Food & Nightlife

பருப்பில்லாம சாம்பாரா ! வச்சுதான் பாருங்களேன் ! சூப்பர் சுவையில் பருப்பில்லாத சாம்பார் !

Deepa Lakshmi  |  Oct 1, 2019
பருப்பில்லாம சாம்பாரா ! வச்சுதான் பாருங்களேன் ! சூப்பர் சுவையில் பருப்பில்லாத சாம்பார் !

பருப்பு இல்லாம சாம்பாரா சீப்பு இல்லாம கல்யாணமான்னு ஏகப்பட்ட எதுகை மோனை வசனங்களை நாம அப்பப்போ கேட்டுக்கிட்டிருப்போம். ஆனால் உண்மையாவே பருப்பே (dhal) இல்லாம சூப்பர் சுவையான சாம்பாரை இந்த முறைல வச்சு பாருங்க. உண்மையான பருப்பு சாம்பார் (dhal sambar) ருசிய விட பல மடங்கு ருசி கொண்டது இந்த சாம்பார்.                                                                        

Youtube

தேவையான பொருள்கள்

பொட்டுக்கடலை
பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்

சோம்பு – 1/2 டீஸ்பூன்

மிளகு – 1/2 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

சின்னவெங்காயம் – 12

பச்சை மிளகாய் – 1

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

தக்காளி – 1

மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்

புளி – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

கொத்தமல்லி தழை – சிறிதளவு                                                            

 

Youtube

செய்முறை

மிக்சியில் லேசாக வறுத்த பொட்டுக்கடலை சோம்பு மற்றும் மிளகு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி லேசாக காய்ந்ததும் கடுகு, வெந்தயம் , பெருங்காயத்தூள் , கறிவேப்பிலை , சின்ன வெங்காயம் , பச்சை மிளகாய் , மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும் .

அதன் பின்னர் தக்காளி மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து மேலும் வதக்க வேண்டும். இதனுடன் அரைத்த பொட்டுக்கடலை விழுது, புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் அளவாக சேர்த்து கொதிக்க விடுங்கள். பொட்டுக்கடலை சேர்த்திருப்பதால் மிதமான தீயில் அடிக்கடி கிளறியபடி கொதிக்க விடுங்கள்.

அழகுக்கும் வாசனைக்கு கொத்தமல்லி தழைகளை தூவி சாம்பாரை இறக்கி விடுங்கள். அதன்பின்னர் தோசை, இட்லி, சாதம் என எல்லாவற்றுக்கும் இந்த சாம்பார்தான் வேண்டும் என்பார்கள் குடும்பத்தினர்.                          

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!   

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Food & Nightlife