Lifestyle

நயன்தாரா விவகாரத்தில் ‘விஷாலை’ விளாசிய வரலட்சுமி சரத்குமார்!

Manjula Sadaiyan  |  Mar 25, 2019
நயன்தாரா விவகாரத்தில் ‘விஷாலை’ விளாசிய வரலட்சுமி சரத்குமார்!

கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா(Nayanthara) குறித்து, மூத்த நடிகர் ராதாரவி தெரிவித்த கருத்துக்கள் சினிமா உலகில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நயன்தாரா குறித்து ராதாரவி தெரிவித்த இந்த கருத்துக்கு நடிகர்-நடிகைகள், ரசிகர்கள், நடிகர் சங்கம், தயாரிப்பு நிறுவனம் என பல்வேறு தரப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

உச்சகட்டமாக நடிகை நயன்தாரா(Nayanthara) இதுதொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டு தனது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தி உள்ளார். மேலும் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குநர் விக்னேஷ் சிவன் கேட்டிருந்தார். அவரின் கோரிக்கைக்கு செவிசாய்த்த திமுக கட்சி, ராதாரவி மீது தற்காலிக நடவடிக்கை எடுத்துள்ளது.

தொழிலில் போட்டிகள் இருந்தாலும் சக நடிகை என்னும் பட்சத்தில் அனைவரும் நயன்தாராவுக்கு(Nayanthara) பாரபட்சம் பார்க்காமல் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருசில நடிகைகளின் கருத்துக்களை இங்கே பார்க்கலாம்.

வரலட்சுமி சரத்குமார்

இதுகுறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மீ டு குறித்த சர்ச்சை வரும்போது, துறையில் இருக்கும் பெண்கள் என்னைப் போல, சின்மயியைப் போல எண்ணற்ற பெண்களுக்கு ஆதரவாக நின்றிருந்தால் விஷயங்கள் ஒருவேளை மாறியிருக்கலாம். அமைதி நமக்கு எந்தத் தீர்வையும் தராது. நேரம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு பெண்ணும் துணிந்து நிற்க வேண்டும்.

திரைப்பட சங்கங்கள் என்று சொல்லிக்கொள்பவை எல்லாமே சில ஆணாதிக்கவாதிகளால் நடத்தப்படுபவை. அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். பெண்களை ஆதரிப்பது போல நடிப்பார்கள். ஆனால் நிஜத்தில் இவர்கள் ஏதோ ஒரு வகையில், திரையிலோ, வாழ்க்கையிலோ பெண்கள் இழிவுபடுத்தப்படும் சூழ்நிலைக்கு பங்காற்றியிருப்பார்கள்.

கவர்ச்சியான உடைகள் அணிவதன் மூல எங்களை நாங்களே இழிவுபடுத்திக் கொள்கிறோம் என்று நினைக்கும் எல்லா முட்டாள்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன், அது ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். ஒரு பெண்ணின் குணத்தை அவளது உடையை வைத்து நீங்கள் முடிவு செய்யக் கூடாது. முதிர்ச்சியாக யோசியுங்கள். ஒரு பெண் என்ன அணிந்தாலும், என்ன செய்தாலும் அவளை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்,” என நீண்ட விளக்கம் அளித்து தனது கண்டனத்தினை தெரிவித்திருக்கிறார்.

விஷால்

இந்த பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் மிகவும் தாமதமாக கண்டனம் தெரிவித்தார். இதனை மனதில் வைத்துத்தான் வரலட்சுமி ஆணாதிக்க சங்கங்கள் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக விஷால்-அனிஷா நிச்சயதார்த்த விழாவிலும் வரலட்சுமி கலந்து கொள்ளவில்லை. இருவரும் காதலிக்கிறார்கள் என்று முன்னர் அரசல்புரசலாக செய்திகள் அடிபட்டன. அதனை நிரூபிப்பது போல இருவரும் ஒரே மேடைகளில் ஒன்றாக அமர்ந்து பேட்டி அளித்தனர். ஒன்றாக படங்களிலும் நடித்திருந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், விஷால் தனது திருமணம் குறித்து அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா(Nayanthara) அறிக்கை

இதுகுறித்து நயன்தாரா(Nayanthara) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நான் அறிக்கை கொடுப்பது அரிது. ஏனென்றால் எப்போதும் நான் பேசுவதை விட என் பணி பேசட்டும் என்றே இருக்கிறேன். ஆனால் சில நேரங்கள் சில நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. இன்று நான் என் நிலையை தெளிவுபடுத்தவும், ஆண்களின் பாலின வேறுபாடு மற்றும் உணர்ச்சியற்ற செயல்களால் பாதிக்கப்பட்டும் பெண்களுக்காகப் பேசவும் ஒரு விரிவான அறிக்கையை தரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

முதலில், ராதராவியின் பெண் வெறுப்புப் பேச்சைக் கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் கூறுவது எனது கடமை. உங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள் சார்.

எனக்கு அற்புதமான வாய்ப்புகள் வருமளவும் கடவுள் என்னிடம் கருணை காட்டியுள்ளார். தமிழகத்தின் அன்பார்ந்த சினிமா ரசிகர்கள் எனது நல்ல நடிப்புக்காக வெகுமதி அளித்துள்ளார்கள். எனக்கெதிரான எதிர்மறையான கருத்துகளையும், அவமதிப்புகளையும் தாண்டி, என் ரசிகர்களுக்கு அதிகபட்ச பொழுதுபோக்கு தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், சீதா, பேய், பெண் தெய்வம், தோழி, மனைவி, காதலி என பன்முகத்தன்மை கொண்ட கதாபாத்திரங்களை நான் தொடர்ந்து ஏற்று நடிப்பேன்.

கடைசியாக, நடிகர் சங்கத்துக்கு எனது பணிவான கேள்வி – உச்ச நீதிமன்றம் சொன்னதைப் போல ஒரு புகார் குழுவை அமைப்பீர்களா? விசாகா குழு வழிகாட்டுதல்களின் படி துறைக்குள் விசாரணையைத் தொடங்குவீர்களா?இந்த சிறிய எதிர்மறையான காலகட்டத்தில் என்னுடன் மீண்டும் துணை நின்ற, ஆதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மீண்டும் நன்றி கூறிக்கொள்கிறேன். இப்போதும், எப்போதும் போல கடவுளின் ஆசியுடனும், உங்கள் நிபந்தனையற்ற அன்புடனும் பணிக்குத் திரும்புகிறேன்,” என தெரிவித்து இருக்கிறார்.

இதற்கு ராதாரவி விளக்கம் அளித்தாலும், அவர் தொடர்ந்து இதுபோன்று கீழ்த்தரமாக பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என முன்னணி நடிகர்-நடிகைகளே கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,தமிழ்,தெலுங்கு,மராத்தி மற்றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப், ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Lifestyle