Astrology

#POPxoLucky2020 : உங்கள் ராசிகளுக்கு ஏற்ப எங்களது தயாரிப்புகளை இங்கே தேர்ந்தெடுங்கள்!

Swathi Subramanian  |  Dec 17, 2019
#POPxoLucky2020 : உங்கள் ராசிகளுக்கு ஏற்ப எங்களது தயாரிப்புகளை இங்கே தேர்ந்தெடுங்கள்!

2020ம் ஆண்டு கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. உங்கள் ராசிக்கேற்ற பொருட்கள் எங்கு கிடைக்கிறது என்ற சந்தேகத்தில் இருக்கிறீர்களா? அதற்காக POPxo பயன்பாட்டிலிருந்து தினசரி ஜாதக அறிவிப்புக்காக நீங்கள் காத்திருக்கும்போது, நாங்கள் உங்களுக்காக என்ன திட்டமிட்டுள்ளோம் என்பதைப் பார்ப்பது எப்படி?

POPxo உங்கள் ராசிக்கேற்ப பொருட்களை சேகரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்!

மிகவும் ஸ்டைலாக உங்கள் ராசி தொடர்பான எல்லாவற்றிற்கும், அதாவது 12 மாய வடிவமைப்புகளாக கொடுத்துளோம். ஒவ்வொரு ரசிக்கும் ஒவ்வொரு வடிவங்கள் உள்ளது. அதனை உங்கள் மொபைல் கவர், நோட்புக், மந்திர குவளைகள் என பல்வேறு பொருட்களாக வழங்குகின்றோம். இந்த தயாரிப்புகள் உங்கள் நாளில் ஒரு சிறிய மந்திரத்தை சேர்க்கும்போது ‘நீங்கள்’ மகிழ்ச்சியடைவீர்கள். இவை அனைத்தும் ரூ.279 ஆரம்ப விலையில்!

எனவே உங்கள் விருப்ப பொருட்களை வாங்க தயாராகுங்கள். எங்கள் ராசி சேகரிப்பு இப்போது POPxo* link*ல் முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கிறது!

வழங்குகிறோம் … POPxo ராசி பொருட்கள் கலெக்க்ஷன்

இன்றுக்குப் பிறகு,உங்கள் ராசி அடையாளம் வானத்தில் ஒரு விண்மீன் தொகுப்பாக இருக்காது. இது உங்களுக்கு சொந்தமான ஒன்றாகும். உங்கள் சட்டைப் பையில் எடுத்துச் செல்லக்கூடிய ஒன்று அல்லது உங்கள் தினசரி எண்ணங்களை சேகரித்து வைக்கும் நினைவு சின்னமாக இருக்கும். எங்கள் சேகரிப்பிலிருந்து உங்களுக்கு விருப்பமான பொருட்களை தேர்ந்தெடுங்கள். மொபைல் கவர்களாக, மேஜிக் குவளைகள் மற்றும் குறிப்பேடுகளாக அல்லது இந்த மூன்றின் தொகுப்பையும் பெறுங்கள். உங்களுக்கு மட்டுமின்று,  ஜாதகத்தை விரும்பும் உங்கள் நண்பர்களுகளுக்கும் இதனை பரிசளிக்கலாம். 

அவற்றை கீழே பாருங்கள்: 

மேஷம் – ராஜதந்திரக்காரர்கள்

இந்த ராசிக்காரர்களில் சிலர் உடனடியாக செயல்படக் கூடியவர்களாகத் திகழ்வர். இவர்கள் சராசரி உயரம் உடையவர்கள். ஆனால் இதில் சற்று குறைவான உயரத்துடன் (குள்ளமாக) காணப்படுபவர்களிடம் ராஜதந்திரம் இருக்கும். இவர்கள் எதிரியை உடனடியாக தாக்க மாட்டார்கள். நிதானமாக யோசித்து செயல்படுவர். இதற்கு மேஷராசியின் சின்னமான ஆட்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆடு தாக்குதலுக்கு தயாராவதற்கு முன்பாக பின்னோக்கிச் சென்று, அதிரடியாக ஓடி வந்து தாக்கும். அதுபோல்தான் இவர்களின் இயல்பும் இருக்கும். 

ரிஷபம் – பொறுமையானவர்கள்

நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ அதனை உடனடியாக முடிக்க வேண்டும் என்று தான் இந்த ராசிக்காரர்கள் விரும்புவர். தவறு செய்ய யோசிக்கும் குணமுடைய இவர்கள், பழைய சம்பவங்களை மீண்டும் நினைவில் நிறுத்தி யோசிப்பர். இவர்களில் ஒருசிலர் தங்களது செயலுக்காக வருந்தவும் செய்வர். உதாரணமாக அந்த நேரத்தில் நாம் அவரை எதிர்த்துப் பேசியிருக்கக் கூடாது அல்லது அவரை அடித்திருக்கக் கூடாது என்று தமது செயலை நினைத்து வருந்துவர்.

மேலும் படிக்க – உங்கள் ராசிக்கேற்ற மொபைல் கேஸ் கவர்கள் என்னென்ன என்று தெரியுமா!

மிதுனம் – கடவுளை நம்புபவர்

இந்த ராசிக்காரர்களில் பெரும்பாலானவர்கள் சாத்வீகத்தன்மை உடையவர்களாக இருப்பர். எது நடந்தாலும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிடுவர். ஒரு திருடன் இவர்களின் பர்சை திருடிச் சென்றாலும், அவனை துரத்திச் சென்று, “அதில் நூறு ரூபாய்தான் இருக்கிறது. உனக்கு போதவில்லை என்றால் இந்தா இதை வைத்துக்கொள்” என்று மேலும் ஒரு நூறு ரூபாயை கொடுத்துவிட்டு வருபவர்கள் இந்த ராசிக்காரர்கள். அதேவேளையில், தங்களது உரிமைகளை இந்த ராசிக்காரர்கள் எளிதில் விட்டுத்தர மாட்டார்கள்.  

கன்னி – பாசக்காரர்கள்

கன்னி ராசிக்காரர்கள் மற்றவர்களின் பாராட்டுதல்களை காட்டிலும் பாசத்திற்கே கட்டுப்படுவார்கள். இவர்கள் புதுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் பதில் கூறும் ஆற்றல் பெற்றவர்கள். இவர்களுக்கு ஆத்ம பலத்தை விட அறிவு பலமே அதிகம். மேலும் அமைதி இவர்கள்  முகத்தில் இருக்கும். ஆக்ரோஷம் மனதில் இருக்கும். இவர்களின் புத்திசாலித்தனத்தால் புகழ் கூடும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை பேரோடும், புகழோடும் இருக்கும். 

கடக ராசி – திறமையானவர்கள்

இந்த ராசிக்காரர்களைப் பற்றி கூற வேண்டுமானால் “நண்டுக்கு இடம் கொடேல்” என்ற பழமொழியைக் கூறலாம். பத்து காசை வைத்துக் கொண்டு 10 ரூபாய் மதிப்புள்ள பொருளுக்கு விலை பேசுவர். தன்னம்பிக்கை, திறமை இவர்களிடம் அபரிமிதமாக இருக்கும். தன்னால் முடியாதது எதுவும் இல்லை என்று நிச்சயமாக நம்புபவர்களும் இவர்களே.இதில் ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் கொஞ்சம் அப்பாவியாக காணப்படுவர்.

சிம்ம ராசி – காரியவாதி

இவர்கள் யாரையுமே தொடர்ந்து நண்பர்களாக வைத்துக் கொள்ள மாட்டார்கள். காரியம் முடிந்தவுடன் நட்பில் இருந்து ஒதுங்கி விடுவர்.  பூரம் நட்சத்திரம் உடையவர்கள் நட்புக்கு மதிப்பளிப்பர். பொதுவாக சிம்ம ராசிக்காரர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்றால் நட்பு வைத்துக் கொள்ள அல்லது அதனைத் தொடர விரும்பினாலும், நம்பிக்கைக்குரிய நண்பர்கள் கிடைப்பதில்லையே என்று புலம்புவர்.

துலாம் ராசி – சமநிலை உடையவர்

இவர்கள் அனைத்து விஷயங்களிலும் சமநிலை உடையவர்களாகத் திகழ்வர். தனது தரப்பில் தவறுகள் இருந்தாலும் ஒப்புக்கொள்வர். தவறு செய்தாலும் நடுநிலை தவற மாட்டார்கள். அன்பு, பொறுமை, பக்தி, நாணயம் என அனைத்திலும் இவர்கள் கவரிமான் பரம்பரை என்று கூறலாம். வீரமும், விவேகமும் இருக்கும். எதிலும் உறுதியோடு நின்று இறுதி வரை போராடி முடிப்பார்கள். 

விருச்சிக ராசி – சிந்தனைவாதி

இவர்கள் அதிரடியாக செயல்படக் கூடியவர்கள். அனுஷம், கேட்டை, விசாகம் ஆகிய 3 நட்சத்திரங்கள் விருச்சிக ராசிக்குள் வருகின்றன.  ஆழமான சிந்தனை உடையவர்கள். ஒருவிஷயத்திற்கு உடனடியாக கருத்து தெரிவிக்க மாட்டார்கள். ஆனால் அவர்களது உள்மனம் அதுகுறித்து ஏகப்பட்ட சூட்சுமங்களை, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து கொண்டிருக்கும். 

தனுசு ராசி – வசீகரமானவர்கள்

“வில்லாளனை சொல்லால் வளைத்துவிடு” என்பதற்கு ஏற்றது போல புகழ்ந்து பேசினால் இந்த ராசிக்காரர்கள் திருப்தியடைந்து விடுவர். வசீகர பார்வையும், கவர்ச்சியான முகத்தோற்றமும் பெற்ற இவர்கள் சமூகத்தில் தனி அந்தஸ்து பெற்று விளங்குவர். இவர்கள் தொழிலுக்கு இவர்களே கணக்கு போட்டால் லாபம் கிடைக்கும். எனவே சுக போகங்களையும் அனுவிப்பார்கள். 

மகர ராசி – ராஜ தந்திரம்

“மகரத்தார் நகரத்தை ஆழ்வார்” என்று கூறுவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் நேரடியாக தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் தன்மை உடையவர்கள். அதிலும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் “வெட்டு ஒன்று துண்டு இரண்டு” என்று 100 சதவீதம் தீர்க்கமாகப் பேசுவர். திருவோணம் நட்சத்திரதாரர்கள் ராஜ தந்திரத்துடன், சூழலுக்கு ஏற்றவாறு செயல்படுவர்.

கும்ப ராசி – உணர்ச்சிவசப்பட கூடியவர்கள்

“கும்பத்தானுடன் கூடாதே” என்று சில ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதற்காக அவர்கள் தீயவர்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது. அவர்களிடம் ஆக்கும் சக்தி, அழிக்கும் சக்தி இரண்டுமே உண்டு. எனினும் உணர்ச்சிவசப்படும் தன்மை உடையவர்கள் என்பதால் அதுபோல் எச்சரிக்கப்பட்டுள்ளது. அவிட்டம், சதயம் நட்சத்திரக்காரர்கள் உடனடியாக களத்தில் இறங்கி செயல்புரிபவர்களாக காணப்படுவர்.

மேலும் படிக்க – உங்கள் கழுத்தின் வடிவங்களில் ஒளிந்திருக்கும் உளவியல் ரகசியங்கள்

மீனம் – கற்பனை திறன் மிக்கவர்

இந்த ராசிக்காரர்களுக்கு சிறந்த அறிவுக்கூர்மை இருக்கும்.  மீன ராசிக்காரர்களுக்கு பல விஷயங்களில் நடுநிலையாக இருப்பது காணப்படும்.மேலும் இவர்களுக்கு கற்பனை வளம் அதிகம் இருக்கும். பலருக்கும் மதியூகம் மிக்க யோசனையை இவர்கள் வழங்கினாலும், தனக்கென ஒரு சிக்கல் வரும் போது பிறரிடம் யோசனை கேட்பர். எனினும் இறுதியில் தமது முடிவே சிறந்ததாக இருக்கும் என்று முடிவுக்கு வருவர்.

மேலும் படிக்க – காதலின் பெயரால் நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள் என்பதை சொல்லும் 7 அறிகுறிகள்..

2019 ஒரு அருமையான ஆண்டு என்ன என்பதை நாம் சிந்திக்கையில்,  2020ம் ஆண்டும் உங்களுக்கு அதிஷ்டகரமான ஆண்டாக இருக்க வேண்டும் என நாங்கள் #POPxoLucky2020 விரும்புகிறோம். அடுத்த 20 நாட்களுக்கு, POPxoன் மகிழ்ச்சியான காலத்தை உங்கள் அன்பு மற்றும் முழு அதிர்ஷ்டத்துடன் கொண்டாட தயாராக உள்ளது.

2020க்கு தயாரா?

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Astrology