
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை இந்த பிக் பாஸ் சீசன் முழுக்க காதல் சீசன் ஆகவே மாறி இருக்கிறது. கவினுக்காக கன்னத்தில் ஹார்டின் போட்டு காதல் சீசனை ஆரம்பித்து வைத்த அபிராமி ஒரே வாரத்தில் முகேன் பக்கம் தனது மனதை திருப்பிக் கொண்டார்.
கவின் விஷயங்கள் சர்ச்சைகளோடு நகர்ந்து கொண்டிருக்கிறது. கவினின் வார்த்தைகள் படி சிறு பெண்ணான லாஸ்லியா சில உணர்வுகளில் இருந்து தன்னை வெளிக்கொணர்வது எப்படி என்று திக்கித் திணறி கொண்டிருக்கிறார்.
தர்ஷன் ஷெரின் ப்ரியம் என்பது அளவான எல்லைக்குள் அநாகரிகம் இல்லாமல் நடந்து வருகிறது. தர்ஷனுக்கு காதலி இருப்பது அனைவருக்கும் தெரிந்திருப்பதால் இது பற்றி யாரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. ஷெரின் தனக்குள் ஏற்படும் உணர்வுகளை அழகாகவே கட்டுப்படுத்திக் கொண்டு எல்லை மீறாமல் நட்புடன் பழகி வருகிறார்.
அடுத்தவர் காதலனை காதலிக்கும் லாஸ்லியா மற்றும் அபிராமி இந்த உலகிற்கு சொல்ல வருவது என்ன ?
Youtube
அபிராமி தனக்கும் முகேனுக்கும் இடையிலான உறவை நட்பிற்கும் மேல் என்று நீயா நானா போட்டியின் போது சொல்லி விட்டார். முகேன் அங்கேயே அதனை மறுத்து இது நட்பு மட்டுமே என்று விளக்கம் அளித்தார். அன்றில் இருந்து இன்று வரை அபிராமியின் காதல் டார்ச்சர்கள் முகேனை தர்மசங்கடத்தில் நெளிய வைக்கிறது.
இதனிடையில் கமல்ஹாசன் வந்த ஒரு வாரத்தில் அபிராமி அனைவர் முன்னிலையிலும் தனது ஹீரோ முகேன் தான் என்று வழிந்தார். அப்போதே சாண்டியிடம் அது பற்றிய தன்னிலை விளக்கத்தை முகேன் (muken) கூறும்போது தனது காதலி பெயரையும் சேர்த்தே கூறினார்.
Youtube
தான் ஏற்கனவே நதியா என்கிற பெண்ணை காதலிப்பதாகவும் அது பற்றி அபிராமியிடம் எச்சரித்து சொல்லி விட்டதாகவும் நாம் நண்பர்களாக இருப்போம் என்று கூறியதாகவும் சாண்டி இடம் முகேன் கூறினார். என்னைக் காதலித்தால் இறுதியில் நீ தான் கஷ்டப்படுவாய் என அபிராமியிடம் முகேன் கூறியும் அபிராமி இப்படி பேசுவதாக முகேன் வருத்தப்பட்டது தெரிந்தது.
இந்நிலையில் முகேன் கூறிய அந்தக் காதலியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இதனைப் பற்றி முகேனின் அம்மாவும் ஒரு தனியார் சேனலில் பேட்டி அளிக்கும்போது கூறி இருக்கிறார். அவன் நதியா என்கிற பெண்ணுடன் பழகுவது தெரியும். அந்தக் காதலி அவள்தானா என்பதை அவன் இன்னும் என்னிடம் கூறவில்லை என்று கூறி இருக்கிறார்.
முகேன் தனது காதலி என்று சொல்லும் நதியா ஆல்பம் மற்றும் குறும்படங்களில் நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதக் காதல் கதையை முகேன் வெளியில் வந்து சொல்லும்போது தான் நாம் தெரிந்து கொள்ள முடியும்.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
Read More From Bigg Boss
லாஸ்லியா காதலுக்கு ஓகே சொன்ன அப்பா..ஒரே ஒரு கண்டிஷன் தானாம்!தோழி மூலம் வெளியான ரகசியம்!
Deepa Lakshmi
அந்த விடிகாலை ரொமான்ஸ்.. அது யாருக்குத்தான் பிடிக்காது ! அது எவ்வளவு நன்மைனு தெரியணுமா!
Deepa Lakshmi
கவின் – லாஸ்லியா பற்றி நான் பயந்தது இதுதான்.. ரகசியத்தை வெளிப்படுத்திய சேரன்..
Deepa Lakshmi