Dating

உங்களவர் ‘துரோகம்’ செய்கிறார் என்பதற்கான முக்கிய ‘அறிகுறிகள்’ இதுதான்!

Niyati Budhiraja  |  Feb 27, 2019
உங்களவர் ‘துரோகம்’ செய்கிறார் என்பதற்கான முக்கிய ‘அறிகுறிகள்’ இதுதான்!

காதலித்து திருமணம் செய்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது பெற்றோர் பார்த்து வைத்த திருமணமாக இருந்தாலும் சரி, அனைத்து வகையான
திருமணங்களிலும் துரோகம்(cheating) என்பது இருந்து கொண்டேதான் உள்ளது. ஒருசிலர் இதில் வெளிப்படையாக துணைக்கு(Partner) துரோகம் செய்வதை ஒப்புக்கொள்வார்கள். ஆனால் வேறு சிலரோ பிறர் கண்டுபிடிக்க முடியாத வண்ணம், துணைக்கு(Partner) தெரியாமல் தனது தவறினை மூடி மறைத்து தொடர்வார்கள். திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம் என கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு.

அதனை நிரூபிப்பது போல கள்ளத்தனமாக உறவைத் தொடர்வதில், வைத்துக்கொள்வதில் இவர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். குறிப்பாக தங்கள் துணைக்கு(Partner)  தெரியாமல் இதுபோன்ற உறவுகளைத் தொடர்வதில் இவர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். இதுபோல துரோகம்(cheating) செய்பவர்கள் சிலநேரங்களில் தங்களது செயல்கள் வழியாக தங்கள் துணைக்கு(Partner)  அதனை மறைமுகமாக உணர்த்துவார்கள். அது என்ன மாதிரியான அறிகுறிகள் (Signs) என்பதனை இங்கே பார்க்கலாம்.

1.சாக்குபோக்குகள்

உங்களவர் அடிக்கடி உங்களிடம் ஏதாவது சாக்குபோக்குகள் சொல்லிக்கொண்டே இருப்பார். காலை, மாலை இரவு என எந்நேரமும் ஆபிஸ் மீட்டிங் இருக்கிறது என்றும் தான் பிஸியாக இருப்பதாகவும் அடிக்கடி கூறுவார். அப்படி இல்லை என்றால் வேலை தொடர்பான பயணங்கள் செல்வதாக, அவரது பாஸுடன் டின்னர்க்கு செல்வதாக இப்படி ஏதாவது ஒன்றை நீங்கள் நம்பும்படி சொல்லுவார். ஆனால் உண்மை நீங்கள் நினைப்பதை விட ட்விஸ்ட் மிகுந்ததாக இருக்கும். உங்களுடன் சேர்ந்து செல்லக்கூடிய பிளான்களை தவிர்ப்பார் அப்படி இல்லையெனில் தாங்கள் மிகுந்த பிஸி என உங்களிடம் அடிக்கடி சொல்வார். நேரடியாக உங்களுடனான மோதலையும், வாக்குவாதங்களையும் தவிர்ப்பார். ஏனெனில் தாங்கள் மாட்டிக்கொள்வதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

2. அதிக எச்சரிக்கை

ரகசிய உறவில் இருக்கும் ஒருவர் தன்னுடைய ரகசியங்களை மறைத்திட பெரிதும் முயற்சி செய்வார்கள். ஏதாவது கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க
நேர்ந்தால் அதிக எச்சரிக்கையுடன் பேசுவார்கள். சற்று கவனித்துப் பார்த்தால் உங்களுக்கே அந்த வித்தியாசம் புலப்படும். இதுபோன்ற அறிகுறிகள்(Signs) இருந்தால் கவனமுடன்(cheating) இருங்கள்.

3. நேரத்துக்கு நேரம்

ஏதாவது சாக்கு சொல்லி அடிக்கடி வெளியே செல்வார்கள். அவர்களை சந்திக்க செல்வதற்காக உங்களிடம் வந்து அடிக்கடி ஏதாவது காரணங்களை
சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இது நிலைமை எல்லை மீறிப்போய் விட்டதை உணர்த்தும். குறிப்பாக நேரத்துக்கு நேரம் மாறிக்கொண்டே
இருப்பார்கள்.

4. மொபைலும் கையுமாக

எப்போது பார்த்தாலும் மொபைலும், கையுமாக திரிவார்கள். தங்களது மொபைல் போனுக்கு பாஸ்வேர்ட் போட்டு வைத்திருப்பதுடன், மெசேஜிங் ஆப்களுக்கும் பாஸ்வேர்ட் போட்டு லாக் செய்து வைத்திருப்பார்கள். போன் பேச ஆரம்பித்தால் வெகுநேரம் பேசிக்கொண்டே இருப்பார்கள். ரெஸ்ட் ரூம் சென்றால் கூட போனுடன் பேசிக்கொண்டே செல்வார்கள். மொத்தத்தில் தங்கள் மொபைல் போனை யாரும் பார்ப்பதையோ, தங்கள் போனை பிறர் செக் செய்வதற்கு இவர்கள் ஒருபோதும் வாய்ப்பு அளிக்க மாட்டார்கள்.

5. நடிப்பு

நீங்கள் அவரை சந்தேகப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தாங்கள் இயல்பாக இருப்பது போல உங்களிடம் நடிப்பார். அதிக வேலையின் காரணமாகத்
தான் தாங்கள் இவ்வாறு நடந்து கொள்வது போல உங்களிடம் செல்லம் கொஞ்சுவார். இதுபோன்ற கூடுதல் முயற்சிகளே அவர் போலியாக இருக்கிறார் என்பதை உணர்த்தி விடும்.

6. டேட்டிங் ஆப்களில்

உங்களவர் எப்போதும் டேட்டிங் ஆப்களிலும், சமூக வலைதளங்களிலும் மிகுந்த ஆக்டிவாக இருப்பார். டேட்டிங் ஆப்கள் வழியாக தங்கள் விருப்பங்களைத் திறக்க முடியும் என அவர்கள் நம்புவார்.

7. என்னை தனியாக விடு

எல்லோருக்கும் கொஞ்சம் பிரைவசி தேவைப்படும் தான்.ஆனால் இதுபோன்ற நபர்கள் எப்போதும் என்னை கொஞ்சம் தனியாக விடு என்றே
கூறிக்கொண்டே இருப்பார்கள். தங்களை மிகுந்த பிஸியாகவும், வேலை அதிகம் இருப்பது போலவும் காட்டிக்கொள்வார்கள். ஆனால் உண்மை
என்னவெனில் அதுபோன்ற தருணங்களில் அவர்கள் வேறு ஒருவருடன் தங்களது நேரத்தை செலவு செய்துகொண்டு இருப்பார்கள்.

8. உங்களுடன் சேர்ந்து

வார விடுமுறை நாட்களில் நீங்கள் ஏதாவது திட்டமிட்டால் உறுதியாக வருகிறேன் என சொல்ல மாட்டார். வருகிறேன் என பட்டும் படாமல்
சந்தேகமாகவே பதிலளிப்பார். இதுபோல அவர் நடந்து கொண்டால் அவரது மனதில் வேறு ஏதோ திட்டமுள்ளது என அர்த்தம். வாழ்க்கை முழுவதும்
ஒரே நபருடன் இருக்க வேண்டும் என்ற எண்ணமே இவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தைத் தரும்.

9. செக்ஸில் ஆர்வம்

வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கும்போது படுக்கையில் உங்களவருக்கு ஆர்வம் குறையும். படுக்கையில் புதிய விஷயங்களை முயற்சித்திட
ஆர்வம் காட்ட மாட்டார்கள். படுக்கையில் நீங்கள் பொருத்தமான உள்ளாடைகள் அணியாமல் இருந்தால் கூட அதனைக் கண்டுகொள்ள மாட்டார்கள். இது அனைத்தும் உண்மையாக இருந்தால் அவர் உங்களுக்கு துரோகம்(cheating) செய்கிறார் என அர்த்தம்.

10 திடீர் ஆர்வம்

ஒரே இரவில் உங்களவரின் நடை,உடைகளில் மிகுந்த மாற்றம் ஏற்படும். படங்கள், இசை, புத்தகம் என அனைத்திலும் அவரது டேஸ்ட் மிக விரைவாக மாறியிருக்கும். திருமணம் ஆனதில் இருந்து இல்லாமல் திடீரென அவரது ரசனைகள் அனைத்தும் மாறினால் கண்டிப்பாக அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

11. உங்களை குற்றஞ்சாட்டுவார்

தான் செய்யும் தவறுகளை மறைக்க அவர் உங்கள்மீது குற்றஞ்சாட்டுவார். இதற்காக உங்கள் கவனத்தை திசைதிருப்பி உங்களுக்கு இந்த உறவில்
சிக்கல்கள் இருப்பதாக உங்களை நம்ப வைப்பார்கள். இது உறவு குறித்த மதிப்பினை நீங்கள் அதிகமாக உணரவேண்டும் என்பது போல இருக்கும்.
ஆனால் அவர் தவறான வழியிலேயே செல்வார்.

12. திடீர் கேள்விகள்

உங்கள் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியில் செல்வது குறித்து திடீரென கேள்வி எழுப்புவார். உங்கள் மீது பொறாமைப்படுவது போலவும், நீங்கள்
செய்யும் இதுபோன்ற செயல்களால் தான் அன்கம்பர்பிடளாக இருப்பது போலவும் காட்டிக்கொள்வார். தனது தவறுகளை மறைத்திட அவர் உங்கள் மீது தொடர்ந்து குற்றஞ்சுமத்த ஆரம்பிப்பார்.

13. லேப்டாப், மொபைல்

திடீரென அவரது மொபைலை உங்களிடம் இருந்து மறைத்து வைப்பார். ஒரு அவசரத்திற்கு நீங்கள் அவரிடம் லேப்டாப் கேட்டால் கூட கொடுக்க மாட்டார். எப்போதும் தனியாக இருக்க விரும்புவார். முடிந்தவரை உங்களிடம் இருந்து விலகியே இருப்பார். தனது மொபைலில் உள்ள மெசேஜ், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட ஆப்களுக்கு தனியாக பாஸ்வேர்ட் போட்டு லாக் செய்திருப்பார். எப்போதும் இல்லாமல் திடீரென தனிமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் அது வேறு ஒரு உறவில் அவர் இருக்கிறார் என்பதற்கான அறிகுறியாகும் (Signs).

14 நோ சண்டை

ஒருசிலர் திடீரென மனைவியுடன் எந்த சண்டையும் போடாமல், வாதங்கள் செய்யாமல் மிகவும் அமைதியாக இருப்பார்கள். இதனால் உறவு
பரிபூரணமாக இருப்பது போல நீங்கள் உணர்ந்தால் அது உண்மையில்லை. அவருடனான உங்கள் உறவு சமமாக இல்லாதது குறித்து அவர்கள் வருத்தம்
அடைய மாட்டார்கள். உங்கள் தேவைகளையும், நியாயமான கவலைகளையும் அலட்சியம் செய்வார். அவரது இதயம் உங்களுக்கு மிக நெருக்கமாக இல்லை, அது உங்களுக்கு சொந்தமானது இல்லை என உணரும்போது நீங்கள் அவரை கேள்விகள் கேட்கத் தொடங்குவீர்கள்.

15. அதிக இடைவெளி

தொடர்ந்து வேலை, மீட்டிங் போன்ற காரணங்களுக்காக அவர் உங்களிடம் இருந்து விலகி இருந்தால் பரவாயில்லை. ஆனால் காரணமேயில்லாமல்
அவர் உங்களிடம் இருந்து விலகி இருந்தால் நீங்கள் சற்று கவனமாக இருப்பது அவசியம். இந்த இடைவெளியால் அவரை நீங்கள் ஒரேயடியாக
இழக்கவும் கூடும்.

16. உன்னிடம் ஏற்கனவே

உங்களிடம் இருந்து பல விஷயங்களை மறைக்க அவர் முயற்சிக்கக்கூடும். இதுபோன்ற சூழலில் நீங்கள் அவருக்கு முக்கியம் இல்லாததால் எந்த
விஷயங்களையும் உங்களிடம் சொல்ல விரும்ப மாட்டார்கள். சில நேரங்களில் உன்னிடம் நான் ஏற்கனவே இதை சொன்னேனா? என பல்வேறு
விதங்களில் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள்.

17. அளவுக்கு அதிகமான பரிசுகள்

மனைவிக்கு, கணவன் பரிசுகள் கொடுப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் திடீரென காரணமேயில்லாமல் பரிசுகள் அதிகரிக்கும்போது அல்லது
அளவுக்கு அதிகமாக அவர் உங்களை புகழும்போது நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். தங்களது தவறுகளை மறைக்க அல்லது குற்ற
உணர்வுகளுக்கு ஆளாகும்போது இதுபோன்ற விஷயங்களை அவர் திடீரென செய்ய ஆரம்பிக்கலாம். அதனால் இதுபோன்ற விஷயங்கள் உங்கள்
வாழ்வில் நடந்தால் சற்று கவனமுடனேயே இருங்கள்.

18. தோற்றத்தில் அக்கறை

தோற்றத்தில் அக்கறை காட்டுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் திடீரென தனது தோற்றம், ஆடைகள் குறித்து அவர் அதிக கவலைப்பட்டாலோ
அல்லது அதிக அக்கறை காட்டினாலோ நீங்கள் அதுகுறித்து ஆராய வேண்டும். நீங்கள் சொல்லும்போதெல்லாம் ஜிம்முக்கு போகாமல். எக்ஸர்சைஸ் செய்யாமல் இருந்துவிட்டு திடீரென சம்பந்தமே இல்லாமல் டிரெட் மில்லில் ஓட ஆரம்பித்தால் அது வேறு ஒருவரை இம்ப்ரெஸ் செய்வதற்காக கூட இருக்கலாம்.

19. பழக்கவழக்கங்கள்

ஒவ்வொரு தம்பதியர் இடையேயும் குறிப்பிட்டு சொல்லும்படியான சில பழக்கவழக்கங்கள் இருக்கக்கூடும். இதுபோன்றவற்றை அவர் திடீரென மறப்பது அல்லது அவற்றை பின்பற்றாமல் இருப்பது ஆகியவை நிகழ்ந்தால் நீங்கள் சற்று எச்சரிக்கையுடன் இருங்கள். ஏனெனில் வருடக்கணக்காக பின்பற்றும் பழக்கவழக்கங்களை ஒருவர் மறப்பது அல்லது மறந்து விட்டதுபோல நடிப்பது உங்களுக்கு நல்லது கிடையாது.

20. அற்ப சண்டைகள்

கணவன்- மனைவி என இருக்கும்போது சண்டைகள், மனஸ்தாபங்கள் இல்லாமல் இருக்காது. ஆனால் காரணமேயில்லாமல் அற்ப காரணங்களுக்காக அவர் திடீரென உங்களிடம் அடிக்கடி சண்டை போட்டால் அதனை நீங்கள் சரியாக கவனிக்க வேண்டும். இதுபோல ஒன்றுமேயில்லாத விஷயங்களுக்கு சண்டை போட்டால் ஏதோ ஒன்று சரியாக இல்லை என அர்த்தம்.

21. விழலுக்கு இறைத்த

சில நேரங்களில் இதுபோன்ற விஷயங்களை பேசி சரிசெய்து விடலாம் என நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் உங்களுடன் பேசுவதற்கோ, இல்லை அது
தொடர்பாக உரையாடுவதற்கோ அவர் தயாராக இருக்க மாட்டார். விழலுக்கு இறைத்த நீர் என ஒரு பழமொழி உண்டு. அதேபோல தான் உங்களது
முயற்சிகளும் தோற்று போகக்கூடும்.

22. தெரியாத மொபைல் நம்பர்

உங்கள் ஆண் நண்பர்கள், உறவினர்கள் குறித்து உங்களுக்குத் தெரியும். அவர்கள் நாள் முழுவதும் மொபைலில் யாருடனும் சாட் செய்துகொண்டு இருக்க மாட்டார்கள். ஆனால் உங்கள் கணவருக்கு தெரியாத நம்பர்களில் இருந்து மெசேஜ்கள் வரும். பதிலுக்கு உங்களவரும் தொடர்ந்து நாள் முழுவதும் சாட் செய்துகொண்டு இருப்பார். நீங்கள் ஏதேனும் மெசேஜ் செய்தால் உங்களுக்கு ஒற்றை வார்த்தையில் பதில் வரும் இல்லையெனில், எந்தவிதமான ரிப்ளையும் அவரிடமிருந்து உங்களுக்கு வராது.

23. கால் வெயிட்டிங்

நீங்கள் அவருக்கு எப்போது போன் செய்தாலும் நம்பர் பிஸி என்று வரும். உங்கள் மொபைல் காலை கட் செய்துவிடுவார்கள். அதுகுறித்து நீங்கள் கேள்வி எழுப்பினால் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்ததாக பதில் வரும் அல்லது அதுகுறித்து பேச விரும்பாதது போல காட்டிக்கொள்வார்கள். இதுபோன்ற அறிகுறிகள்(Signs) அவர் நேர்மையான பாதையில் செல்லவில்லை என்பதைக் காட்டும்.

24. மன அழுத்தம்

ஒருவர் மற்றவரிடமிருந்து ஏதாவது மறைக்க முயற்சி செய்தால் அவர்கள் அதுகுறித்து கவலையுடன் எப்போதும் காணப்படுவார்கள். எங்கே நம்மை
கண்டுபிடித்து விடுவார்களோ என்ற எண்ணத்தில் எப்போதும் ஒருவித கலக்கத்துடனேயே இருப்பார்கள். தாங்கள் கையும், களவுமாக பிடிபடுவதை
அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். இதுபோன்ற அறிகுறிகள்(Signs) உங்களவரிடமும் இருந்தால் அவர் துரோகம்(cheating) செய்கிறார் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

25. உங்கள் உணர்வுகள்

இதுபோன்ற அறிகுறிகள்(Signs) உங்களவரிடம் நீங்கள் உணர்ந்தால் அவர் உங்களை ஏமாற்றுகிறார், உங்களுக்குத் துரோகம்(cheating) செய்கிறார் என்பதை கண்டறியுங்கள். உங்கள் இருவருக்கும் இடையிலான உறவில் நீங்கள் மூன்றாம் நபரைப் போல உணர்ந்தீர்கள் என்றாலோ, உங்கள் உள்ளுணர்வு அவருக்கு வேறு ஒரு தொடர்பு இருக்கிறது என்று சொன்னாலோ அதனை அலட்சியப்படுத்தாதீர்கள். ஏனெனில் உங்கள் உள்ளுணர்வு எப்போதும் பொய் சொல்லாது.

Read More From Dating