Celebrity Weddings

நீதா அம்பானி மருமகளுக்கு 300 கோடி மதிப்புள்ள நெக்லஸ் பரிசு? – கூடுதல் தகவல்கள் உள்ளே!

Deepa Lakshmi  |  Mar 26, 2019
நீதா அம்பானி மருமகளுக்கு 300 கோடி மதிப்புள்ள நெக்லஸ் பரிசு? – கூடுதல் தகவல்கள் உள்ளே!

எப்போதும் சினிமா பிரபலங்களை விடவும் மக்களால் அதிகம் ஈர்க்கப்படுபவர் நீதா அம்பானி. அவரது அன்பு மற்றும் தாராள மனது பற்றி அவருக்கு நெருக்கமானவர்கள் அறிவார்கள். ஒரு பக்கம் முகேஷ் அம்பானி தனது பிஸினஸால் இந்தியாவின் முதல் பணக்காரராக பேசப்பட்டாலும் அவருக்கு இணையாக பேசப்படுபவர் நீதா அம்பானி.

காரணம் ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் அந்த பெண் நீதா (nita) தான். தனது அமைதி மற்றும் புன்னகையால் எல்லோரையும் கவர்பவர் மேலும் குடும்பத்தை ஒன்றிணைத்து வழி நடத்தி செல்வதில் வல்லவரும் கூட.

இவ்வளவு பணம் கொட்டிக் கிடந்தும் பார்லர் பார்களில் குடியிருக்காமல் மகன் மற்றும் மகளின் வளர்ப்பை கவனித்து அவர்கள் விரும்பியவரை மணமுடித்து கொழுந்தனார் அனில் அம்பானியின் கடனை அடைத்து என பல்வேறு விஷயங்களில் நீதாவின் தாக்கம் இருப்பதை நாம்மால் உணர முடிகிறது.

அப்படிப்பட்ட சிறப்பான பெண்மணியான நீதா அம்பானி தற்போது தனது மருமகளுக்கு கொடுத்த பரிசு பற்றித்தான் இந்தியா முழுக்க பேச்சாக இருக்கிறது.

மகன் ஆகாஷ் அம்பானியோடு நீண்ட காலமாக காதலில் இருந்த ஷ்லோஹா மேதா கடந்த மார்ச் 9ஆம் தேதி காதலனை கைப்பிடித்தார். இந்தியாவின் அத்தனை பத்திரிகைகளிலும் மீடியாவில் தலைப்பு செய்தியாக இந்த திருமணம் பேசப்பட்டது.

முதலில் மகள் இஷா அம்பானி திருமணம் ஆனந் பிரமல் உடன் நடைபெற்றது. அதன்பின்னர் மகன் ஆகாஷின் திருமணம் நடைபெற்றது. ஸ்விட்ஸ்ர்லாந்தில் இதற்கான பேச்சுலர் பார்ட்டி நடந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

அதன்பின்னர் தம்பி அனில் அம்பானியை 450கோடி கடனில் இருந்து அண்ணன் முகேஷ் அம்பானி காப்பாற்றினார். அதுவும் நீதாவின் முயற்சிதான் என்று கூறப்படுகிறது.

ஆகாஷ்-ஷ்லோஹா திருமணத்திற்கு பின்னர் மருமகளுக்கு ஒரு பரிசு தர விரும்பியிருக்கிறார் மாமியார் நீதா அம்பானி. ஆரம்பத்தில் தங்களது பரம்பரை நகையை வழக்கமாக மூத்த மருமகளுக்கு கொடுப்பார்கள். நீதாவிடம் கொடுக்கப்பட்ட அந்த நகையை ஷ்லோஹாவிற்கு கொடுக்க விரும்பியிருக்கிறார் நீதா.

ஆனாலும் அதனால் மனம் திருப்தியடையாத நீதா தன் மகனை நேசித்து திருமணம் செய்த ஷ்லோஹாவிற்கு ஒரு விலையுர்ந்த பரிசை கொடுக்க திட்டமிட்டார்.

ஆகவே மருமகள் ஷ்லோஹாவிற்கு திருமண பரிசாக 300 கோடி ரூபாய் மதிப்புள்ள உலகின் விலை உயர்ந்த வைர மாலையை பரிசளித்திருக்கிறார் மாமியார் நீதா அம்பானி என்று கூறப்படுகிறது.

இது மட்டும் அல்லாமல் இஷா அம்பானி தனது பிரம்மாண்டமான இயற்கையோடு இயைந்த அரண்மனையை அண்ணி ஷ்லோகாவிற்கு பரிசளித்திருக்கிறார் என்றும் பேசப்படுகிறது.

அம்பானி குடும்பத்தினர் எப்போதும் தாராள மனதிற்கு பெயர் போனவர்கள் அதனால்தானோ என்னவோ மருமகளுக்கு 300கோடி ரூபாய் வைர நெக்லஸை நீதா அம்பானியால் பரிசளிக்க முடிந்திருக்கிறது என்றொரு பேச்சும் கிளம்பியுள்ளது.

அப்படி ஒருவேளை நடந்திருந்தால் அனேகமாக தற்போது உலகின் ஆக சிறந்த மாமியார் நிச்சயம் நீதா அம்பானி மற்றும் சிறந்த நாத்தனார் இஷா அம்பானியாகயாக மட்டும்தான் இருப்பார்கள் என்று தோன்றுகிறது !

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.                                                              

Read More From Celebrity Weddings