உப்பு என்பது நம் வாழ்வின் அன்றாடங்களில் ஒன்றாகிப் போன ஒன்று. அதே உப்பைக் கொண்டு நம் முகத்தையும் அழகாக்கி கொள்ளலாம் என்பது சிறந்த செய்தி அல்லவா. சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் இதனை முயற்சிக்க வேண்டாம். எண்ணெய் பசை சருமத்திற்கு உகந்தது.
ஒரு ஸ்பூன் உப்பை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, இதனை வைத்து முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
pinterest,pixabay, pexels
ஒரு ஸ்பூன் உப்பு (salt) மற்றும் சர்க்கரையை கலந்து, பின்னர் அவற்றைக் கொண்டு முகத்தை ஈரமாக்கிய பின் மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் சென்ற பின் பருத்தி துணி கொண்டு துடைத்து எடுக்கவும். பின்னர் மாய்ஸ்சுரைசர் தடவவும். இப்படி செய்வதால், கரும்புள்ளிகள் அதிகமாவதை தடுக்கலாம்.
தேன் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. கூடவே மெலிதாக ப்ளீச் செய்கிறது. அதற்கு ஒரு ஸ்பூன் தேனில், 2 ஸ்பூன் கல் உப்பு (salt) சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பளபளப்பான முகம் உங்கள் வசமாகும்.
pinterest,pixabay, pexels
ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் கடலை மாவு, 2 ஸ்பூன் பால் மற்றும் 1 ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். பின்னர் 15 நிமிடம் நன்கு உலர வைத்து, அதன்பின் முகம் கழுவ, கரும்புள்ளிகள் நீங்கும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
pinterest,pixabay, pexels
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!