Fitness

அசிங்கமான அடி வயிற்று சதையை அழகாக குறைக்க சில எளிய உடல்பயிற்சிகள்

Deepa Lakshmi  |  Jan 21, 2020
அசிங்கமான அடி வயிற்று சதையை அழகாக குறைக்க சில எளிய உடல்பயிற்சிகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் உங்கள் தொப்பை அதிகரித்து விடுகிறதா? இதன்னால் நீங்கள் கவலைப்பட்டு உங்கள் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் விடை ஆம் என்றால் உங்கள் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

தொப்பை (belly fat) என்பது உங்கள் வடிவத்தை மட்டுமல்ல உங்கள் ஆரோக்கியத்தையும் கெடுத்து விடுகிறது.மேலும் ஒரு சிலர் உணவுக்கு கட்டுப்பாட்டின் மூலம் மட்டுமே உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பை கரைத்து விடலாம் என நினைக்கின்றனர். ஆனால் உணவு கட்டுப்பாட்டோடு உடல் பயிற்சியும் செய்வதன் மூலமே வயிற்று கொழுப்பை சரி செய்ய முடியும். இதற்கென உங்கள் நாளின் ஒரு மணி நேரத்தை நீங்கள் செலவு செய்ய வேண்டி வரும்.

உங்களுக்காகவே உங்கள் தொப்பையை குறைக்க (reduce) எளிய உடல் பயிற்சிகள் (exercises) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தினமும் செய்து சில நாட்களில் உங்கள் வனப்பையும் ஆரோக்கியத்தையும் மீட்டெடுங்கள்.

க்ரன்ச்சஸ் (Crunchus)

வயிற்று கொழுப்பை கரைப்பதில் இந்த உடல்பயிற்சி முதலிடம் வகிக்கிறது. இந்த பயிற்சியை நீங்கள் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது.

தரையில் ஒரு விரிப்பை விரித்து அதில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்.
முழங்கால்கள் மடித்தும் பாதங்கள் தரையில் ஊன்றியும் இருப்பது அவசியம்.
உங்கள் கைகளை உங்கள் தலைக்கு பின்புறமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மூச்சை உள்ளிழுத்து கால்களை மேலே தூக்கவும். மேலே தூக்குகையில் மூச்சை வெளியே விடவும்.
கால்களை மீண்டும் மடித்து கீழே கொண்டு வரவும்.
இதை போல 10 செட்கள் மூன்று முறை செய்யவும்.

இந்த உடல் பயிற்சி செய்யும்போது உங்கள் பின் தலையை அசைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் உங்கள் கழுத்து வலி வரலாம். கவனம்.

 

Youtube

ட்விஸ்ட் க்ரன்ச்சஸ் (Twist Crunchus)

மேலே குறிப்பிட்டபடி உங்கள் உடற்ப்பயிற்சிகளை செய்து உங்கள் உடல் அதற்கு பழகியபின் நீங்கள் இரண்டாவது இந்த ட்விஸ்ட் க்ரஞ்சஸ் பயிற்சியை மேற்கொள்ளவும்.

தரையில் படுத்து உங்கள் கைகளை பின்தலையில் வைத்து மல்லாந்து படுக்கவும்.
உங்கள் முழங்கால்களை முதல் உடல்பயிற்சியில் செய்ததை போல மடக்கவும்.
இதற்கு முன் செய்த உடற்பயிற்சியில் உங்கள் கால்களை மேலே நீட்டி செய்தீர்கள். 
இப்போது உங்கள் வலது தோளை இடது பக்கமாக திருப்ப வேண்டும்.
மீண்டும் இடது தோளை வலப்பக்கமாக திருப்ப வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்கள் உடலின் வலது பக்கம் தரையில் படும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதைப் போல 10 முறை செய்யவும்.

Youtube

பக்கவாட்டு க்ரன்ச் (Lateral Crunch)

இந்த உடல்பயிற்சி ட்விஸ்ட் க்ரன்ச்சஸ் போலவேதான்.
மல்லாந்து படுத்துக்க கொள்ளவும். உங்கள் இடது தோளை வலப்புறம் கொண்டு வரும்போது உங்கள் இடது காலையும் அதே போல வலப்புறம் கொண்டு வர வேண்டும்.

இதனை நிதானமாக செய்ய வேண்டும். வேகமாக செய்ய வேண்டாம். அவசரமாக செய்வதால் உடலின் நடுப்பகுதி காயப்படலாம்.

Youtube

ரிவர்ஸ் க்ரன்ச்சஸ் (Reverse Crunchus)

இப்போது தொப்பையை குறைக்க ரிவர்ஸ் முறையில் இந்த உடற்பயிற்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மல்லாந்து படுக்கவும்.
கைகளை உடலுக்கு அருகே வைக்கவும்.
வெறும் கால்களை மட்டும் மடக்காமல் உங்கள் முதுகு புறத்தையும் சேர்த்து மேலே தூக்கவும். இந்த முறையில் செய்தால் உங்கள் உடலின் பக்கவாட்டு கொழுப்புகள் கரையும்.

உங்கள் முதுகு பகுதியை நீங்கள் நேராக வைக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அதனை நீங்கள் தூக்குகையில் வலி அல்லது காயங்கள் கூட ஏற்படலாம்.

Youtube

செங்குத்தான க்ரன்ச்சஸ் (Steep Grains)

தரையில் படுத்து கால்களை வழக்கம் போல மடக்கி கைகளை பின்புறம் கட்டவும்.
இப்போது மடக்கப்பட்ட கால்களை உங்கள் சீலிங் நோக்கி நேராக நீட்டவும்.
இவ்வாறு செய்யும் போது உங்கள் கால்கள் கிரிஸ் க்ராஸ் நிலையில் ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கும் படி இருக்கவேண்டும்.
முன்பு செய்தது போல கால்களை உயரே தூக்கும் போது மெலிதாக மூச்சை வெளியே விடவும்.தரைக்கு வரும் உள்ளே இழுக்கவும்.

12 முதல் 15 செட்கள் இதைப்போல மூன்று முறை செய்யவும்.

ஆரம்பத்தில் மெதுவாகவும் குறைவாகவும் செய்யவும். அதிகமாக செய்தால் உடலில் காயங்கள் ஏற்படும்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Fitness