Lifestyle

இரத்தபோக்கு நாட்களில் செக்ஸ் வைத்துக்கொள்ளலாமா? கூடாதா?

Mohana Priya  |  Dec 31, 2018
இரத்தபோக்கு நாட்களில் செக்ஸ் வைத்துக்கொள்ளலாமா? கூடாதா?

மாதவிடாய்(Periods) நாட்களில் வெளிப்படும் இரத்தப்போக்கு தீட்டு என்று கருதும் வழக்கம் கொண்டிருக்கிறோம். ஆம்! மாதவிடாய் இரத்தப் போக்கில் வெளிப்படும் இரத்தம் இறந்த செல்கள் கொண்டவை தான். மற்றபடி அது வெறும் இரத்தமே தவிர வேறேதும் இல்லை என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

அந்த காலத்தில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்பதால், அந்த இறந்த செல்கள் கொண்ட இரத்தப் போக்கு மூலம் சிறு குழந்தைகள் அல்லது நோய்வாய்ப்பட்ட வயது முதிந்தவர்களுக்கு ஏதேனும் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற காரணத்தால் தான் தள்ளி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது.

ஆனால், இன்று நாப்கின் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வந்த பிறகும் கூட, அந்த இரத்தப்போக்கு துளியும் வீட்டில் பரவும் வாய்ப்பில்லாத போதும் தீட்டு என கூறி தள்ளிவைப்பது மூட நம்பிக்கையே. மூடநம்பிக்கை என்பது தள்ளி வைப்பதில் மட்டுமல்ல, உறவு கொள்வதிலும் உண்டு.
பொதுவாக மாதவிடாய்(Periods) நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க கூறவதற்கு ஒரே ஒரு காரணம் தான். அந்த நாட்களில் சில பெண்கள் அதிக வலியுடன் காணப்படுவர். அந்நேரத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ள முயல்வது தவறு. ஆனால், சில பெண்களுக்கு மாதவிடாய் நாட்களிலும் உடலுறவு வைத்துக் கொள்ள ஆர்வம் வெளிப்படுமாம். இது தவறா? சரியா? தாய்மார்களுக்கான ஆன்லைன் பிளாக் இணையத்தில் பெண் ஒருவர் பகிர்ந்திருக்கும் உண்மை அனுபவங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

என் தோழிகள் சிலர், மாதவிடாய்(Periods) நாட்களில், தாங்கள் உடலுறவு வைத்துக் கொள்ள ஆர்வம் கொள்வதாக என்னிடம் தெரிவித்துள்ளனர். சிலருக்கு அவர்களது பதின் வயது காலத்திலேயே மாதவிடாய் இரத்தப்போக்குநாட்களில் உச்சக்கட்ட இன்பம் அடைய எண்ணம் எழும் என்றும். ஆனால், அதுகுறித்து வெளியே கூறினால் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள். அவமானமாக இருக்கும் என்பதால் யாரிடமும் பகிர்ந்துக் கொள்ளவில்லை என்றும் கூறினார்கள்.

பீரியட் நாட்களில் செக்ஸ் வைத்துக் கொள்வது என்பது சாதாரணம். இது தனிப்பட்ட அந்தந்த பெண்களின் கருத்து, உரிமை, உடல்நிலையை பொருத்தது. ஆனால், இதுக்குறித்து வெளியே பேசவேக் கூடாது என்பது தான் அறியாமை. எனவே, என் தோழியின் கருத்தினை கேட்ட பிறகு, பிற தோழிகளிடம் (நெருக்கமான, நல்ல தோழிகள்) இதுகுறித்த கருத்து கேட்க நான் முற்பட்டேன். மேலும், இதுகுறித்து ஆன்லைனில் வேறுசில பெண்கள் யாரேனும் கருத்து பதிவு செய்துள்ளார்களா என்றும் கூகுளில் தேடினேன்.

ஒவ்வொரு தனிப்பட்ட பெண்ணின் விருப்ப, வெறுப்புகள் வேறுப்பட்டு காணப்படலாம். ஆனால், மாதவிடாய் நாட்களில் செக்ஸ் ஆர்வம் கொள்கிறார்கள் என்பதே உண்மை. ஆன்லைனில் படித்த பல கட்டுரைகள் இதற்கு நிரூபணமாக அமைந்தன. உயிரியல் ரீதியாகவே மாதவிடாய் நாட்களில் வெளிப்படும் சில ஹார்மோன் சுரப்பிகள் காரணமாக பெண்கள் மத்தியில் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆர்வம் வெளிப்படுவது இயல்பாக தான் உள்ளது. இது முற்றிலும் இயற்கை.

மாதவிடாய்(Periods) நாட்களில் லியூப்ரிகேஷன் மிகுதியாக இருப்பதாலும். மேலும், மாதவிடாய் நாட்களில் கருத்தரிக்கும் வாய்ப்புகள் குறைவு என்பதாலும் சிலருக்கு இந்த ஆர்வம் அதிகரிக்க காரணமாக இருக்கிறது. ஆனால், மாதாவிடாய் நாட்களில் கருத்தரிக்க மிக அரிதான வாய்ப்புகள் உள்ளதால், அந்த நாட்களிலும் பாதுகாப்புடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று பெல்லாக் எனும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளார். மற்றபடி மாதவிடாய் நாட்களில் உடலுறவில் ஈடுபடுவது எல்லாம் பாதுகாப்பானது தான் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பொதுவாக உடலுறவில் ஈடுபடும் பது வெளிப்படும் ஈஸ்ட்ரோஜன், எண்டோர்பின் போன்ற சுரப்பிகள் வலி நிவாரணியாக செயல் படுகின்றன. இதனால், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் Cramps வலிகளில் இருந்து பெண்களுக்கு நிவாரணம் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

சிலர் மாதவிடாய்(Periods) நாட்களில் உடலுறவில் ஈடுபடுவது கடினம் என்கிறார்கள். எனது தோழி ஒருவர் கூறுகையில், மாதவிடாய் நாட்களில் உடலுறவில் ஈடுபடுவது ஏற்படும் ஒரே ஒரு தொல்லை… இரத்தக்கறை படிவது தான். அதற்கு சரியான ஏற்பாடுகளை செய்துக் கொள்தல் அவசியம். அந்தரங்க பாகத்தின் கீழே கூடுதலாக டவல் ஒன்றை பயன்படுத்துவதால் இதை தவிர்க்கலாம் என்று அவரது அனுபவத்தை வைத்து கூறி இருந்தார்.

மேலும், மேலும் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்.. மாதவிடாய் நாட்களில் உடலுறவு என்பது தனிப்பட்ட அந்தந்த பெண்களின் நிலையை பொருத்தது என்பது. நான் கருத்துக்கணிப்பு நடத்திய போது, வேறு ஒரு நெருங்கிய தோழி, தன் கணவருடன் உடலுறவில்ஈடுபடுவதற்கு பதிலாக வைப்ரேட்டர் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளதாக கூறினார். செயல் வேறாக இருந்தாலும் அவர் அடையும் பயன் ஒன்று தான்.

சிலர் மாதவிடாய்(Periods) நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதால் கருப்பை வாய்க்கான தொடர்பு இலகுவாகி, இரத்தப்போக்கு நாட்கள் குறையும். இதனால் மாதவிடாய் நாட்கள் குறைய வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறியுள்ளார். எனவே, பீரியட் நாட்களில் செக்ஸ் வைத்துக் கொள்வது சரியா, தவறா? என்பதை தாண்டி… அது சாதாரணமானது. அதை மிகைப்படுத்த தேவை இல்லை.

மாதவிடாய் நாட்களில் ஒரு பெண்ணுக்கு உறவில் ஈடுபட விருப்பம் இருந்தால், அது இயல்பான, இயற்கையான உணர்ச்சி வெளிப்பாடு என்பதை அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும். மற்றபடி மாதவிடாய் நாட்களில் உடலுறவில் ஈடுபட வேண்டுமா, கூடாதா? என்பதை தீர்மானிக்கும் முடிவு, உரிமை பெண்கள் இடத்தில் மட்டுமே உள்ளது. இதில் ஆண்கள் கட்டாயப்படுத்த முடியாது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

 

Read More From Lifestyle