ஆதாரம் – யு ட்யூப்

 எழில் மிகு இக்கோலத்தில், கோலப்பொடியை அதிகமான அளவில் பயன்படுத்தி, வட்டமிட்டு பின்னர், அதனை விரல்களால் பூ போல வரைந்து.. எப்போதும் போல வட்டத்தில் எல்லை வரையாமல் நெளி கோடுகளை மெரூன் கலர் இணைத்து பார்க்க பூ போலவே தெரிகிறது.இந்த நெளிவை நிரப்ப பச்சை நிறத்தில் புதர்கள் போல வடிவமைத்தது மிக சிறப்பு. வண்ணம் பயன்பாடு மிகவும் எடுப்பாக உள்ளதால் கண்ணுக்கு விருந்தாக உள்ளது.

அதே பூ : வேறு டிசைன்களில்

பட ஆதாரம் – யு ட்யூப்

மேலே சொன்ன பூ டிசைன் போலத்தான் இதுவும்.ஆனால் இதன் சிறப்பு வண்ணகள் தான். உள்ளே லைட் கலர், வெளியே டார்க் கலர் என்று கண்ணை கவரும் விதமாகவும் இருக்கிறது.இதழ்களில் உள்ள கோடுகள் மிக நேர்த்தியானதாக இருப்பது கூடுதல் ஈர்ப்பு தருகிறது. எளிமையான முறையில் அழகிய வண்ண கோலம்.

 

பட ஆதாரம் – யு ட்யூப்

இதில் பூவை சிறிய வடிவில் வைத்துக்கொண்டு,  சுற்றிலும் கலை கற்பனைக் கொண்டு நிரப்பபட்டுள்ளது.

பட ஆதாரம் – யு ட்யூப்

இது போன்ற கோலத்தை, பெரிய இடமாக இருப்பின், பெரிய கோலத்தை சுற்றி வரைந்தால் மிக கவர்ச்சியாக இருக்கும்.படிகள், பூஜை அரை போன்ற இடத்திற்கு அலங்காரம் செய்ய இந்த டிசைன் பெஸ்ட் சாய்ஸ்.

அகல் விளக்கு, பரங்கி பூ போன்ற அலங்கார பொருட்களை பயன்படுத்தி கோலத்தை மேலும் அலங்கரிக்கலாம்.

வீட்டு வாசலை அலங்கரித்து, தெருக்கள், ஊர், நாடு, என அனைத்தும் வண்ணத்தில் மிதந்து, தித்திக்கட்டும் இந்த தை திருநாள்!

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்  

 

மேலும் படிக்க – பண்டிகை நாட்களுக்கு ஏற்ற பாரம்பரிய உடைகளுக்கான 10 சிறந்த பிராண்டுகள்!

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Home & Garden