Dating
ஒரு உறவில் ஏன் முறிவு நிகழ்கிறது? பிரேக்கப் என்பதன் பின்னணி அறிந்து கொள்ளுங்கள் (Reasons For Breakup In Tamil)
Table of Contents
பிரேக்கப் இந்த வார்த்தையை கேட்காத காதுகள் இல்லை என்பது போன்ற மாய உலகில் நாம் வசிக்கிறோம். நேற்று காதலித்து இன்று விலகி கொள்பவர்கள் பற்றி நமக்கு கவலைகள் இல்லை. ஏன் என்றால் அவர்கள் காதலிக்கவே இல்லை.
ஆனால் உண்மையாக உயிருக்கு உயிராக காதலித்தும் கூட சில சமயங்களில் பிரேக்கப் நடக்கத்தான் செய்கிறது. காரணமே இல்லாமல் ஒரு காதல் நிராகரிக்கப்படுவதாக எண்ணி பலவிதமான தவறுகளை செய்யவும் தோன்றும். இப்படியான காதல் உறவுகளில் பிரேக்கப் (breakup) என்ன காரணங்களால் நிகழ்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொண்டால் உஷாராக தப்பிக்க முடியும்.
மற்றவரை விடுங்கள், முதலில் நம் மீது நாம் கருணையாக இருக்கிறோமா ?
Table Of Contents
2. புரிதலின்மை (Understanding)
3. பாதுகாப்பின்மை (Insecurity)
4. பொருளாதாரம் ஒரு காரணம் (Economy)
உறவுமுறிவுக்கான பொதுவான காரணங்கள் (Causes Of Relationship Breakup In Tamil)
துரோகம் (Treachery)
காதலிக்கும் நபருக்கு துரோகம் செய்வதை எந்த ஒரு துணையும் ஏற்று கொள்ள மாட்டார்கள். நீங்களோ அல்லது நீங்கள் நேசிப்பவரோ உங்களிடம் உண்மையாக நம்பிக்கையாக நடந்து கொள்ளவில்லை என்றால் நிச்சயம் பிரேக்கப் மட்டுமே அதற்கான தீர்வு.
புரிதலின்மை (Understanding)
காதலிக்கும்போது எல்லாம் புரிந்த மாதிரி தலையை ஆட்டுவதெல்லாம் நீண்ட நாள்களுக்கு நிலைக்காது. காலம் எல்லாவற்றையும் காட்டி கொடுக்கும் கண்ணாடி. ஆரம்பத்தில் உங்களால் கவனிக்கப்படாத பல விஷயங்கள் பின்னாட்களில் பூதாகரமான சிக்கலை உருவாக்கலாம். உங்கள் இருவரில் யாரேனும் ஒருவர் புரிந்து கொள்ளாமல் நடக்கும்போது நிச்சயம் பிரச்னைதான். தொடர்ந்து புரிதல்கள் இல்லாத நிலை நடந்து கொண்டே இருந்தால் நிச்சயம் நீங்கள் பிரிந்துதான் ஆக வேண்டும்.
உங்களோடு “செம்புலப் பெயர் நீர் போல ஒன்றிணையும்” ஒரு இதயத்தை கண்டுபிடிக்க 9 குறிப்புகள்
பாதுகாப்பின்மை (Insecurity)
ஒரு உறவில் நிச்சயம் பாதுகாப்பு வேண்டும். நிச்சயமாக பாதுகாப்புக்காகவே பலர் உறவுகளை ஏற்படுத்துவார்கள். அந்த நிலையில் நீங்களோ உங்களுடன் இருப்பவரோ பரஸ்பரம் பாதுகாப்புகளை தர தவறினால் மர்மங்கள் நிறைந்த ரகசிய மனிதராக உங்களை காட்டி கொண்டால் இந்த உறவு நிலைக்குமா இல்லை நாம் புறக்கணிக்கப்படுவோமா என்கிற கேள்வி அடுத்தவருக்கு எழும். நீண்ட நாட்கள் இப்படிப்பட்ட உறவுகள் நிலைக்காது.
உண்மையான நேசம் இல்லாத போது (Break Up Advice)
உங்களுக்குள் நடந்து முடிந்தது எல்லாம் காதலின் பொருட்டு அல்ல, வெறும் ஈர்ப்பினால் என்று நீங்கள் உணரும்போது சில சமயம் அது பிரேக்கப்பில் முடியலாம். இந்த மாதிரி நேரங்களில் நீங்கள் உடனே முடிவெடுக்காமல் கொஞ்சம் யோசித்து வேறு வழிகள் இல்லாத பட்சத்தில் இந்த முடிவினை எடுக்கலாம்.
உங்கள் உறவில் சந்தேக விரிசல்கள் விழுகிறதா? செய்ய வேண்டியது என்ன
பொருளாதாரம் ஒரு காரணம் (Economy)
பணம் பாதாளம் வரைக்கும் பாயும்போது உங்கள் காதலின் ஆழம் வரை பாயாதா என்ன. சில சமயங்களில் தெய்வீக காதல்கள் எல்லாம் உடன் நம்மோடு காலம் முழுக்க பயணிக்க போகும் துணையை பத்திரமாக பராமரிப்பதில் யோசனை செய்யும் காதலர்கள் தற்போது அதிகம் ஆகி விட்டார்கள். பெண்மையை பூ போல பாதுகாப்பது என்பதெல்லாம் உதட்டளவில் மட்டுமே. தவிர பெண்களில் சிலரும் சரியான பொருளாதார நிலை அற்ற ஆண்களை சகிப்பதில்லை.
முந்தைய ஈர்ப்புகள் இனிமேல் இருக்காது (Attractions)
காதலிப்பதாக சொல்லி கொள்ளும் போது இருவருக்கு இடையே எல்லாமே ஒரே போல இருக்கும். ஒரே விருப்பங்கள் ஒரே சிந்தனைகள் என பல விஷயங்கள் ஆச்சர்யமாக இருக்கும். ஆனால் சில நாட்கள் கழித்து பார்க்கும்போது எல்லாமே ஒரு ஆரம்பகால ஈர்ப்பு காரணமாக உங்களுக்கு தோன்றியவைதான் என்பது உங்களுக்கு புரிய வரும்.
தாம்பத்ய வாழ்க்கை எப்போது அதிகம் பாதிக்கப்படும்!
மோசடி அல்லது தவறாக பயன்படுத்துவது (Fraud Or Misuse)
நாம் நேசிக்கும் சக மனிதரை காரணங்கள் இல்லாமல் நேசித்தால் பரவாயில்லை. சில முக்கிய காரணங்களுக்காக அவருடன் பழகுவது , அல்லது அவரை பயன்படுத்தி கொள்வதை அவருக்கே தெரியாமல் பார்த்து கொள்வது போன்ற பழக்கங்கள் உங்கள் காதல் உறவை பிரிவில் மட்டுமே கொண்டு போய் விடும். ஒருவரை ஏமாற்றி மோசடி செய்வது போலத்தான் ஒருவருடைய அன்பை பயன்படுத்த நினைப்பதும் என்பதை ஏற்று கொள்ளுங்கள்.
காதலுக்காக நீங்கள் மெனக்கெடாத போது (No Planned Love)
ஒரு சில காதலர்களை பார்த்திருப்பீர்கள். உறவை தக்க வைத்துக் கொள்ள பலவிதங்களில் மெனக்கெடுவார்கள். முடியாததை எல்லாம் முயற்சித்து நடத்தி காட்டுவார்கள். ஏதாவது காரணங்களால் சங்கடங்கள் நடந்திருந்தாலும் இந்த மெனக்கெடல்கள் அவர்களின் அன்பை நமக்கு திரும்ப கொண்டு வந்து கொடுக்கும். அப்படி ஒரு உறவை தக்க வைத்து கொள்ள நீங்கள் விரும்பாத போது அது ப்ரேக்கப்பில் முடியலாம்.
உங்கள் எக்ஸ் பற்றிய உண்மைகளை உங்கள் துணையிடம் சொல்வது நல்லதா?
குண நலன்கள் ஒத்து போகாத போது (Healing Benefits)
உங்களில் ஒருவர் தாராளமாக செலவு செய்ய விரும்புபவராகவும் இன்னொருவர் சிக்கனமாக இருக்க நினைப்பது, ஒருவர் உலகமே பொழுதுபோக்காக இருப்பது இன்னொருவரோ படு சீரியஸான பார்ட்டியாக இருப்பது போன்ற எதிர் குணங்கள் உங்கள் உறவை நீண்ட நாள்கள் நிலைத்திருக்க விடாது. சகித்து கொள்ளலாமே தவிர ஏற்று கொள்ள முடியாமல் போகும் சமயங்களில் நீங்கள் நண்பர்களாக இருப்பதே நல்லது.
நம்பிக்கையை உடைத்த பின் (Broken Trust)
ஒருவர் மீதான நம்பிக்கையை தனது போலியான செய்கைகள் மூலம் இன்னொருவர் உடைத்து விட்டார் என்றால் அந்த உறவு நிலைக்க வாய்ப்புகள் குறைவு. பொய் எனும் முகமூடி உங்கள் முகத்தில் நிரந்தரமாக இருக்க முடியாது. அது கிழிந்து போகும் போது நம்பிக்கை உடைந்த இன்னொரு துணை உங்களை விட்டு விலகலாம்.
பிரேக்கப் என்பது காதல்களோடு நிற்பதில்லை (Breakup Is Not A Stand In For Romance)
மேற்கூறிய காரணங்கள் காதலில் இருப்பவருக்கு மட்டுமே ஏற்படுவதில்லை. அந்த காதலை அவசரமாக நிறைவேற்றி கொள்ள திருமணம் செய்து கொள்ளும் காதலர்கள் மூலம் திருமண உறவும் முறிக்கின்றன. மேற்கூறிய அதே காரணங்களுக்காகவே திருமணங்கள் பெற்றோர் பார்த்ததோ காதல் மணமோ எதுவாக இருந்தாலும் முதல் இரண்டு வருடங்களில் முறிவினை சந்திக்கின்றன.
ஏன் முதல் இரண்டு வருடங்களில் இது அதிகமாக நிகழ்கிறது (Why It Happens In The First Two Years)
புரிந்து கொள்ள முடியாத உறவுகள் கொடுமையானவை (Not Understanding In Relationships)
மற்றவர்களுக்காக பயப்படுவதால் தான் பெரும்பாலான உறவுகள் இன்னமும் இருக்கின்றன. வெறும் நடிப்பளவில் அது உறவு என்கிற பெயரை கொண்டுள்ளது. மற்றவர் என்ன நினைப்பார்களோ என்பதற்காக நீங்கள் வாழ்நாள் முழுதும் பொருத்தமில்லாத ஒருவருடன் வாழ முடியுமா என்பது பற்றி யோசித்து முடிவெடுங்கள். இப்படிப்பட்ட உறவுகளோடு வாழ்வதுதான் ப்ரேக்கப்பை விடவும் கொடுமையானது.
காலம் நிறங்களை வெளிர செய்யும் (Periods Will Brighten)
காதல் காலங்களில் நீங்கள் நடந்து கொண்டது எல்லாமே அடுத்தவரை ஈர்க்கத்தான். அதை விடுத்தது பக்குவமாக உங்கள் குறைகளையும் காட்டியிருந்தால் பிரச்னைகள் இருக்காது. உங்களது நல்ல பக்கத்தை மட்டுமே நீங்கள் அவர்களுக்கு காண்பித்திருக்கிறீர்கள் என்றால் வெகு நாட்களுக்கு உங்களால் அப்படி இருக்க முடியாது. உண்மையான நிறங்கள் வெளியாகும் போது அதனை ஏற்று கொள்ள முடியாமல் பிரேக்கப் நிகழத்தான் செய்யும்.
காதல் வியாபாரம் நஷ்டத்தில் முடிகின்ற போது (Love Ends In Loss)
எல்லாருமே தாங்கள் போட்ட முதலீட்டில் லாபம் பார்க்க நினைக்கும் வியாபாரிகளாகவே இருக்கிறார்கள். வெகு சிலர்தான் இதனை உண்மையான உறவாக பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட வியாபார உலகில் உங்கள் காதலால் அவர்களுக்கு நன்மை எதுவும் இல்லை என்றால் கொடுத்த அன்பை திரும்ப கொண்டு போவதில் கறாராகவே நடப்பார்கள். அப்படிப்பட்டவர்களின் அன்பை கெஞ்சி வாங்கி வைத்து நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?
முதல் இம்ப்ரெஷன்கள் முடிவுக்கு வரும் போது (When The First Impression Ends)
ஒருவரை பார்த்த உடனே நம் மனத்தில் காரணமே இல்லாமல் பிடித்து போகும். அவரோடு பழக பழக அவரது செயல்கள் எல்லாம் நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால் சில காலம் அதாவது ஒரு வருடத்திற்கு பின்னர் இவை எல்லாம் நமக்கு பழகி போவதால் அந்த ஆச்சர்யங்களை நாம் தொலைக்கிறோம். இது புரியாமல் நமக்கு பிடிக்கவில்லை என்று நாமே நினைத்து கொள்கிறோம்.
முன்பை போல இல்லாத போது (Not As Before)
நாம் பழகிய உறவு நம்மிடம் ஏதோ ஒரு குணம் பிடித்துத்தான் நம்மோடு பேசவே ஆரம்பித்திருப்பார்கள். அப்படிப்பட்ட குணங்கள்தான் அவர்களை காதல்வரை கொண்டு வந்திருக்கும். காலங்கள் மாறும்போது அந்த குணங்களை நம்மால் அவர்களிடம் அடையாளம் காண முடியாமல் போகலாம். அன்பே உருவான காதலி திடீரென அரக்கி போல மாறுவதும் நேர்மையாக இருந்த காதலன் கள்ளத்தனங்கள் புரிவதும் காதலை உடைய செய்யும்.
இது போன்ற முக்கிய காரணங்களால் மட்டுமேதான் பிரேக்கப் நிகழ்கிறது என்று கூற முடியாது. ஆனால் இவைகள்தான் முதல் காரணங்களாக சொல்லப்படுகிறது. உங்கள் உறவில் இது போன்ற அறிகுறிகள் இருந்தால் அதனை பற்றி உங்கள் துணையுடன் வெளிப்படையாக பேசி முடிவு செய்வதுதான் நல்லது.
புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.