Celebrity gossip

தனியான கர்ப்பிணி பெண்-கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்தை வடிவமைக்கும் கார்த்திக் சுப்புராஜ்

Deepa Lakshmi  |  Oct 18, 2019
தனியான  கர்ப்பிணி பெண்-கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்தை வடிவமைக்கும் கார்த்திக் சுப்புராஜ்

கடந்த அக்டோபர் 17 அன்று பிறந்த நாள் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷிற்கு பிறந்த நாள் பரிசாக மூன்று திரைப்படங்கள் புக் ஆகியிருக்கின்றன மிஸ் இந்தியா படத்தின் சில புகைப்படங்கள் அவர் மீது நம்பிக்கையை நமக்கு விதைக்கின்றன.                                                                     

இதைப் போலவே தில் ராஜு மற்றும் சுதீர் சந்திரா பத்ரி குழுவினரிடம் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி அவரது பிறந்த நாள் பரிசாக காணக்கிடைத்தது. இது விளையாட்டை சார்ந்த திரைப்படம் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.                                                                             

இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

instagram

இதற்கிடையில் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் அவரது தயாரிப்பில் எடுக்கப் போகும் அடுத்த படத்திற்கான பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறார். இந்த திரைப்படம் பல மொழிகளில் தயார் ஆகிறது.                                                                                         

பெண்குயின் எனும் தலைப்பே இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. அதை போலவே இதன் கதை தனியாக வாழும் ஒரு கர்ப்பிணி பெண்ணின் கதை இந்த ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது. நீண்ட நாட்கள் காத்திருக்க வைக்காமல் வெகு விரைவில் இந்த திரைப்படம் வெளியானால் கீர்த்தி சுரேஷின் (keerthy suresh) ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள்.

 

இது தவிர கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கும் மூன்று திரைப்படங்கள் மரக்கால் அரபிக்கடலிண்டே சிம்மம் திரைப்படத்தில் மோகன்லால் மற்றும் மஞ்சு வாரியருடன் நடிக்கிறார். மைதான் இவரது பாலிவுட் புதுமுக அறிமுகம் படம். அஜய் தேவ்கன் உடன் இணைகிறார் போனி கபூர் தயாரிக்கிறார். இது தவிர மிஸ் இந்தியா திரைப்படத்தை நரேந்திரநாத் இயக்குகிறார்.                                       

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Celebrity gossip