Lifestyle

டின்னெர்க்கு என்ன சமைக்க? வேலைக்கு போகும் பென்களுக்கான பாஸ்ட் அண்ட் சிம்பல் டின்னர் ரெசிபிஸ் (dinner recipes)

Nithya Lakshmi  |  Jan 8, 2019
டின்னெர்க்கு என்ன  சமைக்க? வேலைக்கு போகும்  பென்களுக்கான பாஸ்ட் அண்ட் சிம்பல் டின்னர்  ரெசிபிஸ் (dinner recipes)

பெண்களின் முக்கிய பொறுப்பில் சமையலுக்கு தனி இடம் உண்டு .சரி, மார்னிங் பிரேக்பாஸ்ட் அப்புறம் லஞ்ச் வேலையெல்லாம் சீக்கிரமா போயிடும். ஆனா  இந்த நைட் டின்னர் தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். வேலைக்கு போயிட்டு வந்து ரொம்ப உடல் அலுப்பு இருக்கும் போது ஈசியா செய்ற டின்னர் ரெசிபி (recipe) இருந்தா  பரவாளையேனு தோணும். ஏன்னா பசி இன்னொருபக்கம் கூப்பிடும்!

இதை எப்படி   சமாளிக்கலாம்னு  பார்க்கலாம் வாங்க…சில சுலபமான  டின்னர் ரெசிபிஸ்  (simple dinner) உங்களுக்கு மிகவும் உதவும். இது சீக்கிரமாக வேலையை முடிப்பது மட்டும் அல்லாமல் பசிக்கு ருசியாகவும் இருக்கும்! 

ஓட்ஸ் தோசை :

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

தேவையான பொருள் :

ஓட்ஸ் -2 cups

வெங்காயம் -2

பச்சை மிளகாய் -1

தக்காளி -1

மிளகு -10

தயிர் -100ml

உப்பு – தேவையான அளவு.

ஓட்ஸ் நல்லா வறுத்து மிக்ஸியில் நன்கு அரைச்சு பவுடர் பன்னிருனும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மல்லி தழை, பச்சை மிளகாய்,  மிளகு 2,3 ஆக உடைத்து, அனைத்தையும் சேர்க்கவும்.

தயிர் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலக்கி கொள்ளவும். தேவைப்பட்டால் சோடா மாவு சேர்க்கலாம்.தோசை கல்லில் தோசை போல எண்ணெய் இட்டு  சுட்டு எடுத்தால் மொறு மொறு ஓட்ஸ் தோசை ரெடி. கம்மி கலோரில யம்மி டின்னர், 10 நிமிசத்துல ரெடி ஆகிருச்சு.

ராகி ரொட்டி :

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

தேவையான பொருள் :
ராகி மாவு -300g
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -1
உப்பு -தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
மல்லி தழை – சிறிதளவு

ராகி மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, மல்லி தழை, உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். தோசை கல்லில் சிறிது எண்ணெய் விட்டு சிறு உருண்டை மாவை வைத்து கையில் தண்ணீர் தொட்டு தட்டி இரண்டு சைடுயும் நல்லா வேக வைத்தால்,  ராகி ரொட்டி ரெடி. 5-7 நிமிடத்தில் சூப்பர்ப்,சிம்பல் ஆனால் டேஸ்டி டின்னர் ரெடி ஆகிரும். இரும்பு சத்து அதிகம் உள்ளதால் அரோக்கிய உணவாக இருக்கும்.

எக்க் பாஸ்தா :

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

தேவையான பொருள் :

முட்டை -2
பாஸ்தா – 200g.
தக்காளி -1
மிளகாய் தூள் -1/2 ts
மஞ்சள் தூள் -1/4 ts
உப்பு – தேவையான அளவு.

பாஸ்தாவை குக்கர்ல ஒரு விசில் வச்சு ஆப் பண்ணிட்டு வடிகட்டி வச்சுக்கணும். கடாயில் எண்ணெய் விட்டு, தக்காளியை அரைத்து சேர்க்கனும் மேலே குறிப்பிட்ட மசாலாவும் உப்பும் சேர்த்து, கிளறி முட்டையை உடைத்து ஊத்தி நன்கு கிளறிய பின் பாஸ்தாவை சேர்க்கவும்.2 நிமிடம் முட்டை வேகும் வரை வைத்தால் போதும். தேவைப்பட்டால் கர மசாலாவும் சேர்க்கலாம்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த எக்க் பாஸ்தா ரெடி.

எக்க் சப்பாத்தி:

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

கோதுமை மாவு -300g
முட்டை -3
வெங்காயம் -2
உப்பு – தேவையான அளவு

சப்பாத்தி மாவுக்கு பிசைந்து வைப்பது போல,  கோதுமை மாவு உப்பு போட்டு பிசைந்து வைத்து கொள்ள வேண்டும். முட்டையில் பொடியாக்கிய வெங்காயம் உப்பு போட்டு நன்கு கலந்து வைக்க வேண்டும்.

ஒரு சப்பாத்தி போல மாவை தேய்த்து கல்லில் போட்டு அதில் கலந்து வைத்த முட்டையை ஊத்த வேண்டும்,அதற்க்கு மேல், இன்னொரு சப்பாத்தி மாவை கொண்டு மூட வேண்டும். போர்க் ஸ்பூன் வைத்து கார்னர் சைடு குத்தினால்  இரண்டு சப்பாத்தி மாவும் ஒட்டி கொள்ளும்.எண்ணெய் விட்டு இரண்டு புறமும் நன்கு வேக விடணும்.டேஷ்டீ ப்ரோடீன் ரிச் டின்னர் ஆக கொஞ்ச நேரத்தில் ரெடி ஆகிருச்சு.

எக்க் சேமியா :

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

தேவையான பொருள் :
சேமியா -1 பாக்கெட்
வெங்காயம் -1
முட்டை -2
மிளகு தூள் -1 டீ ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பச்சை மிளகாய் -1

கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, பச்சை மிளகாய், உப்பு, மிளகு தூள் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து, தண்ணீர் கொதிக்க வைத்து  சேமியா சேர்க்கவும்.தண்ணீர் வற்றிய பின்னர், இரண்டு முட்டை போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து முட்டை வேகும் வரை வைத்தால் போதும். சுட சுட எக்க் சேமியா தயார்.

பிரட் சான்வெச் :

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

பிரட் -1 பாக்கெட்
உருளை கிழங்கு -2
வெங்காயம் -1
பட்டாணி -50g
உப்பு -தேவையான அளவு.
மிளகாய் தூள் -1/2 ஸ்பூன்.
மஞ்சள் தூள்.-1/4 ஸ்பூன்

கிழங்கு குக்கரில் வேக வைத்துக்கொண்டு,  கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கி, பட்டாணி சேர்த்து, வேக வைத்து மசித்த உருளை கிழங்கு சேர்த்து, அனைத்து மசாலாவும் சேர்க்க வேண்டும். தோசை கல்லில் பிரட் போட்டு நடுவில் மசாலா கலவையை வைத்து, மேலேயும் பிரட் வைத்து எண்ணெய் அல்லது நெய் ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்தால் சன்வெச்  ரெடி.

ராகி சேமியா :

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

தேவையான பொருள் :
ராகி சேமியா- 1 பாக்கெட்
தேங்காய் பூ -1 மூடி
ஜீனி – தேவையான அளவு
உப்பு -சிறிதளவு

3 நிமிடம் ராகி சேமியாவை ஊற வைத்து வடித்து இட்லி சட்டியில் 5 நிமிடம் வேக வைத்து, எடுத்து அதில் தேங்காய் பூ, நெய் 1ஸ்பூன், ஜீனி, உப்பு சேர்த்து கிளறினால் ராகி ஸ்வீட் சேமியா ரெடி.

இந்த டின்னர் ரெசிபியோட ஸ்பெஷல், இது எதற்குமே தனியாக சைடு டிஷ் செய்ய வேண்டாம்,10 நிமிசத்துல கலக்குரீங்க… ஓகே?!?!

மேலும் படிக்க – ஹோட்டலை மறந்துவிடுங்கள் ! தமிழகத்தின்  தெருக்களில் கிடைக்கும்  7 ருசியான உணவு வகைகள்

 படங்களின் ஆதாரங்கள் – பிக்ஸாபெ, பேக்செல்ஸ்   

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Lifestyle