Lifestyle

தெய்வ தரிசனம் : தமிழகத்தின் சிறப்பு மிக்க நவகிரக கோயில்களை வலம் வருவோம்!

Nithya Lakshmi  |  Sep 6, 2019
தெய்வ தரிசனம் : தமிழகத்தின் சிறப்பு மிக்க நவகிரக கோயில்களை வலம் வருவோம்!

புவியில், மனிதனின் செயல்பாடுகள் அனைத்திற்கும் விண்வெளியில் இருக்கும் கோள்களும் அதன் இட மாற்றங்களே காரணம் என்று ஜோதிடம் காலம் காலமாக கூறுகிறது! பெரியோர்கள், ஜாதகத்தில் ஏதேனும் கோளாறு இருந்தால் நவகிரக தளங்களுக்கு சென்றுவர கூறுவார்கள். இத்தகைய நவக்கிரகங்கள் என்றால் உண்மையில் ஒன்பது கோள்களை குறிக்கிறது. நவகிரகங்களின் வழிபாடுகள் புத்தர் காலத்தில் இருந்து வழிபட்டு வரும் மிக பண்டைய காலத்து வழிபாடாக கருதப்படுகிறது.

இவை அனைத்திற்கும் மேல், உங்கள் கிரக கோள்களில் இருந்து நேர்மறை ஆற்றலை பெற, மற்றும் ஆன்மீகத்தில் ஈடுபட்டு மன நிம்மதியை அடைய, தமிழகத்தை (tamilnadu) சேர்ந்த சில நவகிரக ஆலயங்களை (navagraha temples) இங்கு நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.

1. அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில்

பாளையங்கோட்டை எனும் ஊரில் அமைதியான தோற்றத்தில் அமைந்திருக்கும் இந்த கோவிலின் மூலவர் பகவதி அம்மன்.  இங்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி, பக்தர்களால் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. 

முகவரி : அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு

கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 6 மணி – 9 மணி , மாலை 5 முதல் 8 மணிவரை 

2. அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்

தமிழ்நாட்டில் வரலாற்று மிக்க  கோவில்களை கொண்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவிலின் மூலவர் ராமநாதர் மற்றும் தாயார் பர்வதவர்த்தினி ஆவார்கள். சோழர்களால் கட்டப்பட்ட  இந்த கோவிலில் பிரதோஷம், சிவராத்திரி மற்றும் பவுர்ணமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

முகவரி : அருள்மிகு ராமநாதர் திருக்கோயில் திருநறையூர், தஞ்சாவூர், தமிழ்நாடு.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 -1  மணி வரை, மாலை 4 -9 மணி வரை.

Pinterest

3. அருள்மிகு சனீஸ்வரர் திருக்கோயில்

21 அடி உயரத்தில்  பிரமாண்டமாக காட்சி அளிக்கும் சனீஸ்வர பகவானின்  முன் அமர்ந்து அமைதியாக பிரார்த்தனை செய்யலாம். இங்கிருக்கும்  அனைத்து சிலைகளின் அழகிய வெளிப்பாடுகளையும் நீங்கள்  பார்வையிடலாம். விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த கோவிலில்  சனிப்பெயர்ச்சி மிக சிறப்பாக நடைபெறும்.

முகவரி : அருள்மிகு சனீஸ்வரர் கோவில் கல்பட்டு, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 – 12 மணி, வரை மாலை 4 மணி வரை.

போன: +91 94451 14881

4. அருள்மிகு தட்சிணாமூர்த்தி சுவாமி திருக்கோயில்

சித்ரா பவுர்ணமி மற்றும் குரு பெயர்ச்சியை சிறப்பாக கொண்டாடப்படும் இந்த கோவிலில் முதல்வர் தட்சிணாமூர்த்தி அவர். திருவொற்றியூர் ஊரில் அமைந்துள்ள இந்த கோவிலில் பக்தர்கள் நெய்தீபம், கொண்டகடலை, மாலை  ஆகியவை அணிவித்து தனது வழிபாடுகளை செய்து வருகிறார்கள்.

முகவரி:  அருள்மிகு தட்சிணாமூர்த்தி சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், திருவள்ளூர் மாவட்டம், சென்னை 600 019.

கோவில் திறந்திருக்கும் நேரம்:  காலை 6 -11 மணி வரை, மாலை 4 – 8 மணி வரை.

போன் : +91 98407 97878

Pinterest

5. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த கோவிலின் மூலவர் கைலாசநாதர் மற்றும் தாயார் பெரியநாயகி அவர்கள்.  சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில் மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை மற்றும் திருக்கார்த்திகை மிக சிறப்பாக வழிபட்டு வருகிறது. அன்னதானத்திற்கு பெயர்பெற்ற இந்த கோவிலுக்கு சென்று ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள் .

முகவரி : அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் திங்களூர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு – 613 204

கோயில் திறந்திருக்கும் நேரம்: 6 -11 மணி வரை, மாலை 4 – 8மணி வரை

போன் : +91 4362 262 499

6. அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்

காசி விஸ்வநாதரை தரிசிக்க மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்லுங்கள். மூலவர் காசி விஸ்வநாதர் மற்றும் தாயார் விசாலாட்சி அம்மன் ஆவார். மகா சிவராத்திரி இங்கு மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பதஞ்சலி முனிவர் இங்கு தவம் செய்ததாக கூறப்படும் இந்த கோவிலுக்கு சென்று மனநிம்மதியை அடையுங்கள். 

முகவரி : அருள்மிகு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயில், பழங்காநத்தம், மதுரை – 625 003.

கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 5:30 – 8 30 மணி வரை. மாலை 6  – 8:30 மணி வரை.

போன் : +91 452 2371909

Pinterest

7. அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில்

சிவராத்திரி, நவராத்திரி, கந்தசஷ்டி, கார்த்திகை சோமவாரம் போன்ற அனைத்து விசேஷ நாட்களிலும் சிறப்பான வழிபாடுகள் இங்கு நடைபெறும். மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவிலின் மூலவர் ரங்கநாதர் மற்றும் தாயார் பெரியநாயகி அவர்கள். செவ்வாய் தோஷத்திற்கு வழிபடவேண்டிய தலம் என்று கூறப்படுகிறது.வாழ்க்கையில் நிம்மதி மற்றும் தெளிவை பெற இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்.

முகவரி:  அருள்மிகு பிரளயநாதர் சுவாமி திருக்கோயில் சோழவந்தான் மதுரை -624 215.

கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 -11 மணி வரை, மாலை 4 :30  – 8 மணி வரை.

போன்: +91 4542 258987

8. அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்

வரலாற்று மிக்க  தெய்வீக ஸ்தலங்களின் சிறப்பம்சங்கள் கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில் மூலவர் நாகேஸ்வரர் மற்றும் உற்சவர் சோமாஸ்கந்த அவர். தாயார் காமாட்சியை கொண்ட இந்த கோவிலில் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம், புரட்டாசியில் நிறைமணி காட்சி மற்றும் தை மாதத்தில் பூசம், ஆடிப்பூரம் போன்ற அனைத்து திருவிழாக்களையும் பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.

முகவரி:  அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் குன்றத்தூர், காஞ்சிபுரம் – 600 069

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6:30 – 12 மணி வரை, மாலை 5 – 9 மணி வரை

போன்: +91 44 24780436

Pinterest

9. அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில்

இக்கோயிலின் உற்சவர் வரதராஜ பெருமாள் மற்றும் தாயார் லட்சுமி. திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதேசி மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது மற்றும் கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமை அன்று இங்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகிறது. பக்தர்கள் இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டு தனது தோஷத்தை நிவர்த்தி செய்வதாக கூறப்படுகிறது.

 முகவரி: அருள்மிகு லக்ஷ்மி நாராயணன் திருக்கோயில் இடையாற்றுமங்கலம், பால்குடி, திருச்சி மாவட்டம், தமிழ்நாடு.

கோயில் திறந்திருக்கும் நேரம்:  காலை 6 – 11 மணி வரை, மாலை 5 -11 மணி வரை

10. அருள்மிகு கல்யாண சுந்தர சுவாமி திருக்கோயில்

சரவணபவா என்று முருகனை வழிபட, இக்கோயிலிலுள்ள ஆறு படிகளை அறுப்படையாக நினைத்து  ஏறி, மூலவரான கல்யாணசுந்தரர் சுவாமியை தரிசியுங்கள். வள்ளி-தெய்வானை தாயார் சன்னதியும் இங்கு உள்ளது .  பங்குனி உத்திரம் மற்றும் கார்த்திகை மாதங்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் இங்கு முருகனுக்கு பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்து தனது பிரார்த்தனைகளை செலுத்துகிறார்கள்.

முகவரி:  அருள்மிகு கல்யாணசுந்தர சுவாமி திருக்கோயில் பாலையா கார்டன், மடிப்பாக்கம், சென்னை.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6:30 – 10 மணி வரை, மாலை 5 – 8  மணி வரை.

Pinterest

11. அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில்

இக்கோவிலில் தக்ஷிணாமூர்த்தி கிழக்கு நோக்கி இருப்பதாகவும் இது இந்தியாவில் வேறு  எந்த தட்சிணாமூர்த்தி தலத்திலும் இல்லை என்றும் கருதப்படுகிறது. மூலவரான சிவன் மற்றும் தாயார் நவையடி  காளி ஆகியோரை தரிசித்து, கோவிலின் பின்புறம் இருக்கும் ஆலமரத்தையும் சேர்த்து சுற்றிவந்து பக்தர்கள் தனது பிராத்தனைகளை செலுத்துகிறார்கள் . விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, சிவராத்திரி, பிரதோஷம் போன்ற அனைத்து முக்கிய நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. 

முகவரி:  அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில், பட்டமங்கலம், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6.30 – 12:30 மணி வரை , மாலை 3:30  – 8 மணி வரை.

போன்: +91 99621 21462

12. அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்

மூலவரான சேஷபுரீஸ்வரர் ஈஸ்வரர் மற்றும் தாயார் பிறராம்பிகை மற்றும் வண்டுசேர் குழலி எனக்கூறப்படும் தெய்வங்களை இங்கு பிரார்த்திக்கலாம். திருப்பாம்புரத்தில் உள்ள இந்த கோவிலில் வரலாற்று மிக்க கதைகள் அமைந்துள்ளது. அப்பர்,  சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகியோர் இக்கோவிலில் பாடியுள்ளார்கள். பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி மற்றும் சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு கொண்டாடப்படுகிறது. சிவன் இங்கு சுயம்பு லிங்கமாக தோன்றி அருள்பாலிக்கிறார்.

முகவரி: அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பாம்புரம், திருவாரூர்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:  காலை 7 – 12: 30 மணி வரை,  மாலை 4 -8 மணி வரை.

போன்: +9194430 47302 +91 435 2469555

 

ஆன்மீகத் தேடல் கொண்டவர்களின் வாழ்நாள் கனவாக காசி இருப்பது ஏன் ? அறிவோம் வாரணாசி View

பட ஆதாரம் – Instagram, Pinterest

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

 

Read More From Lifestyle