திருமணம் என்பது இறைவனின் முடிச்சு என்பதில் மறுமொழி எதும் கிடையாது. இல்லாவிட்டால் திருமணம் நடந்தும் நீதிமன்ற வாசலில் நிற்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்த போதும் திருமணம் நடக்க வேண்டும் என்று கோயில் வாசலில் நிற்பவர்களின் எண்ணிக்கை அதை விட அதிகமாக இருப்பது சாத்தியமாகி இருக்காது.
30களை சிங்கிளாக கடப்பவர்கள் பாடு சமூகத்தில் சொல்லி மாளாது. பொருளாதாரம் இலக்குகளை அடைதல் போன்றவற்றை விட அவர்கள் சந்திக்கும் மிக பெரிய சிக்கல் இன்னும் திருமணம் ஆகவில்லையா என்பதுதான்.
கடிவாளம் கட்டிய குதிரை போல பயணிப்பவர்கள் வேலை கிடைத்த உடன் திருமணம் பற்றி யோசிப்பார்கள். அதுவரைக்கும் அவர்கள் அறியாத ஒன்று திருமணத் தடை. அதன் பின்னர் கோயில்களில் தர்காக்களில் தேவாலயங்களில் அவர்கள் பிரார்த்தனைகளை வைத்து விட்டு காத்திருப்பார்கள்.
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் !
கோயிலின் கோபுரத்தை தன்னுடைய அடையாளமாக கொண்டிருக்கும் தமிழ்நாடு பல்வேறு அதிசய கோயில்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. தமிழர்களை பொறுத்தவரை சுற்றுலா என்பது கோயில்களோடு கலந்த ஒன்றுதான். தெய்வீகத்தோடு தங்கள் பயண சந்தோஷங்களையும் இணைத்து கொண்டு விடுமுறை இடைவெளிகளில் வரம் வாங்கி வருபவர்கள் தமிழர்கள்.
அவற்றில் ஒன்றுதான் நாம் அடுத்து குறிப்பிட போகும் கோயில். காலம் கடந்தும் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் இந்த கோயிலுக்கு சென்று ஒருமுறை வழிபட ஒரே வருடத்தில் திருமணம் நடந்து விடும் என்கிறார்கள்.
திருவேள்விக்குடி எனும் ஊரில் கல்யாண சுந்தரேஸ்வரர் எனப்படும் இந்த கோயில்தான் நடக்காத திருமணங்களையும் நடத்தி வைத்திருக்கிறது. இக்கோயில் மணவாளேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
உலகை அமைத்த இறைவன் சிவனுக்கும் இறைவி பார்வதிக்கும் திருமணமத்திற்காக யாகம் நடந்த மணவாளேஸ்வரர் கோயில். இத்தலம் வேள்வி வளர்த்த இடம் என்பதால் திரு வேள்விக்குடி என்று அழைக்கப்படுகிறது.
இங்கு வந்து உங்கள் திருமணத்திற்காக மனமுவந்து வேண்டி கொண்டு திரும்பினாள் ஒரே வருடத்தில் உங்களுக்கு திருமணம் நடப்பதாக இங்குள்ள குருக்கள் கூறுகிறார். அப்படி நடந்து தங்கள் நன்றியை கடவுளிடம் காட்ட அதிக மணமக்கள் இங்கே வந்த வண்ணம் இருப்பதே இதற்கான சாட்சி.
30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் இங்கே சென்று வழிபட 3 மாதங்களில் திருமணம் நடந்து விடும் என்று நம்பப்படுகிறது. இக்கோயில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் என்றும் அழைக்கப்படுகிறது. கீழ கபிலஸ்தலம் எனும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
திருமணம் ஆகாதவர்கள் கன்னி பெண்கள் இங்கே சென்று வழிபட்டால் 90 நாட்களில் திருமணம் நடப்பதாக கூறப்படுகிறது. கண்ணாடி வளையல்களை இறைவன் இறைவிக்கு மாலையாக அணிவிக்க வேண்டும். இதுதான் வேண்டும் முறையாகும். அதன் பின்னர் அதனை பிரசாதமாக மற்ற பெண்களுக்கு வழங்க வேண்டும். இதனால் விரைவில் திருமணம் கைகூடும். மனதில் விரும்பியவரை மணப்பீர்கள்.
இக்கோயிலின் இறைவன் ஏகாம்பரேஸ்வரர் இறைவை காமாட்சி அம்பிகை ஆவார். காஞ்சிபுரத்தில் உள்ள குடி இறைவனின் பெயர். காஞ்சிபுரத்தில்தான் இறைவன் திருமணம் நடந்தது. அதனால் அந்த இறைவனுக்கும் ஏகாம்பரேஸ்வரர் என்கிற பெயர்தான் உள்ளது.
காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் இக்கோயில் திறந்திருக்கும், தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ள பாபநாசம் ஊரில் இருந்து 2கிமீ தொலைவில் கீழ கபிஸ்தலம் எனும் இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.
நமக்கானவற்றை சரியான நேரத்தில் நல்கும் தாயான இறைவனை நம்புங்கள். நன்மை மட்டுமே நடைபெறும். (Sometimes Marriages are made in temple)
புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.
Read More From Family
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi