Finance

நீங்கள் செய்யும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பாதுகாப்பானதுதானா

Deepa Lakshmi  |  Jan 4, 2019
நீங்கள் செய்யும்  டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பாதுகாப்பானதுதானா

நவீன யுகத்தில் எல்லாம் டிஜிட்டல் மயம்தான். நமது நினைவுகளைக் கூட டிஜிட்டல் மயமாக்கி பத்திரப்படுத்திக் கொள்கிறோம். சென்ற தசாப்தத்தில் எல்லாம் நமது கைகளுக்கு கிடைக்கும் தூரத்தில் இருந்தன.

நமது புகைப்படங்கள் எல்லாம் ஆல்பமாகி இருந்தன. வரவு செலவு கணக்குகள் நோட்டு புத்தகத்தில் இருந்தன. அனைவரின் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் எல்லாம் ஒரு சிறு நோட்டிற்குள் எழுதப்பட்டு அதனைப் பல பிரதிகள் எடுத்துக் பத்திரப்படுத்தினோம். வங்கி நடைமுறைகள் எல்லாம் கிலோ கணக்கில் பேப்பர்களாக நம்மிடம் அடுக்கப்பட்டு இருந்திருக்கும். பலவருட தூசிகளுக்குப் பின் அதனைக் கிழித்து போடுவோம்.

ஆனால் இப்போது எல்லாம் டிஜிட்டல் (digital) மயமாகவே இருக்கிறது. புகைப்படம் எடுப்பது கூட நம்மை நாமே எடுத்துக் கொண்டு அதனை டிஜிட்டல் மூளையின் நினைவுகளில் சேகரிக்கிறோம். கவனிக்கவும். நாம் பயன்படுத்துகிற டிஜிட்டல் மூளையின் நினைவுகளி சேகரிக்கிறோமே தவிர நமது மூளையை இதற்காக நாம் பயன்படுத்துவது இல்லை.

நாம் சேகரித்து வைத்திருக்கும் செயற்கை மூளையாகவே நம்மிடம் உள்ள ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் கணினிகள் செயல்படுகின்றன. அதில் ஏதாவது ஒரு பழுது என்றால் நம் அத்தனை கால ஞாபகங்களை மீட்டெடுக்க முடியாமல் போய்விடும்.

இதன் அடுத்த கட்டமாக நமது ரகசியமான விஷயங்கள் எல்லாம் இப்போது இணையம் வழியே நடக்க ஆரம்பித்து விடுகிறது. நமது வங்கியில் உள்ள பணத்தை அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருக்க மாட்டோம். தேவையெனில் அங்கு சென்று தேவைக்காக செலவு செய்தோம். இப்போது அதுவும் இணையதளம் மூலமாகவே நடக்கிறது. இதனால் இதன் சில ரகசியங்கள் வெளிப்படையாகின்றன.

ஆனாலும் பாதுகாப்பான முறையில் இதனை செய்து கொள்ள முடிகிறது என்பதுதான் இதன் ஹைலைட். அதிகரித்துக் கொண்டே போகும் மக்கள் தொகையில் எல்லா விஷயங்களையும் வரிசையில் நின்று செய்து கொள்ள முடியாதுதான். மின்சார கட்டணம் முதல் வாடகை செலுத்துதல் வரை சினிமா டிக்கெட் முதல் உணவு ஆர்டர் செய்வது வரை நாம் அனைத்தையும் வரிசையில் நின்று செய்து கொண்டிருக்க தேவையில்லாமல் இருக்கும் இடத்திலேயே முடித்துக் கொள்ள முடிகிறது.

இதில் ஒரு சிறிய அளவிலான ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தாலும் பெரும்பான்மை மக்கள் இன்றைய தலைமுறைகள் இதனைச் செய்யவே விரும்புகிறார்கள்.

இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை இன்றி இனி எந்த வியாபாரமும் கொடுக்கல் வாங்கலும் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. இதனால் இதனை வரவேற்கும் விதமாக பல்வேறு நவீன டிஜிட்டல் வாலட்கள் இங்கே உருவாகி இருக்கின்றன. பேடிஎம், கூகுள் பே,அமேசான் மணி, ஆப்பிள் பெ போன்றவைகள் இதற்கு உதாரணம்.

இதில் எதனைப் பயன்படுத்துவது என்கிற கேள்விகள் எழும்போது அதனை யோசித்துதான் முடிவெடுக்க வேண்டி வரும். முன்பெல்லாம் தள்ளுபடிகளில் துணிகள் விற்கப்பட்டன. நம்மிடம் இருந்த பணத்தை கொடுத்து அதனை வாங்கி இன்புற்றோம். அதே போலத்தான் இந்த வகை வாலட்களிலும் கவர்ச்சிகரமான பணவாபஸ் தள்ளுபடிகள் சொல்லப்படுகின்றன.

எந்த வகையான வியாபாரமாக இருந்தாலும் அதில் அவர்களுக்கான லாபம் இல்லாமல் அதை செய்ய மாட்டார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டியது அவசியம்.

விற்பவர்களிடம் கமிஷனாக ஒரு தொகையும், வாங்குபரிடம் ஒரு தொகையையும் இவை வசூலிக்கின்றன. அது மட்டுமன்றி இப்படி நாடாகும் வியாபாரத்தில் கோடிக்கணக்கான பணத்தை சில நாட்கள் தனது இருப்பில் வைத்துக் கொள்வதால் இது பல்வேறு வகையில் லாபத்தை சம்பாதிக்கிறது.

இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ஏதேனும் ஆபத்து உண்டா என்று கேட்டால் நிச்சயம் உண்டு. உங்களது வங்கி தகவல்கள் இவைகளிடம் சொல்லப்படுகின்றன. ஆனால் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளரின் விவரங்களை பத்திரமாகப் பாதுகாப்பது போல இவையும் உங்கள் விவரங்களை பாதுகாத்தாலும் சில ஹாக்கர்கள் போன்ற டிஜிட்டல் திருடர்கள் அங்கும் உண்டு என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் என்கிரிப்ஷன் தொழிநுட்பம் மூலம் இது திருடு போவதன் ஆபத்துக்கள் தடுக்கப்படுகின்றன. நமக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இனி நாம் இதில்தான் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டிருக்கிறோம். இதில் நாம் கவனமாக எப்படி நமது விபரங்களை பாதுகாக்கலாம் என்பதில் மட்டும் உறுதியோடு செயல்படுவது அவசியம்.

அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யப் பயன்படும் உங்கள் ஆண்ட்ராய்டு போன் அல்லது ஆப்பிள் போன் கணினி லேப்டாப் போன்றவற்றை நீங்கள் உங்களுக்கென பிரத்யேகமான பாஸ்வோர்ட் (கடவு சொல்) போட்டு பாத்திர படுத்த வேண்டும்.

எல்லா டிஜிட்டல் வாலட்களையும் பயன்படுத்தாதீர்கள். எதனை பயன்படுத்துகிறீர்களோ அதன் கடவு சொல்லை அடிக்கடி மாற்றுங்கள். அது கடினமானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஒரே வித கடவு சொல்லை அனைத்திற்கும் கொடுக்காதீர்கள்.

எந்த ஆப் மூலமாக நீங்கள் பணப்பரிவர்த்தனை செய்கிறீர்களோ அது முடிந்தவுடன் அதனை விட்டு முழுமையாக வெளியே வாருங்கள். அதனை அவ்வப்போது அப்டேட் செய்ய மறக்காதீர்கள்.

எந்த ஒரு வங்கியில் இருந்தும் உங்களது பின் நம்பர், உங்கள் கார்ட் என் போன்றவற்றை தொலைபேசி மூலம் கேட்க மாட்டார்கள். உங்களுக்கு பரிசு தருகிறோம் என்று கூறி ஒரு சிலர் உங்கள் ரகசிய எண்களைக் கேட்டால் சொல்லாதீர்கள். உங்கள் பின் நம்பரை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

உங்கள் வங்கி ஸ்டேட்மென்ட்டை அவ்வவ்போது சரிபார்த்துக் கொண்டிருங்கள். சந்தேகமான பரிவர்த்தனைகள் இருந்தால் உடனடியாக வங்கிக்கு தெரியப்படுத்துங்கள்.

தேவையற்ற ஆப்களை நீக்கி விடுங்கள். வைரஸ் பாதுகாப்புக்களை தரும் மென்பொருளை பயன்படுத்தி வைரஸ் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வீட்டை விட்டு வெளியே வரும் சமயம் பொது வைஃபைக்களில் உங்கள் மொபைலை இணைக்காதீர்கள். இலவசமாக கிடைக்கிறதே என்று பயன்படுத்தினால் உங்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்படும்.

மேற்கண்ட விஷயங்களைக் கவனத்தில் கொண்டு உங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதுகாப்போது மேற்கொள்ளுங்கள்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

 

 

Read More From Finance