Celebrity Life
தனது பழைய புகைப்படத்தை ஷேர் செய்து உருக்கமாக பேசிய நடிகை சமீரா : விமர்சங்களுக்கு பதிலடி!

தமிழில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் சமீரா ரெட்டி. அதன் பின்னர் வேட்டை, அசல். நடுநிசி நாய்கள் உள்ளிட்ட படங்களில் நடித்ததோடு, சில பாலிவுட் படங்களில் நடித்தார். இவர் 2014ம் ஆண்டு ஆகாஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு 4வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ் சினிமா குறித்து பேசிய அவர், தான் பிஸியாக நடித்து வந்த நிலையில் திடீரென நடிப்பிலிருந்து விலகினேன்.
ஆனால் தான் ஏன் சினிமாவிலிருந்து விலகினேன் என யாரும் கண்டு கொள்ளவில்லை. இது தான் சினிமா என அறிந்து கொண்டேன். திருமணம் ஆகி தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்தும் திரைத்துரையில் பலரும் தன்னை படுக்கைக்கு அழைத்தனர். பெண்களுக்கு சினிமா துறை பாதுகாப்பானது இல்லை, இந்த நிலை மாறவேண்டும்.
ஆனால் அது உடனே நடந்துவிடாது என சமீரா ரெட்டி கூறினார். இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே சமீரா ரெட்டி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த போது அரைகுறை ஆடைகளுடன் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை ஷேர் செய்வார். இதனால் அவரை பலரும் விமர்சனம் செய்தனர்.
அதனை பெரிதாக எடுத்து கொள்ளாத சமீரா, தொடர்ந்து புகைப்படங்களை ஷேர் செய்து வந்தார். மேலும் விமர்சனங்கள் குறித்து பதிலளித்த சமீரா, நான் பிரசவத்துக்கு பின்பு 102 கிலோ இருந்தேன். கடுமையான உடற்பயிற்சி, யோகா மூலம் எனது உடல் எடையை குறைத்தேன் என பதிலளித்தார்.
இதனை தொடர்ந்து அவருக்கு சமீபத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் புகைப்படங்களை சமீரா ஷேர் செய்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட சமீரா தனது இரண்டாவது குழந்தையிடம் மலையேற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக புகைப்படம் வெளியிட்டார்.
கர்நாடகாவின் உயர்ந்த சிகரமான ‘முல்லையாநாகிரிக்கு’ டிரெக்கிங் சென்ற புகைப்படம் தான் அது. குழந்தை பிறந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் சமீரா இந்த சாகசப் பயணத்தை மேற்கொண்டார். அந்த புகைப்படத்திற்கு விமர்சனங்களும், பாராட்டுகளும் ஒருசேர குவிந்தது.
இந்நிலையில் சமீரா தனது பழைய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். #Flashbackfriday என்ற ஹேஷ்டேக்கில் மீம் மேக்கர்ஸ் உங்களுக்காகத் தான். நகைச்சுவை ஒரு புறம் இருக்கட்டும். கடந்தகாலங்களில் நான் மிகவும் சிரமப்பட்டேன். அப்போது எனக்கு நிறைய அழுத்தங்கள் இருந்தன.
இரண்டு குழந்தைகள் என்னை நேசிக்கும் எனது கணவர் இருந்தும். இப்போதும் கூட என் உடலைப் பற்றி நான் எப்படி உணர்கிறேன் என்ற கவலை மற்றும் போராட்டத்தின் பல தருணங்கள் எனக்கு உள்ளன என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். உடல்பருமன் குறித்து விமர்சனங்களை முன்வைத்தவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக சமீரா, பதிவிட்டிருந்த அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Celebrity Life
மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர்.. கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி!
Swathi Subramanian
தனது காதலரை அறிமுகப்படுத்தினார் நடிகை ப்ரியா பவானி சங்கர்….. ரசிகர்கள் அதிர்ச்சி!
Swathi Subramanian
25 படங்களில் நடித்த பயணம் கடினமாக இருந்தது… ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகை வரலட்சுமி!
Swathi Subramanian
நடிகை சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது….. உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரசன்னா!
Swathi Subramanian