Food & Nightlife
ஒரு வருடத்திற்கு கெட்டுப் போகாமல் இருக்கும் ஆப்பிள்… அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது!
குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் ஓராண்டு வரை கெட்டுப்போகாத ஆப்பிள் பழங்கள் இன்று முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளன. ஆப்பிளில் (apple) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது.
அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை ஆப்பிள்கள் கொண்டிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது. இந்நிலையில் ஒரு வருடத்திற்கு கெட்டுப்போகாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய ரக ஆப்பிளுக்கு காஸ்மிக் கிரிஸ்ப் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆப்பிளை சரியான முறையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் அதை பறித்த நாள் முதல் சுமார் ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் என ஆராயாச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய ரக ஆப்பிள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஆப்பிளானது ஹனிகிரிஸ்ப் + எண்டர்ப்ரைஸ் ஆகியவற்றின் கலப்பினமாகும். 1997ம் ஆண்டு இந்த ஆப்பிளை முதன் முதலில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க – சீரகத்தை கொதிக்க வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்!
இந்த புதிய வகை ஆப்பிள்களை (apple) தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த வாஷிங்டன் ஸ்டேட் (Washington State) பல்கலைக்கழகம் இதற்கான சுமார் 10 மில்லியன் டாலர் மொத்தமாக செலவு செய்துள்ளது.
ஹனிகிரிஸ்ப் ரக ஆப்பிளானது நல்ல இனிப்பு சுவை மிக்கது. அதே போல எண்டர்ப்ரைஸ் ரக ஆப்பிளும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கது. இவற்றின் கலவையாகவே தற்போது இந்த புதிய ரக (காஸ்மிக் கிரிஸ்ப்) ஆப்பிள் உள்ளது.
இந்த திடமான, மிருதுவான, சாறு நிறைந்த இந்த ஆப்பிளை கண்டுபிடித்து வணிகரீதியாக வெளியிடுவதற்கு இந்திய மதிப்பில் சுமார் 72 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தரம், சுவை உள்ளிட்ட பல சோதனைகளுக்கு பிறகு வாடிக்கையாளர்களை கவரும் வகையில், இந்த புதிய காஸ்மிக் கிரிஸ்ப் ஆப்பிள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ரக காஸ்மிக் கிரிஸ்ப் ஆப்பிளின் சிவப்பு நிற தோலின் மேல் படரும் வெள்ளை நிற புள்ளிகள், இரவுநேர வானத்தை போல பிரதிபலிப்பதால், அந்த ஆப்பிளிலுக்கு காஸ்மிக் கிரிஸ்ப் என பெயரிடப்பட்டுள்ளது சுமார் 20 வருடங்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டு இந்த புதிய வகை ஆப்பிள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் மாகாண விவசாயிகள் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த ஆப்பிளை விளைவிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள விவசாயிகள் 12 காஸ்மிக் கிரிஸ்ப் ஆப்பிள் மரங்களை வளர்க்க 40 மில்லியன் டாலர் (சுமார் 720 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளனர்.
மேலும் படிக்க – டியூசன் எடுத்து குடும்பத்தை காப்பாற்றும் அரசு பள்ளி மாணவி நாசாவுக்கு செல்ல தேர்வு!
இதுவரை சுமார் 12 மில்லியன் காஸ்மிக் கிரிஸ்ப் ஆப்பிள் (apple) மரங்கள் நடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மற்ற பகுதிகளில் அவ்வகை ஆப்பிள்களை வளர்க்கும் உரிமம் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிட்டதக்கது.
அமெரிக்காவில் வாழைப்பழங்களுக்கு அடுத்து அதிகமாக விற்பனையாகும் பழம் ஆப்பிள் என்பதால் இந்த ஆப்பிள் மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து பேசிய காஸ்மிக் கிரிஸ்ப் ஆப்பிளை கண்டுபிடித்த வாஷிங்டன் பல்கலைக்கழக குழு உறுப்பினர் கேட் எவன்ஸ்,இந்த ஆப்பிள் மிக மிருதுவாகவும், திடமாகவும் இருக்கும். இனிப்பும் புளிப்பும் சேர்ந்து சுவையைக் கொண்டிருக்கும்.
நீர்ச்சத்தும் இதில் அதிகமாகக் காணப்படும் என விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக பறித்த நாளிலிருந்து பிரிட்ஜில் பத்திரமாக வைத்திருந்தால் 10 முதல் 12 மாதங்கள் வைத்திருந்து சாப்பிடலாம்.
தரம் மற்றும் சுவையிலும் கெடாமல் நன்றாக இருக்கும் எனவும் கேட் தெரிவிக்கிறார். சுமார் 20 வருடங்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டு இந்த புதிய வகை ஆப்பிள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் காஸ்மிக் கிரிஸ்ப் ஆப்பிள் ஒரு கிலோ சுமார் 4 டாலருக்கு விற்கப்படுகிறது.
மேலும் படிக்க – பனிமழை பொழியும் மார்கழி மாதத்தின் சிறப்பம்சங்களை அறிவோம் வாருங்கள்!
#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Food & Nightlife
உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வரகரிசி காய்கறி தோசை… வீட்டிலேயே செய்து கொடுங்கள்!
Swathi Subramanian
உணவுகளில் ருசிக்காக சேர்க்கப்படும் வெங்காயத்தாள் கீரையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்!
Swathi Subramanian
உடலுக்கு தேவையான சத்துக்கள் மற்றும் சருமத்துக்குப் பொலிவையும் தரும் கிர்ணி பழம்!
Swathi Subramanian