
தீபாவளின்னாலே ஸ்வீட்ஸ் தான் இல்லையா. ஸ்வீட்ஸ் அண்ட் பலகாரம் சாப்பிட்டு புது டிரஸ் போட்டு பட்டாசு வெடிச்சு அந்த வருஷத்திய துக்கங்களை மறந்துட்டு பழைய வாழ்க்கைக்கு திரும்பறதுதான் பண்டிகைன்றது.
ஸ்வீட்ஸ் எப்பவும் வெளில வாங்கியே பல வருஷமா பழகி போனவங்க இந்த வருஷம் புது முயற்சியா அதிக நேரம் எடுக்காத சுலபமான ஸ்வீட்ஸ் வீட்ல செஞ்சு உங்க கைப்பட குடும்பத்தாருக்கு கொடுத்து அசத்துங்க.
காஜூ கத்லிக்கு பல லட்சம் காதலிகள் இருப்பாங்கன்னு தெரியும். எப்பயும் காஸ்ட்லியான அந்த ஸ்வீட் இப்போ வீட்ல தயாரிக்கறதால பாதி செலவு மட்டுமே ஆக போகுது. எப்படி பண்ணறது அதுக்கு என்னென்ன வேணும்கறதா பார்க்கலாம் வாங்க. (receipe)
காஜூ கத்லி
தேவையான பொருட்கள் :
முந்திரி – 1 கப்
சர்க்கரை – 1/2 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்
Youtube
செய்முறை
முதலில் முந்திரியை நன்றாக பொடித்து நைசாக இருக்கும் பதத்தில் எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். (நெய்யில் கொட்ட வசதியாக இருக்குமாறு தட்டையான பாத்திரங்களை பயன்படுத்துங்கள்)
ஒரு வாணலியில் சர்க்கரையை சேர்த்து அதனுடன் கால் கப் தண்ணீர் சேர்க்கவும். சர்க்கரை பாகு ஒரு கம்பி பதம் வந்த உடன் மிதமான சூட்டில் அடுப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அந்த சர்க்கரை பாகிலேயே நெய் மற்றும் முந்திரி பொடியை ஊற்றி கிளறியபடியே இருக்கவும். இறுதியாக ஏலக்காய்தூள் சேர்க்கவும். நன்றாக திரண்டு வரும்போது இறக்கி விடவும்.
ஒரு நீளமான தட்டில் நெய் தடவி கத்லியை கொட்டி பரப்பி உங்களுக்கு பிடித்த வடிவத்தில் துண்டுகளாக்கவும். அவ்வளவுதான் உங்கள் ஆரோக்கியத்திற்கு உதவும் காஜூ கத்லி சில நிமிடங்களில் தயார்
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Food & Nightlife
உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வரகரிசி காய்கறி தோசை… வீட்டிலேயே செய்து கொடுங்கள்!
Swathi Subramanian
உணவுகளில் ருசிக்காக சேர்க்கப்படும் வெங்காயத்தாள் கீரையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்!
Swathi Subramanian
உடலுக்கு தேவையான சத்துக்கள் மற்றும் சருமத்துக்குப் பொலிவையும் தரும் கிர்ணி பழம்!
Swathi Subramanian