Celebrity Life

முன்னணி சீரியல் நடிகை ஸ்ரித்திகாவிற்கு கேரளாவில் திருமணம் : வைரலாகும் புகைப்படங்கள்!

Swathi Subramanian  |  Jan 2, 2020
முன்னணி சீரியல் நடிகை ஸ்ரித்திகாவிற்கு கேரளாவில் திருமணம் : வைரலாகும் புகைப்படங்கள்!

முன்னணி சீரியல் நடிகை ஸ்ரித்திகா ஸ்ரீ – ஷானீஷ் திருமணம் கேரளாவில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. 2002ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலமாக அறிமுகமானவர் ஸ்ரீஸ்ரித்திகா ஸ்ரீ. 

அந்த சீரியல் ஸ்ரித்திகாவை தொலைக்காட்சி தொடர் நடிகர்கள் வரிசையில் முக்கியமானவராக வலம்வர வைத்தது. ‘மெட்டி ஒலி’ சீரியலைத் தொடர்ந்து ‘கலசம்’, ‘கோகுலத்தில் சீதை’, ‘நாதஸ்வரம்’, ‘மாமியார் தேவை’, ‘உயிர்மை’, ‘குலதெய்வம்’, ‘கல்யாண பரிசு’ என பல்வேறு சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

தமிழ் தொலைக்காட்சி உலகில் மிகவும் அழகிய தொலைக்காட்சி தொடர் நாயகி யார் என்று கேட்டால் அது நம் “கல்யாண பரிசு” நாயகி ஸ்ரித்திகா ஸ்ரீ தான் கூறும் அளவிற்கு அந்த சீரியல் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. 32 வயதாகும் நடிகை ஸ்ரித்திகா ஸ்ரீ பார்க்க அக்மார்க் இல்லத்தரசியாக காட்சியளிக்கின்றார்.

twitter

 “கல்யாண பரிசு” தொடரில் நடிகை ஸ்ரித்திகா ஸ்ரீ “வித்யா” என்ற கதாபாத்திரத்தில் புதிதாக திருமணம் ஆன புது மணப்பெண் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கின்றார் நடிகை ஸ்ரித்திகா ஸ்ரீ. 

“கல்யாண பரிசு” தொடரில் ஆரம்பத்தில் புடவை மற்றும் சல்வாரில் நடித்து வந்த நடிகை ஸ்ரித்திகா திருமணம் ஆன காட்சிகளுக்கு பின்னர் புடவையில் மட்மே நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 

இறுதி நேரத்தில் மலர்ந்த காதல்..நெகிழ்வில் முடிந்த நேசம்..திருமணத்தில் இணைந்த முதிய நட்பு !

அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில அசத்தலான புகைப்படங்களை எடுத்து தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வரும் நடிகை ஸ்ரித்திகா சமீபத்தில் மஞ்சள் நிற புடவையில் இருக்கும் சில புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். 

இந்த அழகிய புகைப்படங்கள் வைரல் ஆனது. இதனிடையே தற்போது நடித்து வரும் தொடர் நாடகங்களுக்குப் பிறகு சீரியல்களில் நடிக்க மாட்டேன் என நடிகை ஸ்ரித்திகா கூறியிருந்தார். ஆனால் கல்யாணமாம் கல்யாணம் என்ற சீரியலில் தற்போது கமிட் ஆகியுள்ளார். 

twitter

இதுகுறித்து பேசிய நடிகை ஸ்ரித்திகா, குலதெய்வம் சீரியலுக்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என நினைத்தேன். ஆனால் கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் வாய்ப்பு கிடைத்ததால் நடிக்க ஒப்பு கொண்டேன் என தெரிவித்துள்ளார். 

குளிர்காலத்தில் கூந்தல் அதிகளவு உதிர காரணங்கள் மற்றும் சில பராமரிப்பு டிப்ஸ்!

எனது வாழ்க்கை என் கையிலேயே உள்ளது என நடிகை ஸ்ரித்திகா கூறியிருந்தார். மேலும், சீரியல் மட்டுமின்றி ‘வெண்ணிலா கபடி குழு’, ‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’, ‘வேங்கை’ உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் குடும்பத்தினர் நீண்ட நாட்களாகவே இவருக்கு மாப்பிள்ளை தேடி வந்தனர். இறுதியாக கேரளாவைச் சேர்ந்த ஷானீஷுக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 30-ம் தேதி இரண்டு குடும்பத்தினர் முன்னிலையில் இவர்களது திருமணம் விமர்சையாக நடைபெற்றது. 

இந்த திருமண வைபவத்தில் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே  கலந்து கொண்டுள்ளனர். தனக்கு ஷானீஷ் உடன் திருமணம் முடிந்துள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிச் செய்துள்ளார் ஸ்ரீத்திகா. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 

அதில், “நான் இப்போது Mrs.ஸ்ரித்திகா சனீஷ்” என அந்த பதிவில் கூறியுள்ளார். ஸ்ரித்திகா ஸ்ரீவின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். 

கறுப்பான உதடுகளால் கவலை கொள்கிறீர்களா ! எளிதாக சரி செய்யலாம்.

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Celebrity Life