Beauty

அழகான மெஹந்தி டிசைன்ஸ் வீட்டிலிருந்து வரைவது எப்படி?

Mohana Priya  |  Apr 21, 2019
அழகான மெஹந்தி டிசைன்ஸ் வீட்டிலிருந்து வரைவது எப்படி?

பல பெண்களுக்கு மெஹந்தி வைத்துக்கொள்ள மிகவும் பிடிக்கும், ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வகையான மெஹந்தி(mehendi) டிசைன்ஸ் பிடிக்கும், சில பெண்கள் கைகள் முழுவதும் மெஹந்தி வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள், சில பெண்கள் சாதாரணமாக அதாவது சிம்பிள் மெஹெந்தி டிசைன் போட்டுக்கொள்ள ஆசைப்படுவார்கள். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதம் என்று கூட சொல்லலாம். அந்த அந்த வகையில் இந்த பகுதில் சிம்பிள் மெஹந்தி(mehendi) டிசைன், சூப்பர் மெஹந்தி டிசைன் (simple new mehendi designs), எளிய மெஹந்தி(mehendi) டிசைன் (easy mehendi designs), அரபிக் மெஹந்தி டிசைன் என்று பலவகையான மெஹந்தி டிசைன் உள்ளது. இவற்றில் உங்கள் கைகளுக்கு அழகு தரும் மெ   ஹந்தி டிசைன்ஸ் எப்படி போடுவது என்பதை இங்கு பார்ப்போம்.

முழங்கையில் கீழ் பகுதியில் படத்தில் உள்ளது போல் இரு கோடுகள வரைந்து அதன் மேல் கொக்கி போன்ற டிசைன்ஸ் வரையவும்.

அதன் பிறகு இரு கோடுகளும் இணையும் இடத்தில் ஒரு கொக்கி டிசைளை வரைந்து அதைச் சுற்றிலும் படத்தில் உள்ள டிசைனை வரையவும்.


அதற்கடுத்து ஒரு மாங்காய் வரைந்து அதன் மேல் பகுதியில் அடுக்கடுக்காக இதே போன் டிசைன் வரைந்து அதனுள் விருப்பமான டிசைன்ஸ் வரைந்து நிரப்பவும்.

பின் அந்த டிசைனை சுற்றிலும் நெருக்கமாக கொக்கி டிசைன்ஸ் வரையவும்.

கொக்கி டிசைனைத்த தொர்ந்து ஒரு வட்டம் வரைந்து அதனுள்ளே கட்டங்கள் வரைந்து நிரப்பவும்.

பின்பு அதன் இரு புறமும் இதே போல் மாங்காய் வரைந்து அதனுள்ளே விருப்பமான டிசைன்ஸ் வரையவும். பின் அந்த டிசைனிலிருந்து உள்ளங்கை தொடங்கும் வரை புள்ளகள், கோடுகள் மற்றும் கொக்கி டிசைன்ஸ் வரைந்து நிரப்பவும்.

அதன் பின் உள்ளங்கையின் தொடக்கத்தில் கோடுகள் வரையவும். அதனைத் தொடர்ந்து கட்டை விரலின் கீழ் பகுதியில் ஒரு மாங்காய் வரைந்து அதனுள் விருப்பமான டிசைன்ஸ் வரைந்து நிரப்பவும்.

படத்தில் உள்ள டிசைனை கட்டை விரலில் வரையவும். அதன் கீழ் பகுதியில் இதே போல் டிசைன் வரையவும். பின் ஒன்றன் மேல் ஒன்றாக வருவது போல் மாங்காய் டிசைன்ஸ் வரைந்து அதனுள் விருப்பமான டிசைன்ஸ் வரையவும். மீதமுள்ள இடத்தில் நெருக்கமாக கொக்கி டிசைன்ஸ் வரையவும்.

ஆள் காட்டி விரலில் டிசைன்ஸ் வரையவும் மற்ற விரல்களிலும் இதே டிசைளை வரைந்து முடிக்கவும். இப்போது பாருங்கள் உங்கள் கையை அருமையான பிரைடல் மெஹந்தி டிசைன்(mehendi) உங்கள் கையில் இருக்கும்.


இதற்காக நீங்கள் பார்லர் போக வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வீட்டில் இருந்தவாரே உங்களுக்கு ஏற்ற அழகாக மெஹந்தி(mehendi) டிசைன்களை கைகளில் வரைந்து உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போன்று உங்களை அழகு படுத்திக் கொள்ளுங்கள்.

வயதில் குறைவான நடிகர்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நடிகைகள்

ஆணுறையை(condom) பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்!

வீட்டிலேயே தக்காளி பேஷியல் செய்துக்கொள்வது எப்படி

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Beauty