
காமத்தில் வித்யாசமான காமம் செய்ய சொல்லி வாஸ்த்யாயனர் சொன்னாலும் சொன்னார் நம் மக்கள் அதனை விதம் விதமாக புரிந்து கொண்டு எதையெதையோ செய்து வருகின்றனர்.
நான்கு சுவருக்குள் பெட்ரூமிற்குள் நடந்து கொண்டிருந்த காமம் (sex) என்பதை தாண்டி வித்தியாச த்ரில் சுகங்களுக்காக வெட்ட வெளிகளில் உடலுறவு கொள்வதை செய்வதுண்டு. இதனால் மற்றவர்களால் வசைபாடப்பட்டதும் நடந்திருக்கிறது.
ஆனால்.. அயர்லாந்து ஜோடி ஒன்றிற்கு இங்கே வித்யாசமான ஆசை ஒன்று முளைத்திருக்கிறது. முளையில் கிள்ளி எறிந்திருக்க வேண்டிய அந்த ஆசையை கொஞ்சம் கூட கூச்சமே படாமல் பலர் முன்னிலையில் நடத்தி காட்டி இருக்கின்றனர்.
காதல் ஜோடியான இந்த இருவரும் விமானத்தில் செல்லும் போது உடலுறவு (sex) கொள்ள வேண்டும் என்கிற விபரீத ஆசையால் அயர்லாந்தில் இருந்து துருக்கி செல்லும் விமானத்தில் பயணித்திருக்கின்றனர்.
விமானம் 30000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது இந்த ஜோடி இருவரும் ஒன்றாக டாய்லெட்டில் நுழைய முயற்சித்திருக்கின்றனர். அதற்கு விமான பணிப்பெண்கள் அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த அந்த ஜோடி
கொஞ்சம் கூட யோசிக்காமல் கூச்ச நாச்சம் இல்லாமல் தங்களது பயண இருக்கையிலேயே உடலுறவு கொண்டிருக்கின்றனர். சக பயணிகள் கத்தியும் அவர்கள் கேட்கவே இல்லை. குழந்தையோடு இருந்த பெண்மணி ஒருவர் நிறுத்த சொல்லி கத்திய போது உடலுறவில் ஈடுபட்டிருந்த அந்த நபர் தகாத ஆபாச வார்த்தைகளை கூறி இருக்கிறார்.
நடந்ததை பற்றி சக பயணிகள் கூறுகையில் அந்த பெண் அவர்கள் இருக்கையில் அந்த ஆணின் மேல் அமர்ந்தபடி உடலுறவு செய்யும்போது கொஞ்சம் கூட வெட்கம் கூச்சம் எதுவும் இல்லாமல் எங்களை எல்லாம் பார்த்தபடியே உடலுறவு (sex) கொண்டார். இப்படி ஒரு நிகழ்வை வாழ்நாளில் கண்டதில்லை என்றனர்.
இன்னொருவரோ பாத்ரூமின் வெளிப்புற சுவரெங்கும் அந்த ஆண் சிறுநீர் கழித்ததாக கூறினார். விமானம் தரையிறங்கிய உடன் முதல் வேலையாக துருக்கி காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இவர்களுக்கு டிக்கெட் போட்டு கொடுத்த ஏஜென்சி அவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த தங்குமிடம் திரும்ப வரும் விமான டிக்கெட்கள் ஆகியவற்றை ரத்து செய்வதாக கூறிவிட்டது.
உடல் உறவு என்பதன் அர்த்தம் புரியாத மனித மிருகங்கள் சில சமயம் மிருகங்களை விடவும் கீழான செயல்களை செய்த வண்ணம்தான் இருக்கின்றன.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi