Beauty

பாத வெடிப்புகள் பாடாய்படுத்துகிறதா? குளிர்காலம் தொடங்குமுன் குணப்படுத்தி விடலாம் வாருங்கள்

Deepa Lakshmi  |  Sep 8, 2019
பாத வெடிப்புகள் பாடாய்படுத்துகிறதா? குளிர்காலம் தொடங்குமுன் குணப்படுத்தி விடலாம் வாருங்கள்

குதிகால்களிலும் பாதங்களின் பக்கவாட்டு வரையிலும் ஒரு சிலருக்கு பாத வெடிப்பு (cracks) ஏற்பட்டு பாடாய்படுத்தும். கால்களை ஊனி நடக்க முடியாமல் சிரமப்படுவார்கள். ஒரு சிலருக்கு வெடிப்புகள் பெருவிரலுக்கு கீழே கூட வெடிப்புகள் ஏற்படும். இதனால் கால்வலியும் ஏற்படும் பாதங்களின் அழகும் பாதிக்கப்படும். 

இந்த பாத வெடிப்புகளுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது உடல் வறட்சி தான். நீண்ட காலமாகவே எண்ணெய் குளியல் செய்யாமல் இருப்பவர்களுக்கு இந்த நிலை சீக்கிரமே வந்துவிடும். உடலுக்குத் தேவையான எண்ணைத்தன்மையை நாம் தருவதற்காக உருவானதுதான் எண்ணெய் குளியல்.

இரண்டாவது காரணம் பாதங்களை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பதன் மூலம் பாத வெடிப்புகள் ஏற்படுகிறது. குதிகால் மற்றும் முழுபாதமும் இவ்வகை வெடிப்புகள் பரவுவதால் வெடிப்புகளில் இருந்து சமயங்களில் ரத்தக்கசிவு மற்றும் கடுமையான வலிகள் ஏற்படும். தவிர உங்கள் அழகை கேள்விக்குறியாக்கி விடக் கூடிய சக்தியும் வாய்ந்தது இந்த பாத வெடிப்புகள். 

Youtube

வெடிப்புகளை சரி செய்ய 

தினமும் இரவு நேரம் நீரை கொஞ்சம் சூடாக்கி கால் பொறுக்கும் அளவிற்கு நீரில் உங்கள் பாதங்களை ஊற வைக்க வேண்டும். 15-20 நிமிடம் ஊறிய பின்னர் கால்களின் அழுக்குகளை கடல்பாசி மூலம் தேய்த்து எடுக்கவும். பின்னர் கால்களைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன்பின்னர் கிளிசரின் மற்றும் ரோஸ்வாட்டர் இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சில சொட்டுக்கள் எலுமிச்சை சாறு விட்டுக் கலந்து இந்தக் கலவையை பாதங்களில் தடவி உலர விடுங்கள். தினமும் இப்படி செய்தால் 15 நாட்களில் பாதவெடிப்புகள் மாயமாக மறையும்.

சருமத்தில் எண்ணெய்ப்பசை இல்லாததால் ஏற்படும் பிரச்னைதான் குதிகால் வெடிப்பு. தினமும் ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இந்த மூன்று எண்ணெய்களையும் கலந்து வைத்துக் கொண்டு இரவு உறங்குமுன் பாதங்களில் நன்றாக தடவி அதன் பின்னர் சாக்ஸ் அணிந்து உறங்குங்கள். விரைவிலேயே பாதவெடிப்புகள் மறைந்து பளிச்சென்ற பாதங்கள் உங்களுக்கு கிடைக்கும். 

Youtube

வேப்பிலை மாற்று மஞ்சள் இரண்டு பொடிகளையும் சம அளவில் கலந்து அதில் நீர் விட்டு பிசைந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை பாதவெடிப்பு பகுதிகளில் பசை போல போடுங்கள். 30 நிமிடங்கள் கழித்து கால்களைக் கழுவிக் கொள்ளுங்கள். வெடிப்புகளால் ஏற்பட்ட காயங்களை இந்தக் கலவை ஆற்றி விடும். ஒரு வாரம் விடாமல் செய்யவும்.

பாதங்களை வெந்நீரில் 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் கடல்பாசி கொண்டு கால்களின் அழுக்குகளைத் தேய்த்துக் கழுவவும். அதன்பின்னர் மூன்று ஸ்பூன் அரிசி மாவு, சில துளிகள் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றைக் கலந்து இக்கலவையைக் கால்களில் நன்றாகத் தேய்த்து ஸ்க்ரப் செய்து ஊற வைத்துப் பின்னர் கழுவி வாருங்கள். சீக்கிரமே பாதவெடிப்புகள் மாயமாக மறையும். 

வெள்ளை வினிகர் , சில துளி ஆலிவ் எண்ணெய் இவை இரண்டையும் வெந்நீரில் கலந்து அந்த நீரில் கால்களை 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன்பின்னர் கால்களைத் துடைத்துக் கொண்டு மாய்ச்சுரைஸைர் போட வேண்டும். இப்படி தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் குளிர்காலம் தொடங்கும் முன்னரே உங்கள் பாதங்கள் மிருதுவாகவும் வெடிப்புகள் அற்றும் இருக்கும். 

 

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ்தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                   

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.                                          

Read More From Beauty