
புரட்டாசி மாதம் என்றாலே பக்தி கலந்த சிறப்பு கொண்ட மாதம். தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமான புரட்டாசி பெருமாளுக்கும், சிவனுக்கும் உகந்த மாதம் ஆகும். இம்மாதத்தில் பல விசேஷங்கள் வருகின்றது. அவற்றுள் சில முக்கியமான நிகழ்வுகளையும், ஏன் சிறப்பு (special) பெற்றது, அதனால் என்ன நன்மைகள் என்று பார்க்கலாம்.
புரட்டாசியில் ஏன் அசைவதைத் தவிர்க்கிறார்கள்?
புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். ஏன்னெனில், புரட்டாசி மாதத்தில் பகலில் சூடாகவும், இரவில் மழை பொழியும். இப்படி சூடும், குளிர்ச்சியும் மாறி மாறி இருப்பதால், உஷ்ணத்தை அதிகரித்து விடும். அதனால், உஷ்ணமான மாமிசத்தை உண்டால், தேவை இல்லாத பிரச்சனைகள் உடலில் ஏற்படும். வயிறு கோளாறுகளை உண்டாக்கும். மெட்ராஸ்ஐ போன்ற உஷ்ணத்தால் ஏற்படும் கண் நோய் வரும் மாதம் இது. இந்த மாதிரியான உபாதைகளை தவிர்க்கவே புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிட வேண்டாம் என நம் முன்னோர்கள் விஞ்ஞானப் பூர்வமாகவும் நமக்கு பழக்கம் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இயற்கைக்கு உட்பட்டு, காலநிலைக்குத் தகுந்தவாரு, நம் வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கத்தையும் வகுத்துள்ளனர். இந்த விஷயங்களை கடவுளை வைத்து, அவர்மீது நமக்கு இருக்கும் நம்பிக்கையை வைத்து, கடைபிடிக்கச் செய்தார்கள். ஆனால், இன்றைய குழந்தைகளுக்கு விஞ்ஞானப் பூர்வமாக விளக்கினால்தான் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். நல்ல விஷயங்களை நல்ல படியாக சொல்லிக் கொடுத்து, வரும் சந்ததியரையும், கடவுள் பெயரைச் சொல்லி மரியாதை வருமாறு செய்து, அவர்களும் பயன் பெற்று, நாமும் பயனுறுவோமே!
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
புரட்டாசியில் முதல் விஷேஷம் புரட்டாசி சனிக்கிழமை. சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, கடவுளுக்கு படைத்து பின்னர் உணவு அருந்துவார்கள். ஒரு சிலர் புரட்டாசியில் வரும் எல்லா சனிக்கிழமைகளிலும் விரதம் இருந்து, கடவுளை வணங்குவர். ஒரு சிலர் புரட்டாசி மாதத்தில் வரும் ஏதாவதொரு சனிக்கிழமை மட்டும் விரதம் இருப்பர். ஒரு சிலர் மாதம் முழுவதும் விரதம் இருப்பர். அதாவது, புரட்டாசி மாதம் மட்டும், பூண்டு, வெங்காயம் தவிர்த்து சாத்வீகமான முறையில் உணவை சமைப்பார்கள். இன்றும் கிராமப்புறங்களில், ஒவ்வொரு வீடாக சென்று யாசித்து அரிசி வாங்கிவந்து, மாவிளக்கு செய்து அதில் நெய் விட்டு பெருமாளுக்கு தீபம் ஏற்றுவார்கள். நகரங்களில் இன்றும் பஜனை பாடி வாசிப்பவர்களையும் பார்த்திருப்பீர்கள்.
அரிசிமாவில் செய்த மாவிளக்கு, நெய்யில் எரியும்போது வரும் புகை, நம்மைச் சுற்றியுள்ள தீய சக்திகளை போக்கும் என்பது நம்பிக்கை. அதாவது, நெய்யோடு சேர்ந்து அரிசி மாவு எரியும்போது ப்ரோபைல் அமிலம் (Propyl acid) வெளிவரும். அது அமில மழை வர காரணமாகும். உஷ்ணத்தால் வரும் பிளேக் (plague), அம்மை போன்ற நோய்களில் இருந்து நம்மைக் காக்கும். மேலும், கடவுளுக்கு படைத்தபின் அந்த மாவை அனைவரும் சாப்பிடலாம். அதனால், உங்கள் உடல் உஷ்ணம் குறையும்; உடலில் ஏற்படும் வாதம், பித்தம் போன்ற உபாதைகளில் இருந்தும் விடுபடலாம்.
மஹாளய அமாவாசை என்றால் என்ன?
புரட்டாசி (purattasi month) மாதத்தில் வரும் அமாவாசையை மஹாளய அமாவாசை என்று அழைப்பார்கள்.
அமாவாசைக்கு முன்பு வரும் 15 நாட்களை(இந்த வருடம் 13 செப்டம்பர் முதல் 28 செப்டம்பர் 2019 வரை உள்ள நாட்கள்) மஹாளய பட்சம் என்று கூறுவார்கள். இந்த காலகட்டங்களில் நம் குடும்பத்தில் இறந்த முன்னோர்களை(பித்ருக்கள்) நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தண்ணீரில் கருப்பு எல்லைக் கலந்து கடலில் அல்லது நீர்நிலைகளில் விடுவார்கள் . மேலும், மஹாளய அமாவாசை அன்று குருக்களை அழைத்து தர்ப்பணம் செய்வார்கள். இப்படி இரண்டு முறை செய்வது வழக்கம். நம்முடைய பித்ருக்கள் நம்மை பார்க்க பூமிக்கு வருவதாகவும், அவர்களுக்கு செய்யும் மரியாதையாக, அவர்களின் இறந்த திதி அன்று தர்ப்பணம் செய்வது வழக்கம். அதனால் இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிட்டு, நம் பித்ருக்களை நினைவுகூர்ந்து, அவர்கள் ஆசி பெரும் மாதமாக இம்மாதத்தை கொண்டாடுகிறோம்.
பித்ருக்களுக்காக செய்யப்படும் உணவை ஷராத் என்று அழைப்பார்கள். ஷராத்தில், சாப்பாடு, பருப்பு, பாயாசம், மஞ்சள் பூசணிக்காய், அவரைக்காய் ஆகியவை இருக்கும். இவற்றை பொதுவாக வெள்ளி அல்லது செம்பு பாத்திரத்தில் சமைத்து, வாழை இலையில் பரிமாறி தர்ப்பணம் செய்வார்கள்.
தர்ப்பணம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் :
- நம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த பூஜையில் கலந்து கொள்வார்கள். அதனால் நம் உறவுகளுக்கிடையே ஒரு சுமூகமான மனநிலையை ஏற்படுத்தும்.
- உடல் மற்றும் மனம் சம்மந்தமான வியாதிகளில் இருந்து நம்மை விடுவிக்கும்.
- பொருளாதாரத்தில் ஸ்திர தன்மையை ஏற்படுத்தி, மனதில் அமைதியைக் கொண்டு வரும்.
- பித்ரு தோஷத்தில் இருந்து விடுவிக்கும் என்று நம்புகிறார்கள்.
புரட்டாசி மாதத்தில் வரும் விஷேஷங்களையும், அதன் முக்கியத்துவத்தையும் அறிந்து கொண்டீர்களா? உங்கள் வீட்டிலும் இனி இந்த மாதம் முன்னோர்களை சளித்துக் கொள்ளாமல், சந்தோசமாக கொண்டாடுங்கள்.
மேலும் படிக்க – கலை, தெய்வீகம் மற்றும் அமைதி ஆகியவற்றிற்காக தமிழ்நாட்டில் உள்ள இந்த 30 பிரபலமான கோயில்களை வலம் வாருங்கள்! (ஆங்கிலத்தில்)
பட ஆதாரம் – Instagram
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi