Food & Nightlife

கோளா உருண்டை சாப்பிட ஹோட்டல் எதுக்கு? மணக்கும் மட்டன் கோளா உருண்டையை வீட்டிலேயே செய்யலாம் வாங்க !

Deepa Lakshmi  |  May 24, 2019
கோளா உருண்டை சாப்பிட ஹோட்டல் எதுக்கு? மணக்கும் மட்டன் கோளா உருண்டையை வீட்டிலேயே செய்யலாம் வாங்க !

மட்டன் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அசைவம் ஆகும். கோளா என்றால் உருண்டை என்று அர்த்தம். மட்டனை உருண்டையாக பிடித்து அதனை பொரித்து சாப்பிட்டால் அசைவம் வேண்டாம் என்பவர்களும் வேண்டும் என்பார்கள்.

நினைக்கும் போதே வாயில் உமிழ்நீர் சுரக்கும் மட்டன் கோளா உருண்டையை எப்படி சுவையாக அதே சமயம் சுலபமாக செய்யலாம் என்பதை இனி பார்க்கலாம். Mutton meat balls receipe.

மட்டன் கொத்துக்கறி அல்லது கீமா கால் கிலோ
பெரிய வெங்காயம் 1
துருவிய தேங்காய் 3/4 கப்
முட்டை 1
இஞ்சி பூண்டு விழுது 2 கப்
பட்டை கிராம்பு சோம்பு சிறிதளவு
வரமிளகாய் 12
பொட்டுக்கடலை இரண்டு ஸ்பூன்
கசகசா 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் சிறிதளவு
உப்பு தேவைக்கு
எண்ணெய் 1/4 லி

முதலில் மிக்சியில் தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை மற்றும் கசகசா ஆகிய பொருள்களை நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். அதிக நீர் சேர்க்க வேண்டாம்.

பின்னர் குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு ஆகியவற்றையும் நறுக்கிய வெங்காயம் வரமிளகாய் மற்றும் மஞ்சள் தூள் உப்பை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கருவேப்பிலை சேர்த்தால் மனமும் ருசியும் கிடைக்கும்.

அதனோடு மிக்சியில் உள்ள தேங்காய் கலவையுடன் இணைத்து மிக்சியில் நன்றாக அரைக்கவும். பின்னர் அகலமான ஒரு பேசின் போன்ற பாத்திரத்தில் அரைத்த கலவையை கொட்டி அதனுடன் ஒரு முட்டையை அடித்து கலக்கி ஊற்றவும் அதன் பின்னர் நன்கு பிசறி இதனோடு வாங்கி கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் கீமா அல்லது கொத்துக்கறியை சேர்த்து நன்றாக பிசறவும்.

10 நிமிடம் கழித்து ஒவ்வொரு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். அதன் பின்னர் வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் மீடியம் நெருப்பில் வைத்து உருண்டைகளை போட்டு எடுக்கவும்.

நன்கு பொறிந்ததும் உருண்டைகளை ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்தால் தேவையற்ற எண்ணையை அவை உறிஞ்சி விடும்.

அதன் பின்னர் சூடான மட்டன் கோலா உருண்டைகளை உங்கள் வீட்டாருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் நீ என்று போட்டு போட்டு சாப்பிடுவார்கள்.

புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்

—                                                                                                                

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Food & Nightlife