Accessories

காலணிகளை எந்த இடத்திற்கு எப்படி அணிந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும்

Mohana Priya  |  Dec 28, 2018
காலணிகளை எந்த இடத்திற்கு எப்படி அணிந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும்

நமது முன்னோர்கள் தோல் மாற்றம் இதர காலணிகள்(shoes) அணிவதில் எந்தவித விதிமுறைகளையும் கையாளவில்ல. ஆனால் அவர்கள் காலணிகளை(shoes) எப்படி அணிய வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை வகுத்துள்ளனர். அதனை பின்பற்றாத போது நமக்கு எதிர்காலம் குறித்த பல பிரச்சினைகளும், பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதன்படி அவர்கள் காலணிகள் அணிவது குறித்து வகுத்துள்ள சில விதிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

உடைக்கு ஏற்ற காலணிகளை அணிந்து கொள்வது இப்போது நவநாகரீமாக உள்ள சூழலில் நம் முன்னோர்கள் சில வழிமுறைகளையும் அப்போது வகுத்து வைத்துள்ளனர். உடைக்கு ஏற்ற கலர் கலரான காலணிகளை அணிவது தவறில்லை என்றாலும் சில நேரங்கள் நம் முன்னோர் வகுத்த சாஸ்திரங்கள் சம்பிரதாயங்களையும் பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது.

தேவையில்லாமல் ஏற்படும் அசம்பாவித்திலிருந்து நம்மை தடுத்து பாதுகாக்க இது பெரிதும் உதவும் என்பதில் துளியும் ஐயமில்லை. முயற்சி செய்து பாருங்கள் கட்டாயம் நல்லது நடக்கும்.

திருடப்பட்ட அல்லது பரிசாக அளிக்கப்பட்ட காலணிகள்
திருடப்பட்ட அல்லது பரிசாக அளிக்கப்பட்ட காலணிகளை(shoes) ஒருபோதும் அணியக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அந்த வகையான காலணிகள் உங்களின் இலட்சியத்தை அடைய ஒருபோதும் உதவாது மேலும் உங்களின் அதிர்ஷ்டத்தை குறைப்பதோடு உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் நழுவச்செய்யும்.

துரதிர்ஷ்டமாக மாறும்
நீங்கள் நேர்காணலுக்கு செல்லும்போது கிழிந்த அல்லது கிழியும் நிலைமையில் உள்ள காலணிகளை(shoes) ஒருபோதும் அணியக்கூடாது. இது உங்கள் அனைத்து அதிர்ஷ்டத்தையும் துரதிர்ஷ்டமாக மாற்றக்கூடும். கிழிந்த காலணி உங்கள் வெற்றியை தடுக்கும். ஒருவேளை உங்களிடம் நல்ல காலணிகள் இல்லையென்றால் வாங்கவேண்டுமே தவிர ஒருபோதும் திருடக்கூடாது

பழுப்பு அல்லது மரக்கலர்
முன்னோர்களின் அறிவுரைப்படி பணியிடத்திற்கு பழுப்பு அல்லது மரக்கலரில் இருக்கும் காலணிகளை அணியக்கூடாது. உங்கள் நேரம் ஏற்கனவே மோசமாக இருந்தால் இந்த நிற காலணிகள் அதனை மேலும் மோசமாக்கக்கூடும். ப்ரவுன் நிற காலணிகளை ஒருபோதும் அலுவலகங்களுக்கு அணிந்து செல்லக்கூடாது.

அடர் பழுப்பு நிற காலணிகள்
வங்கி அல்லது கல்வி நிலையம் தொடர்புடைய அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தங்களின் பணி பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று விரும்பினால் அடர் பழுப்பு நிற காலணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும். இது உங்கள் வருமானத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

வெள்ளை நிற காலணிகள்
ஒருவேளை நீங்கள் மருத்துவம், மருந்து அல்லது இரும்பு தொடர்பான வேலை செய்பவராக இருந்தால் நீங்கள் வெள்ளை நிற காலணிகள் அணிவதை அணியக்கூடாது. இந்த இடங்களில் வெள்ளை நிற காலணி அணிவது துரதிர்ஷ்டத்தையும், நஷ்டத்தையும் ஏற்படுத்தும்.

நீல நிற காலணிகள்
நீருடன் தொடர்புடைய வேலையோ அல்லது ஆயுர்வேதத்துடன் தொடர்புடைய வேலையோ செய்பவராக இருந்தால் நீங்கள் நீல நிற காலணிகளை அணியக்கூடாது. அதேபோல துணியால் செய்யப்பட்ட காலணிகளையும் அணியக்கூடாது. நீலம் உங்களுக்கு ஏற்ற நிறமல்ல.

உணவு உண்ணும்போது
உணவு உண்ணும்போது காலணிகள் அணியக்கூடாது என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். இது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை சக்திகளை ஈர்க்கும். ஒருவேளை நீங்கள் வெளியிடங்களில் சாப்பிட நேர்ந்தால் முடிந்தவரை காலணிகளை கழட்டிவிட்டு சாப்பிட முயலுங்கள்.

திசைதான்
வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் காலணிகளையோ அல்லது காலணிகள் வைக்கும் பலகையையோ வடகிழக்கு திசையில் வைக்கக்கூடாது. இந்த திசைதான் சூரிய ஒளி முதலில் விழும் திசையாகும் எனவே அந்த இடத்தில காலணிகள் இருப்பது உங்கள் வீட்டிற்குள் நுழையும் நேர்மறை சக்திகளை பாதிக்கும்.

இது போன்று நம் முன்னோர்கள் வகுத்த வழியை பின்பற்றி காலணிகளை அணிந்து கொண்டு தேவையில்லாமல் ஏற்படும் தீய சக்தி மற்றும அசம்பாவித்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வோம். இவை நம் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாயும் வழிகாட்டுதலாயும் இருக்கும். தேவைியல்லாத கெட்ட சகுணத்திலிருந்து நம்மை காத்து வாழ்வை சுகமாக்குவோம்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும். 
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Accessories