Celebrity Life

நடிகர் அஜித்தின் வாழ்நாள் லட்சியம், அரசியல் ஆர்வம் குறித்து ரங்கராஜ் பாண்டே ஓபன் டாக்!

Swathi Subramanian  |  Aug 8, 2019
நடிகர் அஜித்தின் வாழ்நாள் லட்சியம், அரசியல் ஆர்வம் குறித்து ரங்கராஜ் பாண்டே ஓபன் டாக்!

நடிகர் அஜித் (ajith) நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் இன்று காலை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரின் போனி கபூரின்  தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகியுள்ள இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்தர், டெல்லி கணேஷ், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

twitter

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி கார், பைக், ஆளில்லா விமானம் இயக்கும் ஏரோ மாடலிங், ஃபோட்டோகிராபி என பலவற்றிலும் ஆர்வம் கொண்ட அஜித்திற்கு துப்பாக்கிச்சுடுவது உள்ளிட்ட விளையாட்டு சம்மந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் அதிகம். சமீபத்தில் கூட மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு விளம்பரமும் இன்றி விளையாட்டு துறை மீதான தனது ஆர்வத்தை நடிகர் அஜித் வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே அஜித் உடனான தனது நட்பு குறித்தும், நேர்கொண்ட பார்வை ஷூட்டிங் குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அப்போது  நடிகர் அஜித் குறித்து பேசிய பாண்டே, அஜித்திற்கு நடிப்பையும் தாண்டி விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் உள்ளது அனைவருக்கும் தெரிந்தது தான். விளையாட்டு தான் ஒரு மனிதனை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தும் என்று அஜித் நம்புகிறார்.

பிக் பாஸில் ஆண்களாக வேடமணிந்து கலக்கிய மதுமிதா, அபிராமி.. அதிரடியாக நுழையும் கஸ்தூரி!

twitter

அவரது வாழ்க்கையில் சாதிக்கக் கூடிய விஷயமாக அஜித் கருதுவது அவருடைய ரசிகர்கள் ஏதேனும் ஒரு விளையாட்டு துறையில் அவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் என கூறியுள்ளார். என்னிடம் தனிப்பட்ட முறையில் அவர் கூறியது, ஒரு ஸ்போர்ட்ஸ் அகாடமி உருவாக்க வேண்டும் என்பது தான் என்னுடைய வாழ்நாள் லட்சியம் என்றார். மேலும் விளையாட்டு தான் மனிதர்களுக்கு பாசிட்டி வாழ்க்கையை கொடுக்கும் என அஜித் சார் நம்புவதாகவும், இளைஞர்களை விளையாட்டில் என்கரேஜ் செய்ய வேண்டும் என்று அஜித் விரும்புகிறார் என ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார். 

தன்னுடைய இளம்வயதில் படிக்காத பசங்களுக்கு விளையாட்டை ஊக்குவித்து மகிழ்ந்ததாக பாண்டே கூறினார். படிப்பில் தோற்றவர்கள் தற்கொலை செய்துள்ளதாக கேள்வி பட்டிருப்போம் ஆனால் விளையாட்டில் தோற்ற யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை என்பதால் விளையாட்டு அனைவரும் தேவை என அவர் தெரிவித்தார். அஜித்தின் வளர்ச்சி மற்றவர்களை விட வித்தியாசமானது என்றும் குறைந்த நாட்களிலே மிகவும் பழகிய நண்பராக அவர் நடந்து கொண்டதாக கூறினார். 

twitter

உண்மையான நட்புடன் அவர் பழகியதாகவும், 27 வருட அனுபவம் வாய்ந்தவராக அஜித் தன்னை காட்டி கொள்ளவில்லை என பாண்டே கூறினார். அஜித்தை (ajith) நல்ல நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர், பார்வையிலேயே தனது திறமையை நிரூபிப்பவர் அஜித். மேலும் வில்லத்தனமான வசனங்கள் அவர் கூறும் போது வேற லேவலில் இருந்ததார். அஜித் மிகவும் ஜாலியான குணம் வாய்ந்தவர். அனைவரையும் நன்றாக கலாய்ப்பார். எல்லாரிடமும் இயல்பாக பழகும் குணம் கொண்டவர் என்று பாண்டே கூறினார். 

அடுத்தவர் காதலனை காதலிக்கும் லாஸ்லியா மற்றும் அபிராமி இந்த உலகிற்கு சொல்ல வருவது என்ன ?

ஆனால் அதே நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் மிகவுடன் பொறுப்புடன் நடந்து கொள்ளவர். நடிக்கும் போது அவருடைய கவனம் முழுவதும் அதில் மட்டுமே இருக்கும். நடிப்பு சரியாக வந்துள்ளதா அல்லது ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா என அனைவரிடம் கேட்பார். அஜித்தை நேர்காணல் செய்ய வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும். அஜித் விருப்பப்பட்டால் கண்டிப்பாக அதனை நான் செய்வேன். அஜித்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த பேட்டியை பாருங்கள் என்ற தலைப்பில் நேர்காணல் நடத்துவேன் என பாண்டே உறுதியளித்துள்ளார்.

twitter

அஜித் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், சூட்டிங் நேரத்தில் கூட குழந்தைகளுடன் பேசி மகிழ்வதாகவும் தெரிவித்தார். அரசியல் குறித்த பேச்சுவார்த்தையில் அஜித்தின் அரசியல் பார்வை எல்லா தனி மனிதனும் ஓட்டு போட வேண்டும், ஓட்டு போட வரிசையில் நிற்கும் சாமானிய மனிதனாக மட்டுமே அஜித் இருக்க விரும்புவதாக பாண்டே தகவல் அளித்துள்ளார். வெற்றி சுலபமாக கிடைக்காது . சினிமா பின்னணி இல்லாத நடுத்தர வர்க்கம் குடும்பத்தில் இருந்து கஷ்டப்பட்டு அஜித் (ajith) வெற்றி பெற்றுள்ளார். 

அவருக்கு எதிரான விஷயங்கள் நடைபெற்ற போது கூட அவர் பொறுமையாக கையாண்டார். நாம் அங்கு இருந்தால் கூட அப்படி இருந்திருக்க மாட்டோம். உங்களை அடித்து நான் ஜெயிக்க வேண்டியதில்லை, உங்களுக்கு முன் சென்று நான் ஜெயிக்கலாம் என்பதே அஜித்தின் பாணி என்றும், அவர் பெற்றது மிகவும் கவுரவமான வெற்றி யாரும் அவரை குறை கூற முடியாத அளவிற்கு அவரது வெற்றி உள்ளது என்று ரங்கராஜ் பாண்டே கூறியுள்ளார். 

என் மனைவி ஆசையை நிறைவேற்றிட்டேன்.. அஜித் இன்றி இது சாத்தியமில்லை : நெகிழ்ந்த போனி கபூர்!

twitter

இதனை தொடர்ந்து இயக்குனர் வினோத் குறித்து பேசுகையில், இயக்குனர் வினோத் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிப்பார். அஜித் மற்றும் இயக்குனர் வினோத் இடையே நல்ல புரிதல் இருப்பதாகவும், நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு பிரேமிற்கும் அஜித்திற்கு மாஸ் சீசனை வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். என்னை ரங்கராஜ் பாண்டேவாக நடித்தால் மட்டுமே போதும் என்றார். பசு மாட்டில் பால் கறப்பது போல் எளிதாக செய்தார். கேமரா பார்த்து எனக்கு எந்த பயமும் இல்லை. நான் சரியாக நடிக்காமல் இருந்தால், படம் தான் பாதிக்கப்படும். ஆகையால் அந்த பொறுப்பை உணர்ந்து நான் நடித்தேன் என்று ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

 

Read More From Celebrity Life