Celebrity Life

மனைவிக்கும், மகளுக்கு வித்தியாசம் தெரியாமல் ஈஸ்வர் செய்த செயல் : உண்மையை உடைத்த ஜெயஸ்ரீ!

Swathi Subramanian  |  Dec 3, 2019
மனைவிக்கும், மகளுக்கு வித்தியாசம் தெரியாமல் ஈஸ்வர் செய்த செயல் : உண்மையை உடைத்த ஜெயஸ்ரீ!

‘வம்சம்’ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜெயஸ்ரீ (jayashree). இவருக்கும் ‘ஆஃபிஸ்’, ‘அதே கண்கள்’, ‘சித்திரம் பேசுதடி’ உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்த ஈஸ்வர் என்பவருக்கும் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில் ஈஸ்வர் குடித்துவிட்டு தன்னை துன்புறுத்துவதாகவும், வேறு நடிகையுடன் தொடர்பு உள்ளதாகவும் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீஸ் ஈஸ்வரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து நடிகை ஜெயஸ்ரீ க்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். 

அதில் ஈஸ்வருடன், எனக்கு ஜனவரி 2006ம் ஆண்டு  திருமணம் ஆனது. இருவரும் காதலித்து பெற்றோர் ஆதரவுடன் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பின்னர் அவர் ஒரு வீடு வாங்கலாம் என கூறினார். நாங்கள் இருந்த குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் இருக்கும் வீட்டை வாங்க முடிவு செய்தோம்.

youtube

அப்போது உன்னால் எவ்வளவு பணம் தர முடியும் என ஈஸ்வர் என்னிடம் கேட்டார். நானும் என்னிடம் இருந்த 45 சவரன் நகை மற்றும் பணத்தை கொடுத்தேன். இறுதியாக ரெஜிஸ்திரேசனில் அவரது அம்மா பெயர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். வீடு வாங்கிய எந்த விஷயத்திற்கும் என்னை அழைத்து செல்லவில்லை. 

அவரது அம்மா, அப்பாவை கூட்டி சென்றான். நான் அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் ரெஜிஸ்திரேசனில் என் பெயர் (jayashree) இல்லாதால் நான் ஈஸ்வரிடம் கேள்வி எழுப்பினேன். இருவரது பெயர் இருக்கும் வகையில் ஜாயிண்ட் ரெஜிஸ்திரேசன் கூட பண்ணியிருக்கலாம் என கேட்டேன். 

அதற்கு நடிகையாக இருப்பதால் வருமான வரித்துறை பிரச்னை இருப்பதால் தான் அம்மா பெயரை பதிவு செய்தேன் என கூறினார். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குடி, சிகரெட் பழக்கம் அதிகரித்தது. அதுகுறித்து கேள்வி எழுப்பினாலே எப்போதும் அடி விழும். 

மேலும் படிக்க – சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் மற்றொரு நடிகையுடன் தொடர்பு..மனைவி ஜெயஸ்ரீ பரபரப்பு புகார்!

இதற்கு நடுவில் சூதாட்டம் பழக்கமும் வந்ததால் கடன் பிரச்னை  அதிகரித்தது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இருந்து ஈஸ்வர் என்னிடம் விவாகரத்து கேட்க  ஆரம்பித்தார். ஆரம்பத்தில் மன உளைச்சலால் கேட்கிறார் என நினைத்தேன். ஆனால் கூட நடிச்சுட்டுருக்க மஹாலக்ஷ்மி  என்ற பொண்ணோட தொடர்பு இருக்குனு ஃபிரெண்ட்ஸ் சொன்னாங்க.

youtube

நான் முதல்ல நம்பல. அப்புறம் செட்ல இருந்து தகவல் வந்ததால் உண்மைனு தெரிய வருது. இந்த தகவல் வதந்தியாக இருக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டினேன். ஆனால் என் முன்னாடியே வீடியோ கால் பேசுவது, மெசேஜ் அனுப்புவது என் கண்ணு முன்னாடியே கொஞ்சிக்கிட்டாங்க’ என்று வேதனையுடன் கூறினார். 

மேலும் படிக்க – அமெரிக்காவில் நண்பர்களுடன் அசைவ விருந்தில் நயன்தாரா… கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

மேலும் மஹாலக்ஷ்மி மகனிடம் பேசுவார். அவனும் ஈஸ்வரை அப்பா என்று கூறுவான் இதனை பார்த்த என் மகள் ஈஸ்வரிடம் பேசுவதையே நிறுத்தி விட்டாள்.  நான் இதுகுறித்து ஈஸ்வரிடம் வெளிப்படையாக பேசினேன். ஆனால் நாங்கள் நண்பர்கள் என கூறி சமாளித்தார். ஆனால் அவர்கள் பழகும் விதம் நட்பு மட்டுமே இருப்பதாக எனக்கு தோணவில்லை.

இதனை தொடர்ந்து நானே அவரை விட்டு விலகி செல்ல வேண்டும் என்று பல்வேறு தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்தார். எனினும் ஈஸ்வருக்கு என்றும் நான் தான் நிரந்தமான உறவு, அதனையாராலும் மாற்றமுடியாது என என்னை நானே தேத்திக்கொண்டேன்.

youtube

ஒருநாள் அவர் அதிகமாக குடித்திருந்தார். நான் சமையலறையில் இருந்த போது நான் என்று நினைத்து எனது மக்களிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் என் மகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அந்த ஒரு தருணம் என் வாழ்வில் மீண்டும் வர கூடாது என வேண்டிகொள்கிறேன் என வருத்தத்துடன் தெரிவித்தார்.  

ஈஸ்வர் என்னை அடித்து துன்புறுத்துவதை பார்த்து என் மகள் நடு ராத்திரியில் கூட எழுத்து அழுதிருக்கிறாள். ஈஸ்வரால் எங்களுக்கு 12 லட்சம் கடம் இருக்கிறது. ஆனால் தொடந்து என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார். சமீபத்தில் வெளிப்படையாகவே மகாலக்ஷ்மியை திருமணம் செய்ய வேண்டும், இந்த வீட்டை விட்டு வெளியே செல் என கூறினார்.

நீ எனக்கு விவாகரத்து கொடு நீ என்ன கேட்டாலும் தருகிறேன், கடனை கூட அடைகிறேன் என கூறினார். ஈஸ்வர் என்னை அடிக்கும் போது அவர் அம்மா அருகில் இருந்தால் கூட தடுக்க கூட மாட்டார்.  இது குறித்து ஒருமுறை அவர் அம்மாவிடம் கூறினேன், அதற்கு அவன் பேச்சை கேட்டால் உனக்கு எல்லாம் செய்வோம் இல்லையேற்றால் அனுபவி என கூறினார்  

முன்னதாக ஈஸ்வர் தொடர்ந்து  டைவர்ஸ் கேட்க ஆரம்பித்ததால்  இதுகுறித்து மஹாலக்ஷிமியிடம் நேரில் சென்று பேசியிருக்கேன். சூட்டிங் நடக்கும் இடத்திற்கே சென்று ஒன்றரை மணிநேரம் பேசினேன். அன்று இரவு வீட்டிற்கு வந்த ஈஸ்வர் என்னை சரமாரியாக அடித்தார். 

youtube

ஏன்? என்று கேள்வி எழுப்பிய போது அவர் மஹாலக்ஷ்மியிடம் பேசிகொண்டிருந்த போது காலில் கேட்டு கொண்டிருந்ததாக கூறினார். ஏன் அவளை பார்க்க சென்றாய், அவளிடம் பேசினாய் என சரமாரியாக அடித்தார் .

ஈஸ்வருக்கு தெரியாமல் வா தனியாக பேசலாம் என என்னிடம் கூறிவிட்டு அவருக்கு கால் செய்து கேட்கும் வகையில் வழிவகுத்துள்ளார் மஹாலக்ஷ்மி. நான் பேசிய அனைத்தையும் அவர் கேட்டுள்ளார். இதனிடையே மஹாலக்ஷ்மியும் ஆகஸ்ட் மாதம் அவரது கணவனிடம் விவகாரத்து கேட்டுள்ளார்.  

ஜூலை மாதம் முதல் என்னிடம் விவாகரத்து கேட்கும் ஈஸ்வர் தொடர்ந்து என்னை அடித்து துன்புறுத்தினார். எனக்கு ஆபரேஷன் செய்துள்ளதை கூட நினைத்து பார்க்காமல் என் அடி வயிற்றில் எட்டி உதைத்தார். இதனால் மயக்கமடைந்த என்னை எனது அம்மா மருத்துவமனையில் அனுமதித்தார். 

பின்னர் மருத்துவமனைக்கு போலீஸ் அழைத்து கம்பிளைன்ட் செய்தோம். அதன் பின்னரே அவர் மீது கைது நடவடிக்கை எழுந்தது. இப்போதும் நிறைய மிரட்டல் அழைப்புகள் வருகிறது. எனக்கும், எனது மகளுக்கும் ஏதேனும் நேர்ந்தால் ஈஸ்வர், அவரது குடும்பம் மற்றும் மஹாலக்ஷ்மியே காரணம் கூறிய ஜெயஸ்ரீ (jayashree), இந்த பிரச்சனைகளால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க – ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை எரித்து கொலை செய்த சம்பவம் : கீர்த்தி சுரேஷ் வேதனை!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Celebrity Life