Celebrity gossip
தமிழ் சினிமாவின் ஆதர்ஷ நடிகர் ரகுவரனின் மகன் ரிஷிவரன் ! ஆச்சர்யம் தரும் புகைப்படம் !

காலம் தான் எவ்வளவு வேகமாக நகர்கிறது. நம் ப்ரியத்துக்குரியவர்களை இழந்த இடத்திலேயே விட்டு விட்டு நாமும் அதனூடே நகர்கிறோம். அப்படி தமிழக மக்களின் ப்ரியத்திற்கு உரித்தானவர் நடிகர் ரகுவரன் (raguvaran) . இவரது உயரமும் இவரது குரலும் இவருக்கு தனி ஆளுமையைத் தந்திருந்தன.
அக்கா எனும் மலையாளப் படம் மூலம் திரைக்கு அறிமுகமானவர் ரகுவரன். தமிழில் ஏழாவது மனிதன் என்கிற திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார். அதில் யதார்த்த குடும்பத்தை சேர்ந்த சாதாரண கதாநாயகனாக வெகு இயல்பாக அவர் நடித்திருப்பார்.
ஆரம்ப திரைப்படத்திலேயே கதாநாயகனாக அறிமுகம் ஆனாலும் அதன் பின்னர் அப்போதைய சினிமாவில் நிலைத்து நிற்க ரகுவரன் வில்லன் வேடங்களை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். அவரது வில்லன் கதாபாத்திரமும் அதற்கேற்றபடி மாறி வெகு இயல்பாக நடித்து அசத்தும் திறமையும் ரகுவரனை (raguvaran) கதாநாயகர்களுக்கு சமமான அந்தஸ்துடன் மக்கள் மனதில் திகழ செய்தது.
Youtube
புரியாத புதிர் திரைப்படம் இவரது ஐ நோ (I Know) வசனத்திற்காக மட்டுமே பல வாரங்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது. அதன் பின் தன்னுடைய கதாபாத்திரங்களில் தன்னுடைய தன்மைக்கேற்றவாறு செதுக்கி கொண்டு பல வெற்றி திரைப்படங்களில் வலம் வந்தார்.
நிறைய படங்கள் இவரது கதாபாத்திரத்திற்காகவே ஓடியது. இவரது குரலுக்கென்று தனிப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவர் ஸ்கீரினில் வந்தால் ஹீரோக்களுக்கு இணையான கைத்தட்டல்களும் விசில்களும் பறப்பது ஆச்சர்யமான உண்மைதான்.
Youtube
Youtube
யாரடி நீ மோஹினி திரைப்படம் இவரது இறுதி படமாக மாறியிருந்தது பெரும் வேதனை. தனிப்பட்ட வாழ்க்கையில் பல சோகங்களை தனி ஒருவராகவே சந்தித்த ரகுவரன் தனியாகவே மரணமடைந்தார்.
அவருக்கும் நடிகை ரோகிணிக்கும் 1996ம் வருடம் திருமணம் நடந்தது. திருமணமான இரண்டு வருடங்களில் இவர்களுக்கு ரிஷிவரன் என்கிற மகன் பிறந்தார். ஆனால் ரோகிணி குழந்தைக்கு ஆறு வயதாகும் போது ரகுவரனை பிரிந்தார். விவாகரத்தில் முடிந்த காதல் திருமணங்களில் ரகுவரன் ரோகிணி திருமணமும் ஒன்றாக மாறியது.
தமிழ் சினிமாவின் பிரியத்துக்குரிய நாயகன் ரகுவரன் மற்றும் ரோகிணியின் மகன் ரிஷிவரன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உயரத்தில் அப்பாவையும் ஜாடையில் அம்மாவையும் தாங்கி இருக்கும் ரிஷிவரன் தமிழ் சினிமாவில் என்ன செய்வார் என்பதை காத்திருந்து பார்ப்போம்.
ஹ்ம்ம்…சரியான நேரத்தில் சரியான பாதையில் நடிகர் ரகுவரன் பயணித்திருந்தால் தமிழ் சினிமாவின் ஷாருக்கான் அவர்தான் என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Celebrity gossip
உங்கள் அழகை பராமரிக்க சில குறிப்புகள்!
Deepa Lakshmi
குழந்தைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்..ஆனால்..குழந்தை இல்லாமை பற்றி நெகிழும் விஜயசாந்தி!
Deepa Lakshmi
அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுகிறோம்.. டயானாவின் மகன் இளவரசர் ஹாரி அதிர்ச்சி முடிவு..
Deepa Lakshmi
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படிப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்தவரா!
Deepa Lakshmi
செம்பருத்தி சீரியலில் ஆதியின் சம்பளம் இவ்வளவா !
Deepa Lakshmi