Lifestyle

டெல்லியில் காற்று மாசு எதிரொலி : சுத்தமான ஆக்ஸிஜனுக்கு ஷோரூம்! 299 ரூபாய்க்கு விற்பனை!

Swathi Subramanian  |  Nov 15, 2019
டெல்லியில் காற்று மாசு எதிரொலி : சுத்தமான ஆக்ஸிஜனுக்கு  ஷோரூம்! 299 ரூபாய்க்கு விற்பனை!

சென்னை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய பகுதிகளில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தூய ஆக்சிஜன் விற்பனை நிலையம் டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகையில் இருந்தே காற்று மாசுபாடு(air pollution) மிகவும் அபாய அளவைத் தாண்டியது. 

மனிதர்கள் சுவாசிக்க  தகுதியற்ற அளவிற்கு காற்று மாசடைந்து உள்ளதால் கடந்த நவம்பர் 1ம் தேதி மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இதனால் கனரக வாகனங்கள் மற்றும் அதிக புகையை வெளியிடும் தொழிற்சாலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது. 

பள்ளிகளுக்கு  இரண்டு நாட்களுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது. காற்றின் தரம் சிறிது சீரடைந்து வந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து மீண்டும் காற்றின் தரம் குறைந்து விட்டதால் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

twitter

இதனால் டெல்லியில் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்று மாசால் பல்வேறு சுவாச நோய்கள் வருவதால் பலர் டெல்லியை விட்டு வேறு ஊருக்கு இடம் பெயர்ந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் கட்டண முறையில் சுத்தமான காற்றை விற்பனை செய்யும் ஆக்சிஜன் பார் டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது. 

இது மக்களிடையே ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. முன்னதாக சுத்தமான ஆக்சிஜன் (oxygen) என கேன்களில் அடைக்கப்பட்ட காற்றினை பொது வெளியில் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் சுத்தமான ஆக்சிஜனுக்கு ” Oxy pure ” என்ற ஷோரூம் திறக்கப்பட்டு உள்ளது. 

பால்கனி தோட்டம் அமைப்பது எப்படி? சில எளிய தோட்ட அமைப்பு குறிப்புகள்

தெற்கு டெல்லியில் உள்ள சகேட் பகுதியில் திறக்கப்பட்டுள்ள இந்த ஷோரூமில் 15 நிமிடத்திற்கு சுத்தமான ஆக்சிஜனை பெறுவதற்கு 299 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் சுவாசிக்கும் காற்றின் மணத்தை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

twitter

வெனிலா, செர்ரி, பாதாம், ஸ்பியர்மிண்ட், மிளகுக்கீரை,  யூகலிப்டஸ், எலுமிச்சை, ஆரஞ்சு, தோட்ட நறுமணம், இலவங்கப்பட்டை மற்றும் லாவண்டர் போன்ற நறுமணங்களிலிருந்து தேர்வு செய்யலாம். ஒவ்வொரு நறுமணத்திற்கும் விலைகள் மாறுபடும் என ஷோரும் உரிமையாளர் தகவல் அளித்துள்ளார். 

இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டிகளால் உற்பத்தி செய்யப்பட்டு, அவை சுற்றுப்புறக் காற்றை எடுத்து நைட்ரஜன் மற்றும் பிற வளிமண்டல வாயுக்களை ஒரு மூலக்கூறு வடிகட்டியுடன் பிரித்து 95% தூய்மையான ஆக்ஸிஜனை (oxygen) உற்பத்தி செய்கின்றனர்.

மழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தண்ணீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்யும் போது அதனை அதிசயமாக பார்த்தோம். ஆனால் இன்றைய காலத்தில் வாட்டர் கேன்கள் தொழிலே முதன்மையாக மாறிவிட்டன. நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் குடி தண்ணீர் கேன்களில் விற்பனை செய்யப்படும் காலத்தில் வாழ்கின்றோம். 

twitter

மழைக்காலத்தில் நீரை சேமிக்கலாம். கடலில் கலப்பதை வேடிக்கை பார்த்ததால் தற்போது நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீரை கூட காசுக்கு வாங்கி குடித்து கொண்டிருக்கிறோம். அதேபோல் தற்போது மரங்களை வெட்டி, இயற்கை வளங்களை அழித்து ஸ்மார்ட் சிட்டி என்று வாழ்ந்து வருகின்றோம். 

அதன் விளைவாக தற்போது சுத்தமான ஆக்சிஜன் (oxygen) என சுவாசிக்கும் காற்றினை பணத்திற்கு விற்பனை செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். இன்று கேட்பதற்கு சிரிப்பாக இருந்தாலும் வருங்காலத்தில் மாசு அடைந்த பகுதிகளில் சுத்தமான காற்றிற்கு வழி இல்லாமல் இதுபோல் விற்பனை செய்யப்படும் காற்றினை சுவாசிக்கவே மாற்றப்படுவோம். இதுவே நமது சந்ததியினருக்கு நாம்  செய்து வைத்துள்ள மாற்றம் என்பதே நிதர்சனம்!

 

மேலும் படிக்க – மழையின்றி வறளும் பூமி, மனிதர்களால் மாசடையும் காற்று.. இதில் நமது பொறுப்புகள் என்னென்ன?

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                                                       

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Lifestyle