Celebrity Life

அரசியலுக்கு வருகிறார் நயன்தாரா! தீவிர ஏற்பாடுகள் ஆரம்பம்…

Mohana Priya  |  May 8, 2019
அரசியலுக்கு வருகிறார் நயன்தாரா! தீவிர ஏற்பாடுகள் ஆரம்பம்…

மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காட் தன்னுடைய மனசினக்கர என்ற மலையாளப் படத்தில் நடிகையாக நயன்தாராவை(nayanthara) அறிமுகப்படுத்தினார். இந்த படத்தில் நடிகர் ஜெயராம், ஷீலா ஆகியோர் நடித்து உள்ளனர். 2003ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் இந்தப் படம் ரிலீஸானது.

தொடர்ந்து மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நயன்தாரா(nayanthara), ஹரி இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தார். தொடர்ந்து சந்திரமுகி, கஜினி உள்பட பல வெற்றி படங்களில் நடித்து கோலிவுட்டின் முதன்மை நாயகியாக மாறினார்.

தமிழ்த் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகி என்ற பெயரும் நயன்தாராவுக்கு(nayanthara) கிடைத்தது. இடையில் பிரபுதேவா மீது கொண்ட காதலால் தனது திரையுலக வாழ்க்கையை விட்டு விலகுவதாக அறிவித்த நயன்தாரா(nayanthara), அதன்பின் அந்த காதல் முறிந்துபோன காரணத்தில் மீண்டும் திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அப்போதும் ரசிகர்கள் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தனர்.

டாப் ஹீரோக்களுக்கு இணையாக நயன்தாராவின்(nayanthara) புகழும் உச்சத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான அறம் படம் அவருக்கு இன்னும் கூடுதல் ரசிகர்களை கூட்டியது. சமீபத்தில் வெளியான வேலைக்காரன் படமும் நயனுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

நயன்தாராவின்(nayanthara) முதல் படம் ரிலீஸாகி 14 ஆண்டுகள் நிறைவுபெற்றதை அவரது ரசிகர்கள் வெகு விமர்சியாக கொண்டாடினர் #14YearsOfNayanism என்ற ஹேஷ்டேக்கையும் அவர்கள் டிரெண்டாக்கினார்கள். அதுமட்டுமில்லாமல் நயன்தாராவின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனும் நயன்தாராவுக்கு(nayanthara) தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து நயன்தாரா(nayanthara)கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். அதன் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு தனது காதலை ரசிகர்களுக்கு உறுதி படுத்தினார். திருமணத்தை பற்றி அனேக கிசு கிசுக்கள் வந்த போதிலும் நீண்ட மௌம் காத்த நயன்தாரா(nayanthara) தமிழ் புத்தாண்டை காதலர் விக்னேஷ் சிவன் வீட்டில் வருங்கால மாமியாருடன் கொண்டாடி மகிழ்ச்சி யடைந்தார். இதனை தொடர்ந்து திருமண செய்தி வரைவில் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தற்போது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என கூறும் அளவுக்கு முன்னணி ஹீரோயினாக உள்ளவர் இவர் மட்டும் தான். ஒரு படத்திற்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகை இவர் மட்டும் தான்.

தற்போது விஜய், அஜித் படங்களில் நடித்து வரும் இவர் விரைவில் அரசியலில் குதிக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம். சமீபத்தில் ராதாரவி சர்ச்சை பேச்சுக்கு தமிழகம் முழுவதும் தனக்கு ஆதரவாக வந்த ஆதரவு குரல்களை பார்த்து அரசியல் ஆசை அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.

அதற்காக தன் ஆஸ்தான ஜோதிடரை சந்தித்து தன் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என பேசியுள்ளார் அவர்.

`இப்போதைக்கு அவசரப்பட வேண்டாம். சரியான நேரம் பார்த்து கணித்துச் சொல்கிறேன். அப்போது தீவிர அரசியலில் இறங்கலாம்’ என அவர் கூறிவிட்டாராம். அதனால் தற்போது அவரின் வார்த்தைக்காக காத்திருக்கிறாராம் நயன்தாரா(nayanthara).

அடுத்த புரட்சி தலைவியாக வருவாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வெயிலால் முகத்தில் ஏற்படும் கருமையை காணாமல் ஆக்கும் வீட்டு வைத்தியங்கள்!

MET GALA 2019 – பேஷன் ஐகான் என மீண்டும் நிரூபித்த ப்ரியங்கா சோப்ரா!

கண்களை சுற்றி கருவளையமா? கவலை வேண்டாம்… வீட்டிலேயே இதை செய்யலாம்!

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Celebrity Life