Lifestyle

தம்பதிகளுக்கிடையே தாம்பத்ய வாழ்க்கை சிக்கல்களை சந்திப்பது எப்போது தெரியுமா ?

Deepa Lakshmi  |  Jan 20, 2020
தம்பதிகளுக்கிடையே தாம்பத்ய வாழ்க்கை சிக்கல்களை சந்திப்பது எப்போது தெரியுமா ?

இந்தியாவை பொறுத்தவரை திருமணம் என்பதும் காதல் என்பதும் இணையும் ஒரு புள்ளியாக காமம் (sex) பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கலாச்சார பழக்கவழக்கங்களை பின்பற்றும் மாநிலங்களில் தங்கள் குழந்தைகளுக்கு 10 வயது ஆன உடனே தம்பதிகள் தங்களுக்குள் உள்ள நெருக்கத்தை குறைத்து கொள்கின்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காமம் என்பது உடல் தேவைகளை தாண்டி அன்பை வெளிக்காட்டும் தருணமாக மாறுவது பெரும்பாலும் 30களில் தான். அந்த சமயங்களில்தான் இது மறுக்கப்படுகிறது.     

முதுமை காலங்களில் காமம் என்பது சிலருக்கு அவசியப்படலாமே தவிர பெரும்பான்மையானோர் இதனை தேடுவதில்லை.          

Youtube

35 வயதிற்கு பின்னர் தாம்பத்ய வாழ்க்கையில் மாற்றங்கள் வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது பெண்களின் மாதவிலக்கு நிற்க போவதற்கு முந்தைய premenopause காலம் என்பதால் இந்த காலங்களில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். ஹார்மோன் அளவுகளில் மாறுபாடு ஏற்படலாம். மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று தாம்பத்ய சந்தோஷங்களை தொடர வேண்டியது அவசியம்.                     

பெண்களுக்கு குடும்ப பாரம் வேலைப்பளு மற்றும் பெரியவர் குழந்தைகளை கவனித்தல் போன்ற பல்வேறு பொறுப்புகளால் தாம்பத்ய சுகம் பற்றிய எண்ணங்கள் அடிக்கடி தோன்றாமல் இருக்கலாம். ஆனால் ஆண்களுக்கு அப்போதுதான் தன் அன்பை காமத்தின் மூலம் பகிர தோன்றும்.   

Youtube

ஆகவே நமது மற்ற உறவினர்களை அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கவனிப்பது போல கணவரின் படுக்கையறை தேவைகள் அறிந்து நாம் பூர்த்தி செய்வது அவசியமாகிறது.                      

நடுத்தர வயதுகளில் நமக்கான தேவைகள் பற்றி யோசிக்க கூட நேரம் இல்லாமல் இருக்கலாம். ஓய்வு கிடைக்காமல் தவிக்கலாம். அந்த நேரங்களில் இந்த விஷயங்களை செய்ய முடியாதுதான். அந்த சமயங்களில் உங்கள் உடல்நிலை பற்றி கணவரிடம் மனம் விட்டு பேசி அவருக்கு புரிய வைக்கலாம்.

Youtube

ஆரம்ப காலங்களில் இளமை வேகத்தில் சந்தோஷமாக உங்கள் தாம்பத்யம் பயணித்தாலும் 40 வயதிற்கு மேல் இது உங்களை வேறொரு நிலைக்கு கொண்டு செல்லும். ஆகவே கூச்சம் வெட்கம் என்பதெல்லாம் கணவன் முன் வேண்டாம். அவரும் உங்கள் கூச்சங்களை இந்த மாதிரி நேரங்களில் விரும்ப மாட்டார்.

உங்களுக்கான வாழ்க்கையை நீங்கள்தான் வாழ வேண்டும். ஆகவே உங்கள் தேவைகள் மற்றும் கணவரின் தேவைகளுக்கேற்ப உங்கள் தாம்பத்யத்தை கூச்சமின்றி மேற்கொள்ளுங்கள்.

Youtube

மேலும் 40 வயதிற்கு முன்பாகவே உங்களுக்கு இதில் சுவாரசியம் இல்லாமல் போனால் நிச்சயம் ஒரு மருத்துவரை நீங்கள் அணுக வேண்டியது அவசியம். ஹார்மோன் மாற்றங்களால் உங்கள் மனம் அயர்ந்து போகலாம். இதற்கு மருத்துவ ரீதியாக தீர்வு உண்டு. ஆகவே உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகவும்.         

ஒருவருக்கொருவர் கைபிடித்து போகும் வாழ்க்கை பயணத்தில் எப்போதும் உடன் இருப்பது உங்கள் துணைதான். அவர்தான் உங்கள் நண்பன். ஆகவே அவரோடு  மனம் விட்டு பேசுங்கள்! மகிழ்ச்சியாக வாழுங்கள்!                 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

 

7:30 P

Read More From Lifestyle